Close Menu
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
What's Hot

எரிபொருள் விலை உயர்ந்தாலும் பேருந்து கட்டணங்களில் மாற்றமில்லை!

November 2, 2026

எரிபொருள் விலையேற்றத்தால் முச்சக்கர வண்டி கட்டணங்களை உயர்த்த தீர்மானம்!

November 2, 2026

கொஸ்லந்தை பகுதியில் சுரங்கத்திற்குள் சிக்கி இளம் குடும்பஸ்தர் பலி! 

November 2, 2026
Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram
Malayagam.lk
Subscribe
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
Malayagam.lk
Home » தலவாக்கலையில் குளவித் கொட்டு – இரு மாணவர்கள் உட்பட மூவர் வைத்தியசாலையில் அனுமதி!
Breaking

தலவாக்கலையில் குளவித் கொட்டு – இரு மாணவர்கள் உட்பட மூவர் வைத்தியசாலையில் அனுமதி!

ThanaBy ThanaNovember 2, 2026No Comments1 Min Read
Facebook Twitter WhatsApp Email Telegram
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

தலவாக்கலையில் குளவித் தாக்குதல் – இரு மாணவர்கள் உட்பட மூவர் வைத்தியசாலையில் அனுமதி!

 

தலவாக்கலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிரபல பாடசாலை ஒன்றுக்கு அருகில் குளவிக் கூடுகள் கலைந்து தாக்கியதில், இரு மாணவர்கள் உட்பட மூவர் பாதிக்கப்பட்டு லிந்துலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

 

குறித்த பாடசாலைக்கு மாணவர்கள் இன்று (02) காலை சமூகமளித்துக் கொண்டிருந்தபோது, காலை 7.30 மணியளவில் தலவாக்கலை ட்ரூப் தோட்டத்திற்கு அருகிலுள்ள பிரதான வீதியோரத்தில் அமைந்திருந்த குளவிக் கூடுகள் கலைந்து தாக்கியுள்ளன.

 

இதில் இரு மாணவர்களும் பெண் ஒருவரும் பாதிக்கப்பட்டு லிந்துலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு அவசர சிகிச்சைப் பிரிவில் (Emergency Care Unit) சிகிச்சை வழங்கப்பட்டு வருவதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

 

குறித்த பகுதியில் நீண்டகாலமாக குளவிக் கூடுகள் காணப்படுவதுடன், அண்மைக்காலமாக அவை கலைந்து மாணவர்கள் உள்ளிட்ட பொதுமக்களைத் தாக்கும் சம்பவங்களும் இடம்பெற்று வருகின்றன.

 

மேலும், தலவாக்கலை ட்ரூப் தோட்டத்திலிருந்து தலவாக்கலை பிரதான நகருக்குச் செல்லும் வீதியின் பல இடங்களிலும் இவ்வாறான குளவிக் கூடுகள் அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

இதனால் குறித்த வீதியைப் பயன்படுத்தும் மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் அச்சத்துடன் பயணிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

எனவே, மாணவர்கள் மற்றும் பொதுமக்களின் பாதுகாப்பைக் கருத்திற்கொண்டு, உரிய அதிகாரிகள் உடனடியாகத் தலையிட்டு குறித்த குளவிக் கூடுகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

கௌசல்யா

Share. Facebook Twitter WhatsApp Email LinkedIn Telegram
Thana

    Related Posts

    எரிபொருள் விலை உயர்ந்தாலும் பேருந்து கட்டணங்களில் மாற்றமில்லை!

    November 2, 2026

    எரிபொருள் விலையேற்றத்தால் முச்சக்கர வண்டி கட்டணங்களை உயர்த்த தீர்மானம்!

    November 2, 2026

    கொஸ்லந்தை பகுதியில் சுரங்கத்திற்குள் சிக்கி இளம் குடும்பஸ்தர் பலி! 

    November 2, 2026

    தீவிர சூறாவளியாக வலுப்பெறும் “முரசு”! இலங்கை வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அவசர எச்சரிக்கை

    November 2, 2026
    Editors Picks

    எரிபொருள் விலை உயர்ந்தாலும் பேருந்து கட்டணங்களில் மாற்றமில்லை!

    November 2, 2026

    எரிபொருள் விலையேற்றத்தால் முச்சக்கர வண்டி கட்டணங்களை உயர்த்த தீர்மானம்!

    November 2, 2026

    கொஸ்லந்தை பகுதியில் சுரங்கத்திற்குள் சிக்கி இளம் குடும்பஸ்தர் பலி! 

    November 2, 2026

    தலவாக்கலையில் குளவித் கொட்டு – இரு மாணவர்கள் உட்பட மூவர் வைத்தியசாலையில் அனுமதி!

    November 2, 2026

    எரிபொருள் விலை உயர்ந்தாலும் பேருந்து கட்டணங்களில் மாற்றமில்லை!

    November 2, 2026

    எரிபொருள் விலையேற்றத்தால் முச்சக்கர வண்டி கட்டணங்களை உயர்த்த தீர்மானம்!

    November 2, 2026

    கொஸ்லந்தை பகுதியில் சுரங்கத்திற்குள் சிக்கி இளம் குடும்பஸ்தர் பலி! 

    November 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    © 2026 Malayagam.lk. Designed by Gcloud.

    Type above and press Enter to search. Press Esc to cancel.