தலவாக்கலை மற்றும் பம்பரக்கலை தோட்டங்களில் இன்று காலை இடம்பெற்ற குளவி தாக்குதல்களில் 8 தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தலவாக்கலை தோட்டத்தில் இன்று காலை 10.30 மணியளவில் இடம்பெற்ற குளவி கொட்டுச் சம்பவத்தில் மூவர் காயமடைந்து லிந்துலை பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதேவேளை, லிந்துலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பம்பரக்கலை தோட்டத்திலும் குளவி கொட்டியதில் மூன்று பெண்கள் உட்பட ஐந்து தொழிலாளர்கள் காயமடைந்து வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார்.
