மத்திய, சப்ரகமுவ, வடமத்திய, கிழக்கு, ஊவா மற்றும் தென் மாகாணங்களுக்கும், குருநாகல், யாழ்ப்பாணம், வவுனியா மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களுக்கும் கடுமையான மின்னல் தாக்கம் குறித்த எச்சரிக்கையை வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ளது.
இன்று காலை 11:30 மணிக்கு வெளியிடப்பட்டுள்ள இந்த எச்சரிக்கை, நாளை அதிகாலை 1:00 மணி வரை செல்லுபடியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் பலத்த மின்னல் தாக்கம் மற்றும் காற்று வீசக்கூடும் என்பதால், பொதுமக்கள் மரங்களுக்கு அடியில் நிற்பதைத் தவிர்க்குமாறும், திறந்தவெளிகள் மற்றும் மின் சாதனப் பயன்பாடுகளைத் தற்காலிகமாகத் த தவிர்க்குமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
அவசர உதவிகளுக்கு உள்ளூர் அனர்த்த முகாமைத்துவ அதிகாரிகளைத் தொடர்புகொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
