இயற்கைப் பேரழிவால் பாதிக்கப்பட்டு முடங்கியிருந்த மலையக மார்க்க ரயில் சேவைகள், சுமார் 10 மாத கால இடைவெளிக்குப் பிறகு இன்று (02) முதல் மீண்டும் ஆரம்பிக்கப்படுவதாக இலங்கை ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது.
இதன்படி, முதற்கட்டமாக கொழும்பிலிருந்து பேராதனை மற்றும் கம்பளை வரையான ரயில் சேவைகள் இன்று முதல் வழக்கம்போல் இயக்கப்படவுள்ளதாக ரயில்வே திணைக்களத்தின் போக்குவரத்து அதிகாரி அசங்க சமரசிங்க தெரிவித்தார்.
கடந்த ஆண்டு வீசிய ‘டித்வா’ சூறாவளி காரணமாக மலையக மார்க்க ரயில் பாதைகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டு போக்குவரத்து தடைப்பட்டிருந்தது. சீரமைப்புப் பணிகள் நிறைவடைந்ததைத் தொடர்ந்து, 10 மாதங்களுக்குப் பிறகு இந்த மார்க்கத்தில் ரயில் சேவைகள் மீண்டும் வழமைக்குக் கொண்டுவரப்பட்டுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.
