உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் விசாரணை தொடர்பில், தம்மைப் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் கைது செய்து தடுத்து வைப்பதைத் தடுக்குமாறு கோரி, முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தாக்கல் செய்த ரிட் மனுவை மேன்முறையீட்டு நீதிமன்றம் நிராகரித்துள்ளது.
குறித்த மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளாமலேயே நீதிமன்றம் இந்நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.
மேன்முறையீட்டு நீதிமன்றத் தலைவர் நீதியரசர் ரொஹாந்த அபேசூரிய மற்றும் நீதியரசர் சரத் திஸாநாயக்க ஆகியோர் அடங்கிய நீதியரசர்கள் குழாமினால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
