இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் அறிவிப்பைத் தொடர்ந்து, லங்கா ஐ.ஓ.சி நிறுவனமும் எரிபொருள் விலைகளை உயர்த்தியுள்ளது.
இதன்படி, ஒக்டேன் 92 ரக பெற்றோல் லீட்டர் ஒன்று 10 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டு 424 ரூபாவிற்கும், ஒட்டோ டீசல் லீட்டர் ஒன்று 5 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டு 397 ரூபாவிற்கும் விற்பனை செய்யப்படவுள்ளன.
அதேவேளை, சுப்பர் டீசல் லீட்டர் ஒன்றின் விலை 30 ரூபாவினால் குறைக்கப்பட்டு 570 ரூபாவாக விற்பனை செய்யப்படவுள்ளதுடன், ஒக்டேன் 95 ரக பெற்றோலின் விலையில் எவ்வித மாற்றமும் செய்யப்படவில்லை என லங்கா ஐ.ஓ.சி நிறுவனம் தெரிவித்துள்ளது.
