கண்டியிலுள்ள இந்திய உதவி உயர்ஸ்தானிகராலயத்தின் ஏற்பாட்டில், வெளிநாடுவாழ் இந்தியக் குடிமகன் அல்லது OCI அட்டை தொடர்பான சிறப்புத் தூதரகச் சேவை முகாம் இன்று நுவரெலியாவில் நடைபெற்றது.
நுவரெலியா மாவட்டச் செயலகத்தில் நடைபெற்ற இம்முகாமில், கண்டி, நுவரெலியா, மாத்தளை, பதுளை உள்ளிட்ட மலையக மாவட்டங்களைச் சேர்ந்த 60-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.
இதன்போது OCI அட்டைக்கு விண்ணப்பிக்கும் நடைமுறைகள் மற்றும் தேவையான ஆவணங்கள் குறித்து அதிகாரிகளால் தெளிவான விளக்கங்கள் வழங்கி வைக்கப்பட்டன.
