கொழும்பு – கண்டி பிரதான வீதியின் வரக்கபொல, மாஹேன பகுதியில் இன்று மாலை இடம்பெற்ற கொடூர வீதி விபத்தில் பெண் ஒருவர் உட்பட மூவர் உயிரிழந்துள்ளனர்.
கொழும்பில் இருந்து கண்டி நோக்கிச் சென்ற வான் ஒன்று, முந்திச் செல்ல முற்பட்ட வேளையில், எதிர்த்திசையில் வந்த இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான பேருந்துடன் நேருக்கு நேர் மோதியதிலேயே இந்த விபத்து சம்பவித்துள்ளது.
இவ்விபத்தில் படுகாயமடைந்த மேலும் நால்வர் வரக்கப்பொல வைத்தியசாலையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சம்பவத்தையடுத்து பேருந்தின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், காயமடைந்த வானின் சாரதியும் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார். வரக்கப்பொல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
