எயார்பஸ் விமானக் கொள்வனவு கொடுக்கல் வாங்கல் தொடர்பான வழக்கில், நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவை எதிர்வரும் அக்டோபர் மாதம் 13 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ இன்று (29) காலை கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட போதே இந்நீதிமன்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
சர்ச்சைக்குரிய ‘கிரிஷ்’ (Krrish) நிறுவனத்துடனான கொடுக்கல் வாங்கல் தொடர்பான வழக்கு விசாரணைக்காகவும், எயார்பஸ் ஒப்பந்தம் தொடர்பில் முன்னெடுக்கப்பட்டு வரும் விசாரணைகளுக்காகவுமே அவர் இன்று நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.
இதேவேளை, குறித்த ‘கிரிஷ்’ கொடுக்கல் வாங்கல் சம்பவம் தொடர்பாக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கில், நாமல் ராஜபக்ஷ நான்காவது பிரதிவாதியாகப் பெயரிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
