2025/2026 மதிப்பீட்டு ஆண்டிற்கான இறுதி வருமான வரியைச் செலுத்துவதற்கான கடைசித் திகதி இன்றாகும் (30) என உள்நாட்டு இறைவரித் திணைக்களம் வரிசெலுத்துவோருக்கு நினைவூட்டியுள்ளது.
கம்பனிகள், தனிநபர்கள் மற்றும் பங்குடைமைகள் சார்பில் வருமான வரி செலுத்தும் அனைத்து வரிசெலுத்துவோரும், கொடுப்பனவை மேற்கொள்ளும்போது 25260 எனும் கொடுப்பனவுக் காலக் குறியீட்டைப் (Payment Period Code) பயன்படுத்த வேண்டும் என அத்திணைக்களம் தெரிவித்துள்ளது.
உரிய வரி வகைக் குறியீடுகள் (Tax Type Codes) வருமாறு:
- கம்பனி வருமான வரி: வரி வகைக் குறியீடு 02
- தனிநபர் வருமான வரி: வரி வகைக் குறியீடு 05
- பங்குடைமை வருமான வரி: வரி வகைக் குறியீடு 09
வரிசெலுத்துவோர் இணையவழியாகவோ (Online) அல்லது இலங்கை வங்கியின் (Bank of Ceylon) எந்தவொரு கிளையிலும் கொடுப்பனவுகளைச் செலுத்த முடியும்.
குறிக்கப்பட்ட இறுதித் திகதிக்குப் பின்னர் மேற்கொள்ளப்படும் கொடுப்பனவுகளுக்கு வட்டியும் தண்டப்பணமும் அறவிடப்படும் என எச்சரித்துள்ள உள்நாட்டு இறைவரித் திணைக்களம், உரிய வரிக் கொடுப்பனவுகளை இன்றைக்குள் செலுத்தி முடிக்குமாறு வரிசெலுத்துவோரைக் கேட்டுக்கொண்டுள்ளது.
இது தொடர்பான மேலதிக விபரங்களை திணைக்களத்தின் 1944 என்ற உடனடித் தொலைபேசி இலக்கத்தை (Hotline) தொடர்புகொண்டு பெற்றுக்கொள்ளலாம்.
