இந்தியக் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்திக்குக் குஜராத் – சூரத் நீதிமன்றம் 2 ஆண்டுக்கால சிறைத் தண்டனை விதித்துள்ளது.
2019ம் ஆண்டு நடைபெற்ற தேர்தல் கூட்டம் ஒன்றில் வைத்து, ‘எல்லா திருடர்களும் மோடி என்ற குடும்பப்பெயரை கொண்டிருக்கிறார்கள்’ என்ற கருத்தைத் தெரிவித்திருந்தார்.
ஊழல் மோசடி குற்றம் சுமத்தப்பட்டுள்ள நிரவ் மோடி மற்றும் லலித் மோடி போன்றவர்களுடன், பிரதமர் நரேந்திர மோடியின் பெயரை ஒப்பிட்டு அவர் வெளியிட்ட இந்த கருத்துக்கு எதிராக பிஜேபியின் சட்டமன்ற உறுப்பினர் புர்னேஷ் மோடி வழக்கு தாக்கல் செய்திருந்தார்.
இந்தவழக்கில் ராகுல் காந்தி மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டதை அடுத்து, அவருக்கு இரண்டு வருடகால சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
எவ்வாறாயினும் அவருக்கு உடனடியாக பிணை வழங்கப்பட்டதுடன், தண்டனை காலம் 30 நாட்களுக்கு ஒத்திவைக்கப்பட்டு, மேன்முறையீடு செய்வதற்கான அவகாசமும் வழங்கப்பட்டுள்ளது.
