ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினை கொல்ல தாம் சதி செய்யவில்லை என யுக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஸெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.
ரஷ்ய ஜனாதிபதியை புட்டினை கொலை செய்ய 2 ஆளில்லா விமானங்களை அனுப்பியதாக கிரெம்ளின் குற்றம்சாட்டியதற்கு பதிலளிக்கும் வகையில் அவர் இவ்வாறு கூறினார்.
நேற்று (3) கிரெம்ளின் அருகே வந்த இரண்டு ஆளில்லா தாக்குதல் விமானங்களை சுட்டு வீழ்த்த ரஷ்ய படைகள் நடவடிக்கை எடுத்தது.
மின்னணு ரேடார் அமைப்பைப் பயன்படுத்தி விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதாக ரஷ்ய அதிகாரிகள் கூறினர்.
இந்த சம்பவத்திற்குப் பிறகு, யுக்ரைன் இதன் பின்னணியில் இருப்பதாக குற்றம் சாட்டப்பட்டது.
எவ்வாறாயினும், தனது படைகள் பிரதேசத்தை பாதுகாப்பதற்காக மட்டுமே போராடுவதாக யுக்ரைன் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
