Close Menu
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
What's Hot

பொகவந்தலாவையில் வேர்ல்ட் விஷன் நிறுவனத்தின் விசேட சிறுவர் மேம்பாட்டு நிகழ்வுகள்

September 30, 2026

இ.தொ.கா தலைவர் செந்தில் தொண்டமானுக்கு மலேசியாவில் கௌரவிப்பு!

September 30, 2026

சவுதியில் மரண தண்டனை எதிர்கொண்டுள்ள சிவராசா அனோஜனை விடுவிக்கக் கோரி கொழும்பில் விசேட உணவு தவிர்ப்பு போராட்டம்* 

September 30, 2026
Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram
Malayagam.lk
Subscribe
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
Malayagam.lk
Home » மலையக மக்களை இழிவாக விமர்சிப்பவர்கள்  அதனை நிறுத்திக்கொள்ள வேண்டும் என்கிறார் பிரதி அமைச்சர் பிரதீப்
Breaking

மலையக மக்களை இழிவாக விமர்சிப்பவர்கள்  அதனை நிறுத்திக்கொள்ள வேண்டும் என்கிறார் பிரதி அமைச்சர் பிரதீப்

ThanaBy ThanaSeptember 30, 2026No Comments2 Mins Read
Facebook Twitter WhatsApp Email Telegram
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

மலையக மக்களை இழிவாக விமர்சிப்பவர்கள்

அதனை நிறுத்திக்கொள்ள வேண்டும்

என்கிறார் பிரதி அமைச்சர் பிரதீப்

உண்மையில் மலையக மக்கள் தியாகிகள். பரம்பரை பரம்ரையாக கஸ்டத்தை அனுபவித்து, தோட்டத்தில் பிறந்து, தேயிலைச் செடிகளுக்கு தம்மை உரமாக்கிய அந்த மக்களைப் பார்த்து, இழிவாகப் பேசும் நபர்கள் இனிமேல் சமூக வலைத்தளங்களில் விமர்சிப்பதை நிறுத்திக்கொள்ள வேண்டும். உண்மையில் மனசாட்சி, மனிதநேயம் இருந்தால் அவ்வாறு பேசமாட்டீர்கள். என பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் அவர்கள் தெரிவித்தார்.

நேற்று (29.09.2026) ஊவாபரணம- அலகொல்ல தோட்டத்தில் 13 வருடங்களாக மண்சரிவு அதி உயர் வலயத்தில் வாழ்ந்த 51 குடும்பங்களுக்கு வீடுகளை அமைப்பதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வில் உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

தொடர்ந்து உரையாற்றிய பிரதி அமைச்சர்,

இன்று எமது மக்களைப் பார்த்து சிலர் இழிவாகப் பேசுகின்றனர். அவர்களுக்கு நான் ஒன்றைக் கூறுகின்றேன். 203 வருடங்களுக்கு முன்பு காடாக இருந்த பிரதேசங்களை அழித்து. இந்த நாட்டுக்கு அந்நிய செலாவணியை பெற்றுத் தரும் பெருந்தோட்ட பயிர்செய்கையில் ஈடுபட்டு, தமது உயிர்களை இழந்து, மண்ணை வளப்படுத்திய மக்களால் தான் நாடு வளம்பெற்றது.

அவர்களின் அந்நிய செலாவணியால் தான் இந்த நாட்டில் கல்வி கூடங்கள் உருவாக்கப்பட்டது. அதிலிருந்து வைத்தியர்கள், பொறியியலாளர்கள், சட்டத்தரணிகள், கல்விமான்களை உருவாக்கியவர்களே மலையக மக்கள் என்றார்.

மேலும் மலையக மக்களைப் பொறுத்தவரை வீடு என்பது எமது நெடுநாள் கனவு. இது சாதாரண வீடு அல்ல. எம்மைப் பொறுத்தவரை மிகப் பெரிய கனவு. எனவே வீடு என்பது சாதாரண செங்கல், சீமந்தால் கட்டப்படுவதல்ல எமது கனவு, கௌரவம்,எதிர்பார்ப்பு, சுயமரியாதை எல்லாவற்றுக்கும் மேலாக எமது காணியுரிமை. இவையெல்லாம் பெற்றுக்கொடுப்பது தான் இந்த வீட்டுத்திட்டத்தின் நோக்கம் என்றார்.

இந்த 10,000 வீட்டுத்திட்டமும் பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்களால் எமது மக்களுக்காக பாரதமக்களின் வரிப் பணத்தின் மூலமாக கொடுக்கப்பட்டுள்ளது.எனவே எப்போதும் எமக்கு உதவிக்கரம் நீட்டும் இந்தியாவுக்கு நன்றி கூற கடமைப்பட்டுள்ளோம் என்றார்.

Share. Facebook Twitter WhatsApp Email LinkedIn Telegram
Thana

    Related Posts

    பொகவந்தலாவையில் வேர்ல்ட் விஷன் நிறுவனத்தின் விசேட சிறுவர் மேம்பாட்டு நிகழ்வுகள்

    September 30, 2026

    சவுதியில் மரண தண்டனை எதிர்கொண்டுள்ள சிவராசா அனோஜனை விடுவிக்கக் கோரி கொழும்பில் விசேட உணவு தவிர்ப்பு போராட்டம்* 

    September 30, 2026

    எயார்பஸ் வழக்கு: நாமல் ராஜபக்ஷவுக்கு பிணை – வெளிநாடு செல்லத் தடை!

    September 30, 2026

    வருமான வரி செலுத்த இன்று கடைசித் திகதி: தவறினால் வட்டியும் அபராதமும்!

    September 30, 2026
    Editors Picks

    பொகவந்தலாவையில் வேர்ல்ட் விஷன் நிறுவனத்தின் விசேட சிறுவர் மேம்பாட்டு நிகழ்வுகள்

    September 30, 2026

    இ.தொ.கா தலைவர் செந்தில் தொண்டமானுக்கு மலேசியாவில் கௌரவிப்பு!

    September 30, 2026

    சவுதியில் மரண தண்டனை எதிர்கொண்டுள்ள சிவராசா அனோஜனை விடுவிக்கக் கோரி கொழும்பில் விசேட உணவு தவிர்ப்பு போராட்டம்* 

    September 30, 2026

    எயார்பஸ் வழக்கு: நாமல் ராஜபக்ஷவுக்கு பிணை – வெளிநாடு செல்லத் தடை!

    September 30, 2026

    பொகவந்தலாவையில் வேர்ல்ட் விஷன் நிறுவனத்தின் விசேட சிறுவர் மேம்பாட்டு நிகழ்வுகள்

    September 30, 2026

    இ.தொ.கா தலைவர் செந்தில் தொண்டமானுக்கு மலேசியாவில் கௌரவிப்பு!

    September 30, 2026

    சவுதியில் மரண தண்டனை எதிர்கொண்டுள்ள சிவராசா அனோஜனை விடுவிக்கக் கோரி கொழும்பில் விசேட உணவு தவிர்ப்பு போராட்டம்* 

    September 30, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    © 2026 Malayagam.lk. Designed by Gcloud.

    Type above and press Enter to search. Press Esc to cancel.