தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மஸ்கெலியா – சீட்டன் பிரட்மன் விளையாட்டு கழகத்தின் ஏற்பாட்டில் அணிக்கு 11 பேர் கொண்ட “பிரட்மன் ப்ரீமியர் லீக் ” கிரிக்கட் போட்டி நடைபெற்றது. இப்போட்டியானது இம்மாதம் 13, 14ம் திகதி களில் சீட்டன் தோட்ட பொது விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது. இச்சுற்று போட்டியில் 8 அணிகள் பங்குபற்றின.
இப்போட்டியின் அரை இறுதிப் போட்டிக்கு ட்ரொஃபி ஃபைட்டர் (Trophy fighter). கோல்டன் கிலடியேட்டர்ஸ் (Golden gladiators ) . பிரட்மன் ஈகல் (Bradman Eagle ) . பிரட்மன் றோயல் (Bradman Royal) ஆகிய அணிகள் தெரிவாகின. அதனை தொடர்ந்து இறுதிப் போட்டியில் Trophy fighter . Golden gladiator அணிகள் மோதின.
நாணய சுழற்சியில் கோல்டன் கிலடியேட்டர்ஸ் அணி வெற்றி பெற்று களத்தடுப்பை தெரிவு செய்தது. முதலில் துடுப்பெடுத்தாடிய ட்ரொஃபி ஃபைட்டர் அணி தமக்கு வழங்கப்பட்ட 5 ஓவர்களில் 1 விக்கட்டை மட்டும் இழந்து 60 ஓட்டங்களை குவித்தனர். இதில் அணித்தலைவர் ஸ்ரீகாந்த் ஆட்டமிழக்காது 47 ஓட்டங்களை அணிக்காக குவித்தார். பதிலெடுத்தாடிய கோல்டன் கிலடியேட்டர் அணி 3 விக்கட்டுக்களை இழந்து 33 ஒட்டங்களை மட்டுமே எடுத்து 27 ஓட்டங்களால் தோல்வியை தழுவியது.
2023ம் ஆண்டின் செம்பியனாக Trophy fighter அணி தெரிவானது. ஆட்ட நாயகனாகவும் தொடர் நாயகனாகவும் Trophy Sighterஅணியின் தலைவர் ஸ்ரீகாந்த் தெரிவு செய்யப்பட்டு வெற்றிக் கேடயம் வழங்கி கௌரவிக்கப்பட்டார். அத்தோடு இத்தொடரில் 23 விக்கட்டுக்களை வீழ்த்தி சிறந்த பந்து வீச்சாளருக்கான கேடயத்தையும் தன் வசப்படுத்திக் கொண்டார்.
மேலும் ஸ்ரீகாந்த் தொடரில் 1 அரைச்சதம் 23 விக்கட்டுக்களையும் வீழ்த்தி சாதனை படைத்துள்ளார். இது மாத்திரமல்ல மைதானத்தை தயார்படுத்தி பராமரித்த இளம் போட்டியாளர்களும் கேடயம் வழங்கி கௌரவிக்கப்பட்டமை விசேட அம்சமாகும்.. பரிசளிப்பு நிகழ்வில் மஸ்கெலியா போலீஸ் நிலைய பொறுப்பு அதிகாரி புஷ்பகுமார மற்றும் மஸ்கிலியா பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர்களும் போட்டி நிகழ்வை சிறப்பாக நடத்த அனுசரணை வழங்கிய அனுசரணையாளர்கள் பலரும் கலந்து நிகழ்வை சிறப்பித்தனர்.
Champion – Trophy Fighter
Runners up – Goldan Gladiators
BRADMAN EAGLE .
4th Bratman royals
கிரோசன்







