Close Menu
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
What's Hot

ஹர்ஷண நாணயக்காரவுடன் இ.தொ.கா. தலைவர் செந்தில் தொண்டமான் சந்திப்பு!

October 7, 2026

நுவரெலியா மாநகர சபையின் நீர்வளப் பிரிவை அமைச்சின் கீழ் கொண்டு செல்ல எதிர்ப்பு – பொதுமக்கள், வர்த்தகர்கள் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம்

October 7, 2026

பேருந்துடன் மோதிய சைக்கிள் – சிறுவன் பலி

October 7, 2026
Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram
Malayagam.lk
Subscribe
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
Malayagam.lk
Home » ஹர்ஷண நாணயக்காரவுடன் இ.தொ.கா. தலைவர் செந்தில் தொண்டமான் சந்திப்பு!
இலங்கை

ஹர்ஷண நாணயக்காரவுடன் இ.தொ.கா. தலைவர் செந்தில் தொண்டமான் சந்திப்பு!

ThanaBy ThanaOctober 7, 2026No Comments2 Mins Read
Facebook Twitter WhatsApp Email Telegram
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

ஹர்ஷண நாணயக்காரவுடன் இ.தொ.கா. தலைவர் செந்தில் தொண்டமான் சந்திப்பு!

 

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் செந்தில் தொண்டமானுக்கும், நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் ஹர்ஷண நாணயக்காரவுக்கும் இடையில் சந்திப்பு இடம்பெற்றது.

 

இதன்போது, பெருந்தோட்டப் பகுதிகளில் தோட்ட நிர்வாகத்தினரால் வெளியேற்ற அறிவிப்புகள் (Eviction Notices) வழங்கப்பட்டு, நீண்டகாலமாக அங்கு வசித்து வரும் மக்கள் தங்களது குடியிருப்புகளிலிருந்து வெளியேற்றப்படும் நிலைமை தொடர்பில் செந்தில் தொண்டமான் அமைச்சரின் கவனத்திற்குக் கொண்டுவந்தார்.

 

குறிப்பாக, பல ஆண்டுகளாகப் பெருந்தோட்டப் பகுதிகளில் வசித்து வரும் மக்களை வெளியேற்றும் நடவடிக்கைகள் ஏற்றுக்கொள்ள முடியாதவை எனத் தெரிவித்த அவர், இவ்விடயத்தில் அரசாங்கம் உடனடியாகத் தலையிட்டு, இப்பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தார்.

 

இலங்கையில் நடைமுறையிலுள்ள சிவில் நடைமுறைச் சட்டத்தின் 66ஆம் பிரிவைச் சுட்டிக்காட்டிய செந்தில் தொண்டமான், குடியிருப்பு மற்றும் காணி தொடர்பான பிரச்சினைகளில் சட்டப் பாதுகாப்பு வழங்கப்பட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார். நாட்டின் ஏனைய பகுதிகளில் நடைமுறையிலுள்ள சட்டப் பாதுகாப்புகள் பெருந்தோட்டப் பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கும் உரிய முறையில் கிடைப்பதை அரசாங்கம் உறுதிப்படுத்த வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

 

மேலும், அந்த காலங்களில் பெருந்தோட்டப் பகுதிகளில் வசிப்பதற்காக மக்களுக்கு ஒதுக்கப்பட்ட காணிகள் எழுத்துமூல ஆவணங்கள் இன்றி வழங்கப்பட்டுள்ளது. எனினும், குறித்த குடியிருப்புகளில் வசிப்பதை உறுதிப்படுத்தும் மின்சாரப் பட்டியல்கள், வாக்காளர் பட்டியலில் பெயர் இடம்பெற்றிருப்பதற்கான ஆதாரங்கள் மற்றும் கிராம உத்தியோகத்தரிடமிருந்து பெறக்கூடிய உறுதிப்படுத்தல்கள் போன்ற ஆவணங்கள் காணப்படுவதாகவும் தெரிவித்தார்.

 

இவ்வாறான ஆதாரங்களைக் கொண்டும், பத்து ஆண்டுகளுக்கும் மேலாகப் பெருந்தோட்டப் பகுதிகளில் வசித்து வரும் மக்களையும், தற்காலிகக் குடியிருப்புகள் மற்றும் கூடாரங்களில் வாழும் மக்களையும், தோட்டத் துறையில் தற்போதைய சூழ்நிலையில் பணியாற்றவில்லை என்ற காரணத்தால் அவர்களின் குடியிருப்புகளிலிருந்து வெளியேற்றுவது நியாயமற்றது என அவர் வலியுறுத்தினார்.

 

எனவே, பெருந்தோட்ட மக்களின் நீண்டகாலக் குடியிருப்பு உரிமைகளை பாதுகாக்கும் வகையில் அரசாங்கம் உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு, அவர்களுக்கு நிலையான தீர்வைப் பெற்றுக்கொடுக்க வேண்டும் என அமைச்சர் ஹர்ஷண நாணயக்காரவிடம் செந்தில் தொண்டமான் கோரிக்கை விடுத்தார்.

Share. Facebook Twitter WhatsApp Email LinkedIn Telegram
Thana

    Related Posts

    போலி வைத்தியர்கள் இருவர் கைது: ரூ. 15 இலட்சம் பெறுமதியான மருந்துகளும் பறிமுதல்

    October 7, 2026

    ஞானசார தேரரை காரில் ஏற்றிச் சென்ற வங்கி அதிகாரி கைது: அக். 9 வரை விளக்கமறியல்!

    October 7, 2026

    முன்னாள் முதல் பெண்மணி ஷிராந்தி ராஜபக்ஷவுக்கு நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவு அழைப்பு!

    October 6, 2026

    பொதுபல சேனா அமைப்பின் பொதுச்செயலாளர் ஞானசார தேரர் பொலிஸாரால் கைது!

    October 3, 2026
    Editors Picks

    ஹர்ஷண நாணயக்காரவுடன் இ.தொ.கா. தலைவர் செந்தில் தொண்டமான் சந்திப்பு!

    October 7, 2026

    நுவரெலியா மாநகர சபையின் நீர்வளப் பிரிவை அமைச்சின் கீழ் கொண்டு செல்ல எதிர்ப்பு – பொதுமக்கள், வர்த்தகர்கள் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம்

    October 7, 2026

    பேருந்துடன் மோதிய சைக்கிள் – சிறுவன் பலி

    October 7, 2026

    போலி வைத்தியர்கள் இருவர் கைது: ரூ. 15 இலட்சம் பெறுமதியான மருந்துகளும் பறிமுதல்

    October 7, 2026

    ஹர்ஷண நாணயக்காரவுடன் இ.தொ.கா. தலைவர் செந்தில் தொண்டமான் சந்திப்பு!

    October 7, 2026

    நுவரெலியா மாநகர சபையின் நீர்வளப் பிரிவை அமைச்சின் கீழ் கொண்டு செல்ல எதிர்ப்பு – பொதுமக்கள், வர்த்தகர்கள் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம்

    October 7, 2026

    பேருந்துடன் மோதிய சைக்கிள் – சிறுவன் பலி

    October 7, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    © 2026 Malayagam.lk. Designed by Gcloud.

    Type above and press Enter to search. Press Esc to cancel.