கொழும்பு, களுத்துறை மற்றும் கேகாலை ஆகிய மாவட்டங்களின் பல பகுதிகளுக்கு முதலாம் கட்ட மண்சரிவு விழிப்புணர்வு அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.
இன்று காலை 10 மணி அளவில், தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தினால் இந்த அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
இந்த எச்சரிக்கையானது, நாளை காலை 10 மணி வரை, அதாவது அடுத்த 24 மணித்தியாலங்களுக்குச் செல்லுபடியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
- கொழும்பு மாவட்டம்: சீதாவக்க பிரதேச செயலகப் பிரிவு மற்றும் அதனைச் சூழவுள்ள பகுதிகள்.
- களுத்துறை மாவட்டம்: தொடங்கொட, புளத்சிங்ஹல, பேருவளை, இங்கிரிய, மத்துகம, பாலிந்தநுவர மற்றும் வலல்லாவிட்ட ஆகிய பகுதிகள்.
- கேகாலை மாவட்டம்: வரகாப்பொல மற்றும் ருவன்வெல்ல ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகள் மற்றும் அதனைச் சூழவுள்ள பகுதிகள்.
தொடர் மழைக் காரணமாக இந்தப் பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் மண்சரிவு அபாயம் குறித்து அவதானமாக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர். அத்துடன், ஆபத்தான சூழ்நிலைகள் ஏற்படும் பட்சத்தில் உடனடியாகப் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறு தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் அனர்த்த முகாமைத்துவப் பிரிவுகள் கேட்டுக்கொண்டுள்ளன.
