இருளை அகற்றி ஒளியை ஏந்தி, தீமைக்கு எதிராக நன்மை பெற்ற வெற்றியைக் குறிக்கும் தீபாவளித் திருநாளை முன்னிட்டு, இலங்கைக்கும் உலகெங்கிலும் வாழும் அனைத்து இந்து மக்களுக்கும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தமது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.
விளக்கேற்றுவதால் வீடுகள் ஒளிமயமாவதைப் போல, மனித உள்ளங்களிலுள்ள வெறுப்பு, பொறாமை மற்றும் அறியாமை என்னும் இருளைப் போக்கி, ஞானத்தினதும் கருணையினதும் ஒளியை ஏற்றுவதற்கு இந்நாள் சிறந்ததொரு வாய்ப்பை வழங்குகின்றது என பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையைப் போன்ற பல்லின, பல்சமய, பல்கலாசார நாட்டில், தீபாவளித் திருவிழா மக்களுக்கிடையிலான பரஸ்பர புரிந்துணர்வையும் நல்லிணக்கத்தையும் ஒற்றுமையையும் மேலும் உறுதிப்படுத்திக் கொள்ளக் கிடைத்த மாபெரும் சந்தர்ப்பமாகும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
பன்மைத்தன்மை நிறைந்த கலாசார உறவுகளைப் பலப்படுத்தி, இன, மத, சாதி பேதமின்றி ஒரே தாய்நாட்டின் மக்களாக முன்னோக்கிச் செல்வதற்கு இத்தீபாவளித் திருநாளில் அனைவரும் உறுதிபூண வேண்டும் எனப் பிரதமர் வலியுறுத்தியுள்ளார்.
