Close Menu
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
What's Hot

8 வயதில் 197 நாடுகளின் அமைவிடங்கள், தேசியக் கொடிகள் மற்றும் தலைநகரங்களை துல்லியமாக அடையாளம் காட்டி சோழன் உலக சாதனை படைத்த தமிழ் மாணவன்

September 28, 2026

செட்டியார் தெரு விவகாரம்: விசாரிக்கப்பட்ட தமிழ் இளைஞர்கள் அனைவரும் விடுதலை!

September 28, 2026

ஹட்டன் – பொகவந்தலாவை வீதியில் லொறியும், வேனும் நேருக்கு நேர் மோதி விபத்து.

September 26, 2026
Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram
Malayagam.lk
Subscribe
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
Malayagam.lk
Home » செட்டியார் தெரு விவகாரம்: விசாரிக்கப்பட்ட தமிழ் இளைஞர்கள் அனைவரும் விடுதலை!
Breaking

செட்டியார் தெரு விவகாரம்: விசாரிக்கப்பட்ட தமிழ் இளைஞர்கள் அனைவரும் விடுதலை!

ThanaBy ThanaSeptember 28, 2026Updated:September 28, 2026No Comments1 Min Read
Facebook Twitter WhatsApp Email Telegram
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

கொழும்பு-புறக்கோட்டை செட்டியார் தெருவில் அண்மையில் இடம்பெற்ற சம்பவங்களின் தொடர்ச்சியாக, பொலிஸ் விசாரணைக்காக அழைக்கப்பட்ட தமிழ் இளைஞர்கள் அனைவரும் எவ்வித தடுத்து வைப்புகளுமின்றி இன்று (செப்டம்பர் 27) விடுவிக்கப்பட்டுள்ளனர்.

​பாதிக்கப்பட்ட செட்டியார் தெரு வர்த்தகர்கள் மற்றும் இளைஞர்களின் உரிமைகளைப் பாதுகாக்க, ஆரம்பம் முதலே களமிறங்கிய மக்கள் பிரதிநிதிகள், வர்த்தகர்கள் மற்றும் சட்டத்தரணிகளின் கூட்டு முயற்சிக்குக் கிடைத்த வெற்றியாக இது பார்க்கப்படுகிறது.

​கடந்த செப்டம்பர் 24 ஆம் திகதி நகை திருட்டு விவகாரம் தொடர்பான விசாரணைக்காக வந்த பொலிஸார், இளைஞர் ஒருவர் மீது முறையற்ற விதத்தில் தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படுகிறது. இச்சம்பவத்தை நேரடியாகக் கண்ட செட்டியார் தெரு வர்த்தகர்களும் இளைஞர்களும் ஒன்றுகூடி, பொலிஸாரின் நடவடிக்கைக்கு எதிராகக் கண்டனப் போராட்டத்தை முன்னெடுத்தனர்.

​இதனைத் தொடர்ந்து, அப்பகுதியில் முறையற்ற விசாரணைகளும் தன்னிச்சையான கைதுகளும் இடம்பெற்று வந்ததால் செட்டியார் தெரு இளைஞர்கள் மற்றும் தொழிலதிபர்கள் மத்தியில் பெரும் அச்சமும் அதிருப்தியும் நிலவி வந்தது.

இந்த விவகாரத்தில் பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப், கொழும்பு மாநகர சபை உறுப்பினர்களான கே. டி. குருசுவாமி, பழ. புஷ்பநாதன், தேசிய மக்கள் சக்தியின் மாநகர சபை உறுப்பினர் ஸ்ரீகாந்த், அதன் அமைப்பாளர் சிவானந்தராஜா மற்றும் சட்டத்தரணி ஹெரோசன் குமார் ஆகியோருடன் செட்டியார் தெரு வர்த்தக பிரமுகர்களும் இணைந்து தொடர் நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.

​விதிமுறைகளை மீறி தன்னிச்சையாகக் கைது செய்வதோ, தடுத்து வைப்பதோ அல்லது விசாரணை நடத்துவதோ முற்றிலும் தவிர்க்கப்பட வேண்டும் எனப் பாதுகாப்பு உயர்மட்ட அதிகாரிகள் மற்றும் புறக்கோட்டை பொலிஸாரிடம் இதன்போது வலியுறுத்தப்பட்டது.

கடந்த சில தினங்களில் இடம்பெற்ற விசாரணைகள் மற்றும் கைதுகள் குறித்து விரிவாக ஆராய்ந்து, இவ்விவகாரத்திற்கு நிரந்தரச் சட்டபூர்வத் தீர்வைப் பெற்றுக்கொள்ளும் நோக்கில், நாளை (செப்டம்பர் 28) பொலிஸ் உயர் அதிகாரிகளுடன் விசேட சந்திப்பொன்று இடம்பெறவுள்ளது.

Share. Facebook Twitter WhatsApp Email LinkedIn Telegram
Thana

    Related Posts

    8 வயதில் 197 நாடுகளின் அமைவிடங்கள், தேசியக் கொடிகள் மற்றும் தலைநகரங்களை துல்லியமாக அடையாளம் காட்டி சோழன் உலக சாதனை படைத்த தமிழ் மாணவன்

    September 28, 2026

    ஹட்டன் – பொகவந்தலாவை வீதியில் லொறியும், வேனும் நேருக்கு நேர் மோதி விபத்து.

    September 26, 2026

    சாதாரண தர மீள் திருத்தப் பெறுபேறுகள் வெளியாகின !

    September 26, 2026

    மலையகத்திற்குச் செல்லும் சுற்றுலாப் பயணிகள், பொதுமக்களுக்கு அவசர எச்சரிக்கை!

    September 26, 2026
    Editors Picks

    8 வயதில் 197 நாடுகளின் அமைவிடங்கள், தேசியக் கொடிகள் மற்றும் தலைநகரங்களை துல்லியமாக அடையாளம் காட்டி சோழன் உலக சாதனை படைத்த தமிழ் மாணவன்

    September 28, 2026

    செட்டியார் தெரு விவகாரம்: விசாரிக்கப்பட்ட தமிழ் இளைஞர்கள் அனைவரும் விடுதலை!

    September 28, 2026

    ஹட்டன் – பொகவந்தலாவை வீதியில் லொறியும், வேனும் நேருக்கு நேர் மோதி விபத்து.

    September 26, 2026

    சாதாரண தர மீள் திருத்தப் பெறுபேறுகள் வெளியாகின !

    September 26, 2026

    8 வயதில் 197 நாடுகளின் அமைவிடங்கள், தேசியக் கொடிகள் மற்றும் தலைநகரங்களை துல்லியமாக அடையாளம் காட்டி சோழன் உலக சாதனை படைத்த தமிழ் மாணவன்

    September 28, 2026

    செட்டியார் தெரு விவகாரம்: விசாரிக்கப்பட்ட தமிழ் இளைஞர்கள் அனைவரும் விடுதலை!

    September 28, 2026

    ஹட்டன் – பொகவந்தலாவை வீதியில் லொறியும், வேனும் நேருக்கு நேர் மோதி விபத்து.

    September 26, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    © 2026 Malayagam.lk. Designed by Gcloud.

    Type above and press Enter to search. Press Esc to cancel.