இங்கிலாந்துடன் இடம்பெறவுள்ள 3 போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் கலந்து கொள்ளவுள்ள இலங்கை டெஸ்ட் அணியினரின் பெயர்கள் வெளியிடப்பட்டுள்ளது.
18 வீரர்களைக் கொண்ட இந்த அணியின் தலைவராக தனஞ்சய டி சில்வா நியமிக்கப்பட்டுள்ளதுடன், உப தலைவராக குசல் மெண்டிஸ் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளார். இறுதியாக நடைபெற்ற இந்தியாவுடனான போட்டியில் தமது திறமைகளை சிறப்பாக வெளிக்காட்டிய ஜெப்ரி வெண்டர்ஸே மற்றும் பெத்தும் நிஸ்ஸங்க ஆகியோர் இந்த அணிக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளமை விசேட அம்சமாகும்.
ஐசிசி டெஸ்ட் உலக சாம்பியன்ஷிப்பின் கீழ் நடைபெறும் இந்தப் போட்டியில் 3 டெஸ்ட் போட்டிகள் அடங்கும்.
முதல் டெஸ்ட் போட்டி ஆகஸ்ட் மாதம் 21ஆம் திகதி மென்செஸ்டரில் உள்ள ஓல்ட் டிராஃபோர்ட் மைதானத்தில் ஆரம்பமாக உள்ளது. அதற்கு முன்னதாக இலங்கை அணி நான்கு நாள் பயிற்சி ஆட்டத்தில் பங்கேற்க உள்ளது.
தொடரின் இரண்டாவது டெஸ்ட் போட்டி ஆகஸ்ட் மாதம் 29ஆம் திகதி லண்டனில் உள்ள லார்ட்ஸ் மைதானத்திலும், மூன்றாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி செப்டம்பர் மாதம் 6ஆம் திகதி லண்டனில் உள்ள ஓவல் மைதானத்திலும் தொடங்க உள்ளது.
Sri Lanka Squad : Dhananjaya De Silva (capt), Dimuth Karunaratne, Nishan Madushka, Pathum Nissanka, Kusal Mendis (vice-capt), Angelo Mathews, Dinesh Chandimal, Kamindu Mendis, Sadeera Samarawickrama, Asitha Fernando, Vishwa Fernando, Kasun Rajitha, Lahiru Kumara, Nisala Tharaka, Prabath Jayasuriya, Ramesh Mendis, Jeffrey Vandersay, Milan Rathnayake
