Close Menu
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
What's Hot

நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சர் மற்றும் இந்திய உயர்ஸ்தானிகர் ஆகியோருக்கு இடையில் சந்திப்பு

July 28, 2026

ஜனாதிபதிக்கும் இலங்கை கிரிக்கெட் மறுசீரமைப்புக் குழுவிற்கும் இடையில் சந்திப்பு

July 28, 2026

நுவரெலியாவில் ஊழல் ஒழிப்புக்காக அரச அதிகாரிகளின் விழிப்புணர்வு நடைபவனி .

July 28, 2026
Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram
Malayagam.lk
Subscribe
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
Malayagam.lk
Home » வாழைப்பழ ஏற்றுமதி நாட்டின் பொருளாதாரத்தை முன்னேற்றும் புதிய வழியாக மாற்றம் …
Breaking

வாழைப்பழ ஏற்றுமதி நாட்டின் பொருளாதாரத்தை முன்னேற்றும் புதிய வழியாக மாற்றம் …

ThanaBy ThanaMay 4, 2023No Comments1 Min Read
Facebook Twitter WhatsApp Email Telegram
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

ஏற்றுமதியை இலக்காகக் கொண்டு அம்பிலிபிட்டிய மற்றும் செவனகல பிரதேசங்களில் வாழைப்பழம் செய்கை அதிகரித்துள்ளதால் இரண்டு வாழைப்பழம் பதப்படுத்தும் வலயங்களை நிறுவ விவசாய அமைச்சு தீர்மானித்துள்ளது.

தற்போது விவசாய அமைச்சின் கீழ் விவசாயத்துறை நவீனமயமாக்கல் திட்டத்தினால் ராஜாங்கனை மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய இரண்டு வாழை ஏற்றுமதி மாதிரிக் கிராமங்கள் நிறுவப்பட்டுள்ளன.

மேலும், செவனகல மற்றும் எம்பிலிபிட்டிய வாழை விவசாயிகளின் வேண்டுகோளுக்கு இணங்க இவ்வாழை ஏற்றுமதி மாதிரிக் கிராமத் திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கு விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர பணிப்புரை விடுத்துள்ளார்.

அத்துடன், செவனகல பிரதேசத்தில் 200 ஏக்கரில் கேவன்டிஷ் வாழை இனத்தையும், அம்பிலிபிட்டிய மற்றும் ஹம்பாந்தோட்டை பிரதேசங்களில் 400 ஏக்கரில் புளி வாழை இனத்தையும் பயிரிட திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த இரண்டு தோட்டங்களும் முதற்கட்டமாக பயிரிடப்பட்டு, பின்னர் விவசாயத் துறை நவீனமயமாக்கல் திட்டத்தில் 800 ஏக்கராக விரிவுபடுத்த திட்டமிட்டுள்ளது.

இதேவேளை, யாழ்ப்பாணத்தில் புளிவாழை திட்டத்தை இயற்கை பயிராக ஊக்குவிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இலங்கையின் முதலாவது கரிம புளி வாழை அறுவடை எதிர்வரும் சில நாட்களில் துபாய் சந்தைக்கு ஏற்றுமதி செய்யப்படவுள்ளது.

அறுவடை மற்றும் பதப்படுத்தல் நடவடிக்கை இன்று (03) முதல் ஆரம்பிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, ராஜாங்கனை புளி வாழை திட்டத்தில் இருந்து ஒவ்வொரு சனிக்கிழமையும் துபாய் சந்தைக்கு 12,500 கிலோ புளி வாழைப்பழம் ஏற்றுமதி செய்யப்படுகிறது.

இதேவேளை யாழ்ப்பாணத்தில் இருந்து வாரந்தோறும் 25,000 கிலோகிராம் கரிம புளி வாழைப்பழங்களை ஏற்றுமதி செய்வதற்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

தற்போது ராஜாங்கனை மற்றும் யாழ்ப்பாணத்தில் இரண்டு புளி வாழைப்பழங்களை ஏற்றுமதி செய்வதற்கான நிலையங்கள் நிறுவப்பட்டுள்ளன.

அத்துடன் எம்பிலிப்பிட்டிய மற்றும் செவனகல புளி மற்றும் கேவன்டிஷ் வாழை திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டதன் பின்னர் வாழை ஏற்றுமதி பதப்படுத்தும் நிலையத்தை பரவகும்புக அல்லது அதனை அண்மித்த பிரதேசங்களில் நிறுவ விவசாய துறை நவீனமயமாக்கல் திட்டத்திற்கு விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர பணிப்புரை வழங்கியுள்ளார்.

Share. Facebook Twitter WhatsApp Email LinkedIn Telegram
Thana

    Related Posts

    நீரைச் சிக்கனமாகப் பயன்படுத்துமாறு பொதுமக்களுக்கு வேண்டுகோள்: நீர் வழங்கல் சபை அறிவிப்பு

    July 28, 2026

    ஜனாதிபதி மாளிகைகளில் வெளிநபர்கள் எவரும் தங்கியிருக்கவில்லை என்பதுடன், அது முற்றிலும் பொய்யான செய்தியாகும்.

    July 25, 2026

    ரூ. 110 மில்லியன் கொக்கைனுடன் 79 வயது ஸ்பெயின் முதியவர் கட்டுநாயக்கவில் கைது!

    July 25, 2026

    கம்பளை-மகாவலி ஆற்றில் இருந்து ஆணின் சடலம் மீட்பு

    July 25, 2026
    Editors Picks

    நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சர் மற்றும் இந்திய உயர்ஸ்தானிகர் ஆகியோருக்கு இடையில் சந்திப்பு

    July 28, 2026

    ஜனாதிபதிக்கும் இலங்கை கிரிக்கெட் மறுசீரமைப்புக் குழுவிற்கும் இடையில் சந்திப்பு

    July 28, 2026

    நுவரெலியாவில் ஊழல் ஒழிப்புக்காக அரச அதிகாரிகளின் விழிப்புணர்வு நடைபவனி .

    July 28, 2026

    நீரைச் சிக்கனமாகப் பயன்படுத்துமாறு பொதுமக்களுக்கு வேண்டுகோள்: நீர் வழங்கல் சபை அறிவிப்பு

    July 28, 2026

    நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சர் மற்றும் இந்திய உயர்ஸ்தானிகர் ஆகியோருக்கு இடையில் சந்திப்பு

    July 28, 2026

    ஜனாதிபதிக்கும் இலங்கை கிரிக்கெட் மறுசீரமைப்புக் குழுவிற்கும் இடையில் சந்திப்பு

    July 28, 2026

    நுவரெலியாவில் ஊழல் ஒழிப்புக்காக அரச அதிகாரிகளின் விழிப்புணர்வு நடைபவனி .

    July 28, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    © 2026 Malayagam.lk. Designed by Gcloud.

    Type above and press Enter to search. Press Esc to cancel.