Close Menu
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
What's Hot

முதல் முறையாகத் தமிழ் படைப்பாளிக்கு வழங்கப்பட்ட ‘விதர்சனா’ விருது-சுதர்மமஹா ராஜனுக்கு

September 5, 2026

லிட்ரோ சமையல் எரிவாயு விலை குறைப்பு!

September 5, 2026

தலவாக்கலை பாரதி மகா வித்தியாலய மாணவன் குனசேகர் சிருஷ்டிகன் 182 புள்ளிகளைப் பெற்று புலமை பரிசில் பிரீட்சையில் நுவரெலியா கல்வி வலயத்தில் முதலிடத்தைப் பெற்றுள்ளார். 

September 5, 2026
Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram
Malayagam.lk
Subscribe
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
Malayagam.lk
Home » பாலம் அமைப்பதற்காகத் தோண்டப்பட்ட பாதுகாப்பற்ற குழியில் தவறி விழுந்து ஆறு வயதுச் சிறுவன் உயிரிழப்பு
இலங்கை

பாலம் அமைப்பதற்காகத் தோண்டப்பட்ட பாதுகாப்பற்ற குழியில் தவறி விழுந்து ஆறு வயதுச் சிறுவன் உயிரிழப்பு

ThanaBy ThanaSeptember 5, 2026No Comments1 Min Read
Facebook Twitter WhatsApp Email Telegram
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

மட்டக்களப்பு, ஆயித்தியமலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நெடியமடு பகுதியில் பாலம் அமைப்பதற்காக தோண்டப்பட்ட குழியில் தவறி விழுந்து ஆறு வயதுடைய சிறுவன் ஒருவன் பரிதாபமாக உயிரிழந்துள்ளான்.

நெடியமடு பகுதியைச் சேர்ந்த நாகராசா நவதீப் என்ற 6 வயதுடைய சிறுவனே இச்சம்பவத்தில் உயிரிழந்துள்ளான்.

நெடியமடு பாடசாலைக்கு எதிர்ப்பக்கத்தில், உன்னிச்சைக் குளத்தில் இருந்து வயலுக்குச் செல்லும் ஆற்றின் குறுக்கே நீர்ப்பாசன திணைக்களத்தினால் பாலம் அமைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்காக குறித்த சிறுவனின் வீட்டு வேலிக்கு மிக அருகில் பாரிய குழி ஒன்று தோண்டப்பட்டிருந்த போதிலும், அதற்கு எவ்வித பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருக்கவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.

நேற்று பகல் 11.00 மணியளவில் சிறுவன் தன் வீட்டின் வேலிக்கு அருகாமையில் நடந்து சென்றபோது, எதிர்பாராதவிதமாக அக்குழியில் தவறி விழுந்துள்ளான். உடனடியாக மீட்கப்பட்டு கரடியனாறு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டபோதிலும், சிறுவன் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

சம்பவ இடத்திற்குச் சென்ற மரண விசாரணை அதிகாரி விசாரணைகளை மேற்கொண்டு நீதிமன்ற நீதவானுக்கு அறிக்கை சமர்ப்பித்துள்ளதுடன், ஆயித்தியமலை பொலிஸார் மேல் விசாரணைகளைத் தொடர்ந்து வருகின்றனர்.

அதேவேளை, கட்டுமானப் பணியின்போது எவ்வித பாதுகாப்பு ஏற்பாடுகளையும் மேற்கொள்ளாததே இந்த அனர்த்தத்திற்கு முதன்மைக் காரணம் என அப்பகுதி பொதுமக்களும் மனித உரிமை செயற்பாட்டாளர்களும் கடும் விசனமும் எதிர்ப்பும் தெரிவித்துள்ளனர்.

Share. Facebook Twitter WhatsApp Email LinkedIn Telegram
Thana

    Related Posts

    லிட்ரோ சமையல் எரிவாயு விலை குறைப்பு!

    September 5, 2026

    பெருமைமிக்க 160வது பொலிஸ் தின நிகழ்வு ஜனாதிபதி தலைமையில் – இலங்கை பொலிஸ் சேவையை மிகவும் கௌரவமிக்க சேவையாக மாற்றுவதற்குத் தேவையான வசதிகள் மேற்கொள்ளப்படும்.

    September 5, 2026

    பொரலஸ்கமுவவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் 74 வயது முதியவர் உயிரிழப்பு!

    September 4, 2026

    நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ கைது: வரும் 18ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவு!

    September 4, 2026
    Editors Picks

    முதல் முறையாகத் தமிழ் படைப்பாளிக்கு வழங்கப்பட்ட ‘விதர்சனா’ விருது-சுதர்மமஹா ராஜனுக்கு

    September 5, 2026

    லிட்ரோ சமையல் எரிவாயு விலை குறைப்பு!

    September 5, 2026

    தலவாக்கலை பாரதி மகா வித்தியாலய மாணவன் குனசேகர் சிருஷ்டிகன் 182 புள்ளிகளைப் பெற்று புலமை பரிசில் பிரீட்சையில் நுவரெலியா கல்வி வலயத்தில் முதலிடத்தைப் பெற்றுள்ளார். 

    September 5, 2026

    உடப்புஸ்ஸலாவ – அலகொல்ல அகரம் ஆரம்பபிரிவு வித்தியாலய மாணவர்கள் 13 பேர் வெட்டுப்புள்ளிக்கு மேல் புள்ளிகளைப் பெற்று வரலாற்றுச் சாதனை

    September 5, 2026

    முதல் முறையாகத் தமிழ் படைப்பாளிக்கு வழங்கப்பட்ட ‘விதர்சனா’ விருது-சுதர்மமஹா ராஜனுக்கு

    September 5, 2026

    லிட்ரோ சமையல் எரிவாயு விலை குறைப்பு!

    September 5, 2026

    தலவாக்கலை பாரதி மகா வித்தியாலய மாணவன் குனசேகர் சிருஷ்டிகன் 182 புள்ளிகளைப் பெற்று புலமை பரிசில் பிரீட்சையில் நுவரெலியா கல்வி வலயத்தில் முதலிடத்தைப் பெற்றுள்ளார். 

    September 5, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    © 2026 Malayagam.lk. Designed by Gcloud.

    Type above and press Enter to search. Press Esc to cancel.