Close Menu
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
What's Hot

அரசியலமைப்புக்கான 22 ஆவது திருத்தச் சட்டமூலத்திற்கு சபாநாயகர் சான்றுரைப்பு: நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயது உயர்வு!

September 25, 2026

டிக்கோயா அருகே விபத்து: முச்சக்கர வண்டி சாரதி படுகாயம்

September 25, 2026

நீதிபதிகளின் ஓய்வு வயதை அதிகரிப்பதில் ஆட்சேபனை இல்லை-ஜீவன்

September 25, 2026
Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram
Malayagam.lk
Subscribe
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
Malayagam.lk
Home » அரசியலமைப்புக்கான 22 ஆவது திருத்தச் சட்டமூலத்திற்கு சபாநாயகர் சான்றுரைப்பு: நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயது உயர்வு!
Breaking

அரசியலமைப்புக்கான 22 ஆவது திருத்தச் சட்டமூலத்திற்கு சபாநாயகர் சான்றுரைப்பு: நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயது உயர்வு!

ThanaBy ThanaSeptember 25, 2026No Comments1 Min Read
Facebook Twitter WhatsApp Email Telegram
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

அரசியலமைப்புக்கான 22 ஆவது திருத்தச் சட்டமூலம் மற்றும் நீதித்துறை திருத்தம் சட்டமூலம் ஆகிய இரண்டிலும்,  சபாநாயகர் வைத்தியர் ஜகத் விக்கிரமரத்ன தனது கையொப்பமிட்டு சான்றுரைப்படுத்தியுள்ளார்.

​பாராளுமன்றத்தில் இரண்டு நாட்கள் இடம்பெற்ற விவாதங்களின் பின்னர், அரசியலமைப்புக்கான 22 ஆவது திருத்தச் சட்டமூலம் மூன்றில் இரண்டு பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது. இதன் மூலம், உயர் நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயது 65 இலிருந்து 67 ஆகவும், மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயது 63 இலிருந்து 65 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது.

​மேலும், மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கை 19 இலிருந்து 24 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. பிராந்திய மேன்முறையீட்டு நீதிமன்றங்களை நிறுவி செயற்படுத்துவதன் மூலம், நிலுவையிலுள்ள வழக்குகளை விரைவாக முடிவுக்குக் கொண்டுவரவும், பொதுமக்கள் கொழும்பிற்கு வர வேண்டிய தேவையைக் குறைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

​இதேவேளை, மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்ட நீதித்துறை (திருத்தம்) சட்டமூலத்தின் கீழ், மேல் நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயது 61 இலிருந்து 63 ஆகவும், மாவட்ட நீதிபதிகள் மற்றும் நீதவான்களின் ஓய்வுபெறும் வயது 60 இலிருந்து 62 ஆகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

​அத்துடன், மேலதிக மாகாண மேல் நீதிமன்றங்களை நிறுவுவதற்கு ஏதுவாக, மேல் நீதிமன்ற நீதிபதிகளின் அதிகபட்ச எண்ணிக்கை 110 இலிருந்து 120 ஆக உயர்த்தப்பட்டு, 2026 ஆம் ஆண்டின் 23 ஆம் இலக்க நீதித்துறை (திருத்தம்) சட்டமாக இது அமுலுக்கு வருகின்றது.

Share. Facebook Twitter WhatsApp Email LinkedIn Telegram
Thana

    Related Posts

    நீதிபதிகளின் ஓய்வு வயதை அதிகரிப்பதில் ஆட்சேபனை இல்லை-ஜீவன்

    September 25, 2026

    நவம்பர் 1 முதல் பல்வேறு சேவைகளுக்கு ‘TIN’ இலக்கம் கட்டாயம்: உள்நாட்டு இறைவரித் திணைக்களம் அறிவிப்பு

    September 25, 2026

    காணி மோசடி வழக்கில் ஹட்டன் நகரசபை உறுப்பினர் கைது

    September 25, 2026

    கடும் காற்றுடன் பெய்யும் மழையால் மலையகத்தில் இயல்பு வாழ்க்கை பாதிப்பு: வாகன சாரதிகளுக்கு பொலிஸார் அவசர எச்சரிக்கை

    September 25, 2026
    Editors Picks

    அரசியலமைப்புக்கான 22 ஆவது திருத்தச் சட்டமூலத்திற்கு சபாநாயகர் சான்றுரைப்பு: நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயது உயர்வு!

    September 25, 2026

    டிக்கோயா அருகே விபத்து: முச்சக்கர வண்டி சாரதி படுகாயம்

    September 25, 2026

    நீதிபதிகளின் ஓய்வு வயதை அதிகரிப்பதில் ஆட்சேபனை இல்லை-ஜீவன்

    September 25, 2026

    நவம்பர் 1 முதல் பல்வேறு சேவைகளுக்கு ‘TIN’ இலக்கம் கட்டாயம்: உள்நாட்டு இறைவரித் திணைக்களம் அறிவிப்பு

    September 25, 2026

    அரசியலமைப்புக்கான 22 ஆவது திருத்தச் சட்டமூலத்திற்கு சபாநாயகர் சான்றுரைப்பு: நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயது உயர்வு!

    September 25, 2026

    டிக்கோயா அருகே விபத்து: முச்சக்கர வண்டி சாரதி படுகாயம்

    September 25, 2026

    நீதிபதிகளின் ஓய்வு வயதை அதிகரிப்பதில் ஆட்சேபனை இல்லை-ஜீவன்

    September 25, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    © 2026 Malayagam.lk. Designed by Gcloud.

    Type above and press Enter to search. Press Esc to cancel.