எரிபொருள் விலை அதிகரிப்பிற்கு இணையாக முச்சக்கர வண்டிகளுக்கான சவாரி கட்டணங்களை உயர்த்துவதற்குத் திட்டமிட்டுள்ளதாகத் தேசிய ஐக்கிய முச்சக்கர வண்டி ஓட்டுநர்கள் மற்றும் கைத்தொழிலாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இதன்படி, முதல் கிலோமீற்றருக்கான கட்டணத்தை 120 ரூபாவாகவும், இரண்டாவது கிலோமீற்றரிலிருந்து 100 ரூபாவாகவும் திருத்தியமைக்க யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவிற்குத் தெரியப்படுத்தவுள்ளதுடன், அங்கு சாதகமான பதில் கிடைக்காவிடின் கட்டாயமாகக் கட்டணத்தை உயர்த்த வேண்டிய நிலை ஏற்படும் என அச்சங்கத்தின் பிரதான செயலாளர் எல். ரோஹண பெரேரா தெரிவித்துள்ளார்.
