Close Menu
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
What's Hot

ஸ்ரீலங்கன் எயர்லைன்ஸ் விமானக் கொள்வனவு முறைகேடு: நாமல் ராஜபக்ஷவை சந்தேகநபராகப் பெயரிட நடவடிக்கை

September 14, 2026

வெலிக்கடை சிறைச்சாலைக்குள் காலணிகளில் போதைப்பொருள் கடத்த முயன்ற கட்டுப்பாட்டாளர் கைது

September 14, 2026

கல்வியில் எவரும் கைவிடப்பட இடம் அளிக்கப்படமாட்டாது -பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய

September 14, 2026
Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram
Malayagam.lk
Subscribe
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
Malayagam.lk
Home » உலக தடகள அல்டிமேட் சாம்பியன்ஷிப்’ தொடரின் ஈட்டி எறிதல் போட்டியில் இலங்கையின் ருமேஷ் தரங்க தங்கப் பதக்கத்தை வென்றுள்ளார்
Breaking

உலக தடகள அல்டிமேட் சாம்பியன்ஷிப்’ தொடரின் ஈட்டி எறிதல் போட்டியில் இலங்கையின் ருமேஷ் தரங்க தங்கப் பதக்கத்தை வென்றுள்ளார்

ThanaBy ThanaSeptember 14, 2026No Comments1 Min Read
Facebook Twitter WhatsApp Email Telegram
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

உலக தடகள அல்டிமேட் சாம்பியன்ஷிப்’ (World Athletics Ultimate Championship) தொடரின் ஈட்டி எறிதல் போட்டியில் இலங்கையின் ருமேஷ் தரங்க தங்கப் பதக்கத்தை வென்றுள்ளார்.

உலகச் சிறந்த தடகள வீரர்கள் பங்கேற்ற இந்தப் போட்டி ஹங்கேரியின் புடாபெஸ்ட் நகரில் இன்று (13) நடைபெற்றது.

இப்போட்டி இலங்கை நேரப்படி இன்று இரவு 9.40 மணிக்கு ஆரம்பமானது.

உலகின் முதன்மை ஈட்டி எறிதல் வீரரான ருமேஷ் தரங்க இந்தப் போட்டியில் 91.09 மீற்றர் தூரம் எறிந்து தங்கப் பதக்கத்தை வென்று இலங்கைக்கு பெருமை சேர்த்தார்.

அவர் இந்த ஆண்டில் 92.62 மீற்றர் தூரம் எறிந்து உலகச் சாதனையை நிலை நாட்டியிருந்தார்.

சமீபத்தில் ‘டைமண்ட் லீக்’ ஈட்டி எறிதல் சாம்பியன் பட்டத்தை வென்ற ருமேஷிற்கு, ஜெர்மனியின் ஜூலியன் வெபர் முக்கிய சவாலாக இருப்பார் என எதிர்பார்க்கப்பட்டது.

அவர் ஐரோப்பிய தடகள சாம்பியன்ஷிப்பில் 90.4 மீற்றர் தூரம் எறிந்து புதிய போட்டிச் சாதனையைப் படைத்திருந்தார்.

எவ்வாறாயினும் இன்றைய போட்டியில் ஜூலியன் வெபர் 85.89 மீட்டர் தூரம் எறிந்திருந்து மூன்றாம் இடத்தை கைப்பற்றியிருந்தார்.

இவர்களைத் தவிர, ஒலிம்பிக் சாம்பியனான பாகிஸ்தானின் அர்ஷத் நதீம் 81.49 மீட்டர் தூரம் எறிந்திருந்தார்.

உலகத் தரவரிசையில் முன்னிலையில் உள்ளவர்கள், ஒலிம்பிக், உலக சாம்பியன்ஷிப் மற்றும் டயமண்ட் லீக் போன்ற தொடர்களில் வெற்றி பெற்ற சிறந்த வீரர்களுக்கு மட்டுமே வாய்ப்பு அளிக்கப்படும் இத்தொடர் கடந்த 11 ஆம் திகதி தொடங்கியதுடன், இன்று இறுதிப்போட்டி இடம்பெற்றிருந்தது.

இத்தொடரில் ஒரு போட்டியில் வெற்றி பெறும் வீரர் அல்லது வீராங்கனைக்கு 150,000 அமெரிக்க டொலர்கள் பரிசாக வழங்கப்படும்.

மேலும், 2 ஆம் இடம் முதல் 8 ஆம் இடம் வரை பெறும் வீரர்களுக்கும் பணப்பரிசுகள் வழங்கப்படுவதுடன், 8 ஆம் இடம் பெறும் வீரருக்கு 10,000 அமெரிக்க டொலர்கள் பரிசாகக் கிடைக்கவுள்ளது.

Share. Facebook Twitter WhatsApp Email LinkedIn Telegram
Thana

    Related Posts

    ஸ்ரீலங்கன் எயர்லைன்ஸ் விமானக் கொள்வனவு முறைகேடு: நாமல் ராஜபக்ஷவை சந்தேகநபராகப் பெயரிட நடவடிக்கை

    September 14, 2026

    பலத்த மின்னல் தாக்கங்கள் குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் முன்எச்சரிக்கை

    September 14, 2026

    சீதை அம்மன் ஆலயத்திற்கு முன் தொடர்கதையாகும் பாதசாரிகள் கடவையில் இடம் பெறும் விபத்துகள்..

    September 12, 2026

    மகளிர் ஆசியக் கிண்ண கிரிக்கெட் தொடரின் இறுதி போட்டிக்கு இலங்கை அணி

    September 12, 2026
    Editors Picks

    ஸ்ரீலங்கன் எயர்லைன்ஸ் விமானக் கொள்வனவு முறைகேடு: நாமல் ராஜபக்ஷவை சந்தேகநபராகப் பெயரிட நடவடிக்கை

    September 14, 2026

    வெலிக்கடை சிறைச்சாலைக்குள் காலணிகளில் போதைப்பொருள் கடத்த முயன்ற கட்டுப்பாட்டாளர் கைது

    September 14, 2026

    கல்வியில் எவரும் கைவிடப்பட இடம் அளிக்கப்படமாட்டாது -பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய

    September 14, 2026

    உலக தடகள அல்டிமேட் சாம்பியன்ஷிப்’ தொடரின் ஈட்டி எறிதல் போட்டியில் இலங்கையின் ருமேஷ் தரங்க தங்கப் பதக்கத்தை வென்றுள்ளார்

    September 14, 2026

    ஸ்ரீலங்கன் எயர்லைன்ஸ் விமானக் கொள்வனவு முறைகேடு: நாமல் ராஜபக்ஷவை சந்தேகநபராகப் பெயரிட நடவடிக்கை

    September 14, 2026

    வெலிக்கடை சிறைச்சாலைக்குள் காலணிகளில் போதைப்பொருள் கடத்த முயன்ற கட்டுப்பாட்டாளர் கைது

    September 14, 2026

    கல்வியில் எவரும் கைவிடப்பட இடம் அளிக்கப்படமாட்டாது -பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய

    September 14, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    © 2026 Malayagam.lk. Designed by Gcloud.

    Type above and press Enter to search. Press Esc to cancel.