முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பாதுகாப்பு அதிகாரி மீது தாக்குதல் நடத்திய குற்றச்சாட்டில் தனியார் ஊடக நிறுவனத்தின் ஒளிப்பதிவாளர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
நேற்று கோட்டை நீதவான் நீதிமன்ற வளாகத்திலிருந்து முன்னாள் ஜனாதிபதி வெளியேறியபோது இத்தாக்குதல் இடம்பெற்றுள்ளது. காயமடைந்த அதிகாரி சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் தொடர்பாக கொம்பனித்தெரு பொலிஸ் நிலையத்திற்கு அழைக்கப்பட்ட குறித்த ஒளிப்பதிவாளர் விசாரணைகளின் பின்னர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதேவேளை, இத்தாக்குதல் சம்பவம் குறித்து சுதந்திரமான விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என ஐக்கிய தேசியக் கட்சி இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் வலியுறுத்தியுள்ளது.
