சேர்பியாவின் தலைநகர் பெல்கிரேட்டில் உள்ள பாடசாலை ஒன்றில் நடத்தப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் மாணவர்கள் உள்ளிட்ட 9 பேர் உயிரிழந்தனர்.
அதேபாடசாலையில் கல்வி பயிலும் 14 வயதுடைய மாணவர் ஒருவரினால் இந்த துப்பாக்கி பிரயோகம் நடத்தப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
உயிரிழந்தவர்களில் 8 பாடசாலை மாணவர்களும், ஒரு பாதுகாப்பு உத்தியோகத்தரும் அடங்குவதாக குறிப்பிடப்படுகின்றது.
இந்த தாக்குதலில் மேலும் 6 மாணவர்களும், ஆசிரியர் ஒருவரும் காயமடைந்த நிலையில், வைத்தியசாலையில் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர் துப்பாக்கிச்சூடு நடத்தியமைக்கான காரணம் இதுவரை தெரியவரவில்லை என சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
