ஊழல் குற்றச்சாட்டுத் தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் சாமர சம்பத் தஸநாயக்கவின் பிணை மனுவை, கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று (20) நிராகரித்துள்ளது.
கொழும்பு பிரதான நீதவான் அசங்க எஸ். போதரகம இந்த உத்தரவைப் பிறப்பித்தார்.
பொஸ்பேட் ஏற்றுமதி செய்வதற்காக மூன்று தனியார் நிறுவனங்களுக்கு அனுமதிப்பத்திரம் வழங்குவதற்கு 81 இலட்சம் ரூபாய் லஞ்சம் பெற்றதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பிலேயே, முன்னாள் அமைச்சர் சாமர சம்பத் தஸநாயக்க இன்றைய தினம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டிருந்தார்.
