அமெரிக்காவின் தெற்கு மற்றும் மத்திய மேற்கு பகுதிகளில் வெள்ளியன்று ஒரு சக்திவாய்ந்த புயல் தாக்கியுள்ளது.
இதன் காரணமாகக் குறைந்தது இருவர் உயிரிழந்ததுடன், மேலும் பலர் காயமடைந்ததாகச் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
புயல் காரணமாகக் குறித்த பகுதிகளில் அமைந்துள்ள பல கட்டிடங்களின் கூரைகள் இடிந்து வீழ்ந்துள்ளன.
அத்துடன் சுழல் காற்றில் சிக்கிய மரங்கள் வாகனங்கள் மற்றும் மின் கம்பங்களின் மீது முறிந்து வீழ்ந்துள்ளன.
சிக்காகோவில் இருந்து வடமேற்கே சுமார் 70 மைல் (113 கிமீ) தொலைவில் உள்ள பெல்விடேர் நகரில் ஏற்பட்ட சூறாவளியின் போது அப்பல்லோ திரையரங்கின் கூரை இடிந்து விழுந்ததில் ஒருவர் உயிரிழந்ததாகவும், 28 பேர் காயமடைந்ததாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
