Author: Thana
ஹிக்கடுவ பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டுக்கு அமைய விசாரணைக்கு அழைக்கப்பட்ட இரு குழுக்கள் வன்முறையில் ஈடுபட்டதன் காரணமாக 5 பெண்கள் உட்பட 19 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக ஹிக்கடுவ பொலிஸார் தெரிவித்தனர். வெலிகம கடற்கரையில் படகொன்று சேதப்படுத்தப்பட்டமை தொடர்பில் கிடைக்கப்பெற்ற முறைப்பாடு தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்வதற்காக பொலிஸ் நிலையத்துக்கு அழைக்கப்பட்ட முறைப்பாட்டாளர்கள் குழுவும், பிரதிவாதிகள் குழுவும் பொலிஸ் நிலையத்தினுள் மோதலில் ஈடுபட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் ரத்கம மற்றும் தொடந்துவ பிரதேசத்தை சேர்ந்தவர்கள் எனவும் சந்தேக நபர் ஒருவரிடம் இருந்த கூரிய ஆயுதங்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மலையக பெருந்தோட்ட மக்களின் எதிர்கால பாதையை மாற்றுவதற்கான தருணமே இது. மலையக மேம்பாட்டுக்காக அமெரிக்கா தொடர்ந்து உதவிகளை வழங்கும் என இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் தெரிவித்தார். இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சருமான ஜீவன் தொண்டமானின் அழைப்பின் பேரில் நுவரெலியா மாவட்டத்துக்கு களப்பயணம் மேற்கொண்ட அமெரிக்க தூதுவர், பல தரப்பு சந்திப்புகளில் ஈடுபட்டதுடன், மக்கள், சிவில் சமூக செயற்பாட்டாளர்களையும் சந்தித்திருந்தார். இவ்விஜயத்தின் ஓரங்கமாக அட்டனில் உள்ள தொண்டமான் தொழில் பயிற்சி நிலையத்துக்கு சென்ற அமெரிக்க தூதுவருக்கு, உற்சாக வரவேற்பளிக்கப்பட்டது. அதன்பின்னர் அதிகாரிகள் மற்றும் அங்கு பயிற்சிபெறும் மாணவர்களுடன் தூதுவர் கலந்துரையாடினார். இதன்போது, இருதரப்பு உறவுகளுக்கான நினைவுச் சின்னங்களும் வழங்கி வைக்கப்பட்டன சௌமியமூர்த்தி தொண்டமான் ஞாபகார்த்த மன்றத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி காந்தி சௌந்தர்ராஜன், பெருந்தோட்ட மனிதவள அபிவிருத்தி நிதியத்தின் தலைவர் பாரத் அருள்சாமி, அமைச்சர் ஜீவன் தொண்டமானின் இணைப்புச்செயலாளர் அர்ஜுன்…
உடனடி கடன் வழங்குவதாக கூறி இணையத்தளம் ஊடாக அறிவித்தல்களை விடுத்து, இலட்சக்கணக்கான நிதியை மோசடி செய்த ஒருவர் எதிர்வரும் 19 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். கொழும்பு, கம்பஹா, கெஸ்பேவ, ராகமை, வெயங்கொடை, கேகாலை, அனுராதபுரம் உள்ளிட்ட பல பிரதேசங்களில் இருந்து அவருக்கு எதிராக முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டிருந்தன. இதற்கமைய, முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளுக்கமைய சந்தேகத்துக்குரியவர் கைது செய்யப்பட்டார். கைதானவர் கந்தானை பகுதியைச் சேர்ந்தவராவார். கைதானவரிடம் இருந்து 74 சிம் அட்டைகள் 4 கையடக்க தொலைபேசிகள், என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.
பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் வெளிநாடு செல்ல தடை விதித்து கிளிநொச்சி நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. டுவிட்டர் பதிவொன்றில் பாராளுமன்ற உறுப்பினர் இதனைத் தெரிவித்துள்ளார். பொலிஸ் நிலையத்தில் முன்னிலையாகும், வரை அவருக்கு எதிராக பயணத்தடை விதிக்குமாறு மருதங்கேணி பொலிஸார் நீதிமன்றை கோரியிருந்தனர். இந்த கோரிக்கையை பரிசீலித்த கிளிநொச்சி நீதிவான், பயணத்தடை விதித்து உத்தரவிட்டார். இந்த நிலையில், கொழும்பில் உள்ள பாராளுமன்ற உறுப்பினரின் வீட்டிற்கு சென்றிருந் கொள்ளுப்பிட்டி பொலிஸார் குறித்த உத்தரவை கையளித்தனர். அதன்படி, எதிர்வரும் 8 ஆம் திகதி காலை 10 மணிக்கு மருதங்கேணி பொலிஸ் நிலையத்தில் முன்னிலையாகுமாறு பொலிஸார் அறிவுறுத்தியதாக அவர் தெரிவித்துள்ளார். எவ்வாறாயினும், மருதங்கேணி பொலிஸ் நிலையத்தில் இன்று (06) முன்னிலையாகுமாறு முன்னதாக கஜேந்திரகுமார் பொன்னம்பலத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. கடந்த 3ஆம் திகதி இடம்பெற்ற சம்பவம் தொடர்பான இந்த அழைப்பு தொடர்பில் சபாநாயகருடன் கலந்துரையாடிய பின்னரே தீர்மானம் ஒன்றை எட்டவுள்ளதாக தமிழ் மக்கள் தேசிய முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார்…
கம்பளை பிரதேசத்தில் நேற்றிரவு நில நடுக்கமொன்று பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கம் 10.49 அளவில் பதிவானதாக புவிசரிதவியல் மற்றும் சுரங்க பணியகம் தெரிவிக்கின்றது. நிலநடுக்கமானது 2 ரிக்டர் அளவில் பதிவாகியுள்ளது.
போதைப்பொருள் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர் ஒருவர் நீதிமன்ற மாடிக்கட்டடத்தில் இருந்து கீழே குதித்ததில் பலத்த காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். குறித்த சந்தேகநபரை கண்டி நீதிமன்றத்தில் முன்னிலைபடுத்துவதற்கு பொலிஸார் அழைத்துச் சென்ற போது, சந்தேக நபர் நீதிமன்ற கட்டிடத்தின் இரண்டாவது மாடியில் இருந்து கீழே குதித்துள்ளார். இதனால் பலத்த காயமடைந்த அவர் கண்டி தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 2150 மில்லிகிராம் ஹெரோயினுடன் சந்தேகநபர் கண்டி தலைமையக காவல்நிலையத்தின் ஊழல் ஒழிப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டார். அவர் நேற்று மாலை நீதிமன்றத்துகு அழைத்துச் செல்லப்பட்ட போது பொலிஸாரின் பிடியில் இருந்து தப்பி, இரண்டாவது மாடியில் இருந்து கீழே குதித்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
பிரித்தானிய பிரஜாவுரிமை பெற்றுள்ளதாகக் கூறப்படும் இராஜாங்க அமைச்சர் டயனா கமகேவின் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இரத்துச் செய்யுமாறு கோரி தாக்கல் செய்யப்பட்டுள்ள நீதிப்பேராணை மனு மீதான தீர்ப்பு, மேல்முறையீட்டு நீதிமன்றினால் இன்று (6) அறிவிக்கப்படவுள்ளது. இந்த மனு, நீதியரசர்களான நிஷங்க பந்துல கருணாரத்ன மற்றும் எம்.ஏ.ஆர்.மரிக்கார் ஆகியோரடங்கிய மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்கள் ஆயம் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டதன் பின்னர், தீர்ப்புக்காக இன்றைய தினத்துக்கு ஒத்திவைக்கப்பட்டது. இந்த மனுவில் குடிவரவு கட்டுப்பாட்டாளர் மற்றும் சட்டமா அதிபர் ஆகியோர் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ளனர். பிரித்தானியப் பிரஜை எனக் கூறப்படும் டயனா கமகே இலங்கைப் பிரஜாவுரிமையைப் பெறாத காரணத்தினால் இலங்கை பாராளுமன்ற உறுப்பினராக பதவி வகிக்கத் தகுதியற்றவர் என உத்தரவிடக்கோரி சமூக ஆர்வலர் ஓஷல ஹேரத் என்பவர் இந்த மனுவை தாக்கல் செய்துள்ளார்.
தேசிய மருந்தாக்கல் கூட்டுத்தாபனத்தில் பதிவு செய்யப்பட்ட மருந்துகளின் விலை குறைக்கப்படவுள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹேலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். இலங்கை ரூபாவிற்கு எதிரான அமெரிக்க டொலரின் வீழ்ச்சியினை அடுத்து, மருந்துகளின் விலை 16 சதவீதத்தினால் குறைக்கப்படவுள்ளதாகவும் சுகாதார அமைச்சர் கெஹேலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். இந்த விலை குறைப்பானது ஜூன் 15 ஆம் திகதி முதல் அமுலாகும் எனவும் சுகாதார அமைச்சர் தெரிவித்துள்ளார்.
புசல்லாவை, பெரட்டாசி இ.போ.ச பஸ் சேவையை உடன் ஆரம்பிக்குமாறு வலியுறுத்தி இன்று (05.06.2023) மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். புசல்லாவை, கெமுனுபுர சந்தியில் இன்று முற்பகல் இடம்பெற்ற இப்போராட்டத்தில் தோட்ட மக்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், இளைஞர்கள் என பலரும் பங்கேற்றனர். கடந்த மே 27 ஆம் திகதி இபோச பஸ் சேவையை ஆரம்பிப்பதற்கான அனுமதியை கம்பளை டிப்போ வழங்கியிருந்தது. பஸ் சேவை ஆரம்ப நிகழ்வை நடத்துவதற்கான ஏற்பாடுகள்கூட இடம்பெற்றிருந்தன. போராட்டத்தின் காணொளி எனினும், கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரின் தலையீட்டால் பஸ் சேவை இடைநிறுத்தப்பட்டுள்ளது. இது அனுமதிக்க முடியாத செயல் என போராட்டத்தில் பங்கேற்றோர் கோஷங்களை எழுப்பினர். அத்துடன், தமது கண்டனங்களையும் வெளியிட்டுள்ளனர். பெரட்டாசி வீதி ஊடாக பேரணியாக வந்த மக்கள், கெமுனுபுர சந்தியை வந்தடைந்த பின்னர் போராட்டத்தை முன்னெடுத்தனர். உடன் இபோச பஸ் சேவை ஆரம்பிக்கப்பட வேண்டும் என இடித்துரைத்தனர்.
தென் கொரியாவின் யெச்சியோனில் நடைபெற்ற 2023 ஆம் ஆண்டுக்கான 20 வயதுக்குட்பட்ட ஜூனியர் தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் 4×400 மீற்றர் ரிலே கலப்பு ஓட்ட பந்தயத்தில் இலங்கை தங்கப் பதக்கத்தை வென்றது. இப்போட்டியில் இலங்கை அணி 3 நிமிடம் 25.41 செக்கனில் பந்தய தூரத்தைக் கடந்தது. போட்டியை நடத்தும் தென் கொரியா இரண்டாவது இடத்தையும், இந்தியா மூன்றாவது இடத்தையும் பிடித்தது. இலங்கைக்கு இன்று கிடைத்த இரண்டாவது தங்கப் பதக்கம் இதுவாகும். முன்னதாக பெண்களுக்கான 800 மீற்றர் ஓட்டப் போட்டியில் இலங்கையின் தருஷி கருணாரத்ன தங்கப் பதக்கத்தை வென்றிருந்தார்.