22-10-2023 அன்று அதிகாலை 12:45 மணிக்கு தனுஷ்கோடியில் இருந்து தமது நீச்சல் பயணத்தை தொடங்கிய புலோரிங்டன் டயன்ஸ்தித்(19),இருளாநந்தன் கெல்வின் கிஷோ(22) மற்றும் புலோரிங்டன் டயன் ப்ரீடோ( 15) ஆகிய மூன்று இளைஞர்களும் பகல் 12:50 மணிக்கு தலைமன்னாரை வந்தடைந்தனர். இவர்களது இந்த முயற்சியை உலக சாதனையாக இல்லாமல் சாதனையாக மட்டும் பதிவு செய்தது சோழன் உலக சாதனைப் புத்தக நிறுவனம். இதன் மூலம் தனுஷ்கோடியில் இருந்து தலைமன்னார் வரையள்ள கடலில் மூன்று பேர் இணைந்து குழுவாக குறைந்த நேரத்தில் நீந்திக் கடந்த வர்கள் என்ற பெருமைக்குள்ளாகிறார்கள் இவர்கள் மூவரும்.
மேலும், சோழன் உலக சாதனைப் புத்தக நிறுவனத்தின் தலைமைச் செயற்குழு உறுப்பினர் பெருமாள் நீலமேகம், இலங்கைக் கிளையின் துணைத் தலைவர் ஸ்ரீ நாகவாணி ராஜா மற்றும் மன்னார் மாவட்டத் தலைவர் ஸ்ரீஸ் கந்தராசா போன்றோர் சோழன் உலக சாதனை படைத்த மூவருக்கும் சான்றிதழ் மற்றும் பதக்கம் போன்றவற்றை வழங்கிப் பாராட்டினார்கள்.
மேலும், இந்த சோழன் உலக சாதனை நிகழ்வை
ஸ்விம் பட்டி ஸ்விம்மிங் அகடமி, மட்டு புனித மிக்கேல் கல்லூரியின் லியோ கழகம் மற்றும்
புனித மிக்கேல் கல்லூரியின் சாரணர் குழு போன்றவை இணைந்து நடத்தி இருந்தமை குறிப்பிடத்தக்கதா
