Close Menu
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
What's Hot

முன்னாள் முதல் பெண்மணி ஷிராந்தி ராஜபக்ஷவுக்கு நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவு அழைப்பு!

October 6, 2026

தோட்டத் தொழிலாளர்களை ‘கள்ளத்தோணி’ எனக் கூறும் அதிகாரம் எவருக்கும் இல்லை! – இ.தொ.கா தலைவர் செந்தில் தொண்டமான் கடும் கண்டனம்-

October 5, 2026

மலையகப் ரயில் சேவை பாதிப்பு: ‘டிட்வா’ புனரமைப்பின் பின் பயணித்த முதலாவது ரயிலே தடம் புரண்டது!

October 5, 2026
Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram
Malayagam.lk
Subscribe
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
Malayagam.lk
Home » உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் வழக்கு: 15 பேருக்கு 220 ஆண்டுகள் சிறைத்தண்டனை!
Breaking

உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் வழக்கு: 15 பேருக்கு 220 ஆண்டுகள் சிறைத்தண்டனை!

ThanaBy ThanaSeptember 23, 2026No Comments1 Min Read
Facebook Twitter WhatsApp Email Telegram
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

2019ஆம் ஆண்டு இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பில் தொடரப்பட்ட வரலாற்றுச் சிறப்புமிக்க வழக்கின் இறுதித் தீர்ப்பை, கொழும்பு நிரந்தர மூவர் அடங்கிய மேல்நீதிமன்ற நீதிபதிகள் குழாம்  (22) அறிவித்துள்ளது.

​நீதிபதிகள் நவரத்ன மாரசிங்க, ராமநாதன் கண்ணன் மற்றும் சுஜீவ நிஸ்சங்க ஆகியோர் அடங்கிய குழாம் இந்தத் தீர்ப்பை வழங்கியுள்ளது.

​இவ்வழக்கில் குற்றம் சாட்டப்பட்டிருந்த 24 பிரதிவாதிகளில் 15 பேர் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டு, அவர்களுக்குத் தலா 220 ஆண்டுகள் கடூழியச் சிறைத்தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. அதேவேளை, போதிய சாட்சியங்கள் இன்மையால் 9 பேர் அனைத்துக் குற்றச்சாட்டுகளிலிருந்தும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

​நௌஃபர் மௌலவி உள்ளிட்ட பிரதிவாதிகளுக்கு எதிராகச் சதித்திட்டம் தீட்டியமை, அதற்கு உடந்தையாக இருந்தமை, இனவாதக் கருத்துகளைப் பரப்பியமை உள்ளிட்ட 23,270க்கும் மேற்பட்ட குற்றச்சாட்டுகளின் கீழ் சட்டமா அதிபரால் 8,900 பக்கங்களைக் கொண்ட குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

​269 பேர் உயிரிழந்து, 500க்கும் மேற்பட்டோர் காயமடைந்த இத்தாக்குதல் வழக்கில் 2,309 சாட்சிகள் சாட்சியமளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. இந்த வழக்கின் 17ஆவது சந்தேகநபரான யாசிம் பாவா அப்துல் ரவூப் விசாரணைகளின் போது உயிரிழந்துள்ளார்.

​தீர்ப்பு அறிவிக்கப்பட்டதை முன்னிட்டு, அசம்பாவிதங்களைத் தவிர்க்கும் முகமாகப் புதுக்கடை நீதிமன்ற வளாகத்தைச் சுற்றி பொலிஸார், விசேட அதிரடிப்படையினர், மோப்ப நாய்கள் மற்றும் நடமாடும் சிசிடிவி வாகனங்கள் அடங்கிய பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

Share. Facebook Twitter WhatsApp Email LinkedIn Telegram
Thana

    Related Posts

    முன்னாள் முதல் பெண்மணி ஷிராந்தி ராஜபக்ஷவுக்கு நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவு அழைப்பு!

    October 6, 2026

    மலையகப் ரயில் சேவை பாதிப்பு: ‘டிட்வா’ புனரமைப்பின் பின் பயணித்த முதலாவது ரயிலே தடம் புரண்டது!

    October 5, 2026

    பொதுபல சேனா அமைப்பின் பொதுச்செயலாளர் ஞானசார தேரர் பொலிஸாரால் கைது!

    October 3, 2026

    தலவாக்கலை பாமஸ்டன் தோட்டத்தில் மின்னல் தாக்கி ஒருவர் பரிதாபமாக உயிரிழப்பு!

    October 3, 2026
    Editors Picks

    முன்னாள் முதல் பெண்மணி ஷிராந்தி ராஜபக்ஷவுக்கு நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவு அழைப்பு!

    October 6, 2026

    தோட்டத் தொழிலாளர்களை ‘கள்ளத்தோணி’ எனக் கூறும் அதிகாரம் எவருக்கும் இல்லை! – இ.தொ.கா தலைவர் செந்தில் தொண்டமான் கடும் கண்டனம்-

    October 5, 2026

    மலையகப் ரயில் சேவை பாதிப்பு: ‘டிட்வா’ புனரமைப்பின் பின் பயணித்த முதலாவது ரயிலே தடம் புரண்டது!

    October 5, 2026

    பொதுபல சேனா அமைப்பின் பொதுச்செயலாளர் ஞானசார தேரர் பொலிஸாரால் கைது!

    October 3, 2026

    முன்னாள் முதல் பெண்மணி ஷிராந்தி ராஜபக்ஷவுக்கு நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவு அழைப்பு!

    October 6, 2026

    தோட்டத் தொழிலாளர்களை ‘கள்ளத்தோணி’ எனக் கூறும் அதிகாரம் எவருக்கும் இல்லை! – இ.தொ.கா தலைவர் செந்தில் தொண்டமான் கடும் கண்டனம்-

    October 5, 2026

    மலையகப் ரயில் சேவை பாதிப்பு: ‘டிட்வா’ புனரமைப்பின் பின் பயணித்த முதலாவது ரயிலே தடம் புரண்டது!

    October 5, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    © 2026 Malayagam.lk. Designed by Gcloud.

    Type above and press Enter to search. Press Esc to cancel.