பொகவந்தலாவ கெசல்கமுவ ஓயாவில் தவறி விழுந்து 10 வயது மாணவன் உயிரிழப்பு!
பொகவந்தலாவ, கெசல்கமுவ ஓயாவில் தவறி விழுந்து 10 வயதுடைய பாடசாலை மாணவன் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொகவந்தலாவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பொகவந்தலாவ லின்போட் (Lynford) தோட்டப் பாடசாலையில் தரம் 5இல் கல்வி பயின்று வந்த மாணவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இன்று மதியம் தனது தாத்தாவுடன் கால்நடைகளுக்கான உணவு சேகரிக்கச் சென்றபோதே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
தாத்தா புல் வெட்டிக்கொண்டிருந்தபோது பேரனைக் காணாததால், அப்பகுதி மக்களின் உதவியுடன் கெசல்கமுவ ஓயாவில் தேடுதல் முன்னெடுக்கப்பட்டது. இதன்போது மாணவன் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளார்.
மீட்கப்பட்ட சடலம் பொகவந்தலாவ பிரதேச வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன், பிரேதப் பரிசோதனைக்காக டிக்கோயா ஆதார வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொகவந்தலாவ பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்
கௌசல்யா.
