வளிமண்டலவியல் திணைக்களத்தின் இயற்கை அனர்த்த முன்னெச்சரிக்கை நிலையம், ஆழம் கூடிய வங்காள விரிகுடாக் கடற்பரப்புகளுக்காக இன்று முற்பகல் 10 மணிக்குச் சிவப்பு எச்சரிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
வட ஆந்திரக் கடற்கரையைக் கடந்துள்ள ஆழமான தாழமுக்கம் தற்போது காங்கேசன்துறைக்கு வடகிழக்கே சுமார் 1,100 கிலோமீற்றர் தொலைவில் மையம் கொண்டுள்ளது. இதன் காரணமாகக் குறித்த கடற்பரப்புகளில் காற்றின் வேகம் மணித்தியாலத்துக்கு 70 கிலோமீற்றர் வரை அதிகரித்து வீசக்கூடுவதுடன், பலத்த மழையும் கடலில் பலத்த கொந்தளிப்பும் ஏற்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
எனவே, வட அகலாங்குகள் 10 முதல் 22 வரையிலான மற்றும் கிழக்கு நெட்டாங்குகள் 82 முதல் 90 வரையிலான கடற்பரப்புகளில் மறு அறிவித்தல் வரை மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபடுவதைத் தவிர்க்குமாறு கடற்றொழிலாளர்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள்.
