மொனராகலை பகுதியில் 14 வயது மாணவனைப் பாலியல் துஷ்பிரயோகம் செய்த வழக்கில், 49 வயது ஆசிரியைக்கு 8 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், இலட்சக்கணக்கான ரூபாய் நஷ்டஈடும் விதித்து உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
2019 ஆம் ஆண்டு இடம்பெற்ற இந்தச் சம்பவம் குறித்த வழக்கு விசாரணை மொனராகலை உயர் நீதிமன்றத்தில் இடம்பெற்றது. இதன்போது, பாடசாலையிலிருந்து மாணவனை தனது வீட்டிற்கு அழைத்துச் சென்று துஷ்பிரயோகம் செய்தமை நிரூபிக்கப்பட்டதை அடுத்து, வழக்கின் குற்றவாளியான 49 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தாய்க்கு நீதிமன்றம் இந்தத் தண்டனையை வழங்கியுள்ளது.
இதற்கமைய, நீதிமன்றம் குற்றவாளிக்கு சிறைத்தண்டனை விதித்ததோடு, ஒவ்வொரு குற்றச்சாட்டுக்கும் 50,000 ரூபாய் அபராதமும், பாதிக்கப்பட்ட குழந்தைக்கு தலா 250,000 ரூபாய் வீதம் மொத்தம் 750,000 ரூபாய் நஷ்டஈடு செலுத்துமாறும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார். குறித்த வழக்கினை சட்டமா அதிபர் திணைக்களம் தாக்கல் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.
