Author: Thana
மீகொடை பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோகத்தில் நபர் ஒருவர் காயமடைந்துள்ளார். இன்று (5) காலை இந்த துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.சம்பவத்தில் 62 வயதுடைய நபர் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.காயமடைந்த நபர் ஹோமாகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.இது தொடர்பான மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
ஒளிபரப்பு அதிகார சபை சட்டமூலம் தொடர்பில் ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட எதிர்க்கட்சி கூட்டணியின் விசேட உபகுழு இன்று (05) கூடவுள்ளது. இதன்படி, பேராசிரியர் சரித ஹேரத் தலைமையில் இந்தக் குழு ஒன்று கூடவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. உத்தேச சட்டமூலத்தில் ஊடகவியலாளர்களை சிறையில் அடைப்பதற்கும், ஊடகவியலாளர்களுக்கு அபராதம் விதிப்பதற்கும், இலத்திரனியல் ஊடகங்களை ஒழிப்பதற்கும் அதிகாரம் வழங்கப்படும் என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
அனர்த்த நிலைமையை முன்கூட்டியே கையாள்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பரீட்சார்த்திகளிடம் பரீட்சை திணைக்களம் கோரியுள்ளது. அனர்த்தம் தொடர்பில் தங்களுக்கு ஏதேனும் பிரச்சினை இருப்பின் அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் 117 என்ற இலக்கத்திற்கு அழைக்க முடியும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர குறிப்பிட்டுள்ளார். கல்விப் பொதுத் தராதரப் சாதாரணதரப் பரீட்சை இதுவரை வெற்றிகரமாக நடாத்தப்பட்டுள்ளதாக பரீட்சை ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர மேலும் தெரிவித்துள்ளார்.
சட்டவிரோத பணப் பரிமாற்றம் மற்றும் பயங்கரவாதத்திற்கு நிதியுதவிகளை வழங்குவதை தடுப்பதற்கான அடுத்தகட்ட செயற்பாடுகளை இலங்கை விரைவில் ஆரம்பிக்கும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உறுதியளித்துள்ளார். மேற்படி செயற்பாடுகள் நாட்டின் வணிகச் செயற்பாடுகளை இலகுபடுத்துவது தொடர்பான மதிப்பீடுகள் மற்றும் வெளிநாட்டு முதலீடுகளை ஈர்த்தல் போன்ற விடயங்கள் மீது நேரடியாக தாக்கம் செலுத்தும் என்றும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார். நுவரெலியா கிரேண்ட ஹோட்டலில் நேற்றுமுன்தினம் (03) நடைபெற்ற சட்டத்தரணிகள் மாநாட்டின் 2 ஆம் நாள் நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மேற்கண்டவாறு தெரிவித்தார். “பொருளாதாரத்தை வழமைக்கு திருப்பும் முயற்சிகளில் நீதிக் கட்டமைப்பின் பணியும் வணிக நிலைத்தன்மையும்” என்ற தொனிப்பொருளின் கீழ் இடம்பெற்று வரும் மேற்படி மாநாடு இன்று (04) நிறைவடையவுள்ளது. சட்டவிரோத பணப் பரிமாற்றம் மற்றும் பயங்கரவாதத்திற்கு நிதியுதவிகளை வழங்குவதை தடுப்பதற்காக காணப்படும் சட்டதிட்டங்களின் இடைவெளிகளை விரைவில் கண்டறிய வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்திய ஜனாதிபதி, அவ்வாறு செய்யத் தவறும் பட்சத்தில்…
மசகு எண்ணெய் விலையை உயர்த்தும் முயற்சியில் உற்பத்தியை மேலும் நாளாந்தம் ஒரு மில்லியன் பீப்பாய்களால் குறைப்பதாக சவுதி அரேபியா அறிவித்துள்ளது. சவூதி அரேபியா மற்றும் அதன் 10 பங்காளி ஒபெக் உறுப்பு நாடுகளுடனான கூட்டத்தைத் தொடர்ந்து இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. குறித்த குறைப்பு எதிர்வரும் ஜூலை மாத இறுதி வரை தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளதுடன், அது தேவையேற்படின், நீட்டிக்கப்படலாம் என சவுதி அரேபிய எரிசக்தி அமைச்சர் இளவரசர் அப்துல்அஜிஸ் பின் சல்மான் செய்தியாளர் தெரிவித்தார். வியன்னாவில் உள்ள ஒபெக் தலைமைகயத்தில், இடம்பெற்ற பல மணிநேரம் கலந்துரையாடலின் பின்னர் குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
கலை, கலாசாரம், பொழுதுபோக்கு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் பங்காற்றியவர்களுக்கு துபாய் அதிகாரிகள் வழங்கும் உயரிய விருது ‘கோல்டன் விசா’ என அழைக்கப்படுகிறது. யோஹானி இலங்கையின் பாரம்பரிய நாட்டுப்புற இசை மற்றும் சமகால பாப் இசை ஆகியவற்றின் தனித்துவமான கலவையால் பார்வையாளர்களை கவர்ந்து வருகிறார், மேலும் ‘கோல்டன் விசா’ கலைச் சிறப்பிற்கான அவரது அசைக்க முடியாத அர்ப்பணிப்பு மற்றும் உலகளாவிய அளவில் கலாச்சார பன்முகத்தன்மையை மேம்படுத்துவதற்கான அர்ப்பணிப்பை அங்கீகரிக்கிறது.
மொனராகலை அலியாவத்த பகுதியில் மரம் முறிந்து வீழ்ந்ததில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐவர் வைத்தியசாலையில் அனுமதி.
மொனராகலை அலியாவத்த எட்டு (08) ஏக்கர் பகுதியில் இன்று அதிகாலை பாரிய மரமொன்று வீடொன்றின் மேல் முறிந்து விழுந்துள்ளது. இதனால் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலை அனுமதிக்கப்பட்டுள்ளனர். தகவல் :- தர்மலிங்கம் லலித்
நுவரெலியா மாவட்டத்தில் உள்ள ஹொரன பிலான்டேசனுக்கு உரித்தான 12 தோட்ட பெண்களுக்கு இடையே போட்டி.
மஸ்கெலியா விசேட நிருபர் செ.தி.பெருமாள்.05.06.2023. தரமான பச்சை தேயிலை கொழுந்து பரிக்கும் போட்டி நேற்று முன்தினம் இடம் பெற்றது. இந்த நிகழ்வை நுவரெலியா மாவட்டத்தில் உள்ள ஹொரன பிலான்டேசனுக்கு உரித்தான 12 தோட்டங்களில் பணி புரியும் பெண் தொழிலாளர்களுக்கு இடையே இடம்பெற்றது. இந்த போட்டியில் முதலாவது இடத்தைப் பெற்று கொண்ட சாமிமலை பகுதியில் உள்ள ஹொரன பிலான்டேசனுக்கு உரித்தான ஓல்ட்டன் தோட்டத்தை சேர்ந்த என.விக்னேஸ்வரிக்கு ஒரு பவுண் தங்க குற்றியும் ஒரு லட்சம் ரூபாய் பணமும் பரிசாக தோட்ட நிர்வாகம் வழங்கியது. இரண்டாம் இடத்தைப் பெற்ற சாமிமலை பகுதிகளில் உள்ள மாநெலி தோட்டத்தை சேர்ந்த ஜீ.பெரியம்மாவிற்க்கு அரை பவுன் தங்கம் எழுபத்தி ஜந்து ஆயிரம் ரொக்க பணம் பரிசாக தோட்ட நிர்வாகம் வழங்கப்பட்டது. மூன்றாம் இடத்தை பெற்று கொண்ட சாமிமலை பகுதியில் உள்ள ஸ்டாக்ஹோம் தோட்டத்தை சேர்ந்த வீ.இதயவாணிக்கு அரை பவுன் தங்கம் மற்றும் ஜம்பது ஆயிரம் ரூபாய் ரொக்கம் பணம்…
தென்மேற்கு பருவப்பெயர்ச்சி ஆரம்பம்; அடுத்துவரும் சில நாட்களில் அதிக மழைவீழ்ச்சி எதிர்பார்ப்பு.
நாடு முழுவதும் அடுத்த சில நாட்களில் தென்மேற்கு பருவப்பெயர்ச்சி நிலைமை படிப்படியாக தாபிக்கப்படுவதற்கான சாத்தியம் காணப்படுகின்றது. மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. சப்ரகமுவ மாகாணத்திலும் காலி, மாத்தறை மற்றும் களுத்துறை மாவட்டங்களிலும் சில இடங்களில்75 மி.மீ க்கும் அதிகமான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது. வடமேல் மாகாணத்தில் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஊவா மாகாணத்திலும் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் சில இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. நாடு முழுவதும்அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 40-45 கிலோ மீற்றர் வரையான வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப்பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால்…
கொரோனா தொற்று போன்ற அறிகுறிகளுடன் குழந்தைகள், முதியவர்கள் அதிகம் பாதிக்கப்படும் வைரஸ் தொற்று தொடர்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த தொற்றுக்கு இதுவரை தடுப்பூசிகள் அல்லது வைரஸ் எதிர்ப்பு மருந்துகள் இல்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவில் பரவிவுள்ள இந்த அதிகம் அறியப்படாத சுவாச வைரஸின் அண்மைய அதிகரிப்பு குறித்து இலங்கை சுகாதார அதிகாரிகளும் விழிப்பு நிலையை அறிவித்துள்ளனர். தாம் இந்த வைரஸின் புதிய வளர்ச்சிகளை உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாக இலங்கையின் சுகாதார அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர். வெளிநாட்டில் பரவும் புதிய நோய் குறித்து தமது அமைச்சு தொடர்ந்தும் விழிப்புடன் உள்ளதாக வைத்தியர் அன்வர் ஹம்தானி தெரிவித்துள்ளார். அது இலங்கைக்கு அச்சுறுத்தலாக அமையும் என்பதால், அமெரிக்காவில் பரவும் வைரஸ் தொடர்பில் தாம் நிலைமையை கண்காணித்து வருவதாக அவர் கூறியுள்ளார் அமெரிக்காவிற்கு வெளியே இது ஆபத்தான கட்டத்தை எட்டவில்லை என்றாலும், எல்லைகளுக்கு அப்பால் அது பரவும் வாய்ப்பை கொண்டுள்ளது என்று சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது. ஹியூமன் மெட்டாப்…