பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரரைக் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ளது.
பொலிஸ்மா அதிபர் ஊடாக இந்தப் பிடியாணையை உடனடியாக அமுல்படுத்துமாறு நீதிமன்ற உத்தரவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதற்கமைய, பிரதிவாதியான கலகொடஅத்தே ஞானசார தேரரைக் கைது செய்து, எதிர்வரும் அக்டோபர் மாதம் 1 ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் பொலிஸ்மா அதிபருக்கு உத்தரவிட்டுள்ளது.
