நுவரெலியா – சந்ததென்ன செல்லும் பாதையில் மரம் ஒன்று முறிந்து விழுந்ததில் அப்பகுதியூடான போக்குவரத்து தற்காலிகமாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் தகவல் கிடைத்த உடனடியாகச் செயற்பட்ட நுவரெலியா மாநகர சபையின் தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.
பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதோடு, போக்குவரத்தை சீரமைக்கும் நோக்கில் வீழ்ந்த மரத்தை அகற்றும் பணிகள் துரிதமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
பொதுமக்களின் பாதுகாப்பிற்கு முன்னுரிமை அளித்து மாநகர சபை இந்த உடனடி நடவடிக்கையை மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
