டயகம- நுவரெலியா வீதியில் பஸ்ஸொன்று விபத்துக்குள்ளாகியுள்ளது.
(ரா. கவிஷான் – மெராயா)
டயகமவில் இருந்து நுவரெலியா நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேரூந்து இன்று காலை 06.40 மணியளவில் கௌலஹேனா பகுதியில் வாங்கியில் சாய்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
குறித்த பேரூந்தில் பயணித்த பயணிகளுக்கு எவ்வித பாதிப்புகளும் ஏற்படவில்லை என்று பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர். மேலும் இப்பேருந்து விபத்தின் காரணமாக பணிக்கு செல்லும் பயணிகள் பலரும் சிரமத்திற்க்கு உள்ளாகியுள்ளனர்.