எட்டு கோடி ரூபாய்க்கும் அதிக பெறுமதியான ‘ஐஸ்’ போதைப்பொருளுடன் தொழிலதிபர் ஒருவர் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினருக்குக் கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில் இக்கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
ரத்மலானை பகுதியைச் சேர்ந்த 34 வயதுடைய வர்த்தகர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
ஓமானில் இருந்து கட்டார் வழியாக கட்டுநாயக்கவை வந்தடைந்த இவரது பயணப் பொதியைச் சோதனையிட்டபோதே இப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
பிஸ்கட் மற்றும் சொக்லேட் உறைகளுக்குள் சூட்சுமமாக மறைத்து வைக்கப்பட்டிருந்த சுமார் 4 கிலோகிராம் எடையுடைய ‘ஐஸ்’ போதைப்பொருள் இதன்போது மீட்கப்பட்டுள்ளது.
சந்தேகநபர் நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதுடன், பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
