மத்திய மாகாண சோட்டோகான் கராத்தே அக்கடமி இன்டர்நேஷனல் மாணவர்களுக்கான கியு தரத் தேர்வு மற்றும் பயிற்சி எதிர்வரும் 29ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ளது.
அருள்மிகு ஸ்ரீ தண்டாயுதபாணி ஆலய மண்டபத்தில் காலை 8 மணிக்கு நிகழ்வுகள் ஆரம்பமாகவுள்ளன.
தேர்வில் சித்திபெறுவோருக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு பிற்பகல் 4 மணிக்கு நடைபெறும்.
சர்வதேச பிரதம ஆசிரியர் சிஹான் அன்டோ டினேஷ் மற்றும் மத்திய மாகாணத் தலைமைப் பயிற்றுவிப்பாளர் சிஹான் எம். தம்பிராஜா ஆகியோரின் வழிகாட்டலில் இந்நிகழ்வு இடம்பெறவுள்ளது.
இதன்போது அன்டோ டினேஷ் எழுதிய ‘தி சயின்டிபிக் ஆட் ஒஃப் கராத்தே’ எனும் நூலும் வெளியிடப்படவுள்ளது.
