Author: Thana

மஹரகம புற்றுநோய் வைத்தியசாலையில் 4 கோடி ரூபாவுக்கு கொள்வனவு செய்யப்பட்ட தானியங்கி தடுப்பூசி இயந்திரம் தற்போது செயலிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. புற்றுநோயாளர்களுக்கான சிகிச்சையில் வழங்கப்படும் கதிரியக்க SDG மருந்தை உட்செலுத்துவதற்கு, சிகிச்சை சேவைகளை மேற்கொள்ளும் சுகாதார ஊழியர்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு தானியங்கி தடுப்பூசி இயந்திரம் கொள்வனவு செய்யப்பட்டுள்ளது. எவ்வாறாயினும், இந்த தானியங்கி தடுப்பூசி இயந்திரத்திற்கு பயன்படுத்தப்படும் வடிகுழாய்கள் தீர்ந்து விட்டதன் காரணமாக அதனை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. குறித்த வடிகுழாய்களை கொள்வனவு செய்ய போதியளவு பணம் இல்லாதமையே இதற்கு பிரதான காரணமாகும் என அரச கதிரியக்க தொழிநுட்ப வல்லுநர்கள் சங்கத்தின் தலைவர் சானக்க தர்மவிக்ரம தெரிவித்துள்ளார்.

Read More

பத்தரமுல்லையில் உள்ள குடிவரவு குடியல்வு திணைக்கள கட்டடத்தில் சடலமொன்று மீட்கப்பட்டுள்ளது. அந்த கட்டடத்தில் உள்ள கதிரை ஒன்றில் இருந்து குறித்த சடலம் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அந்த திணைக்களத்தின் சுத்தப்படுத்தல் பிரிவில் பணியில் இருந்த ஹோகந்தர பகுதியை சேர்ந்த 73 வயதுடைய ஒருவரே உயிரிழந்துள்ளார். உயிரழந்தவரின் சடலம் பிரதே பரிசோதனைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

Read More

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் கலவரத்தில் ஈடுபட்ட 31 மாணவர்களுக்கு வகுப்புத் தடை விதிக்கப்பட்டுள்ளது. பல்கலைக்கழக முகாமைத்துவ கற்கைகள் மற்றும் வர்த்தக பீடத்தைச் சேர்ந்த 31 மாணவர்களுக்கு இந்தத் தடை விதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. கடந்த வெள்ளிக்கிழமை, பல்கலைக்கழகத்தின் இரண்டாம் ஆண்டு மற்றும் மூன்றாம் ஆண்டு மாணவர்களின் இரு குழுக்களிடையே வாக்குவாதம் ஏற்பட்டது, பின்னர் அது சண்டையாக மாறியது. மோதல் தொடர்பான ஆரம்ப விசாரணையின் பின்னர், சம்பவத்துடன் தொடர்புடையதாகக் கண்டறியப்பட்ட இரண்டாம் வருட மாணவர்கள் 16 பேர் மற்றும் மூன்றாம் வருட மாணவர்கள் 15 பேர் பல்கலைக்கழக வளாகத்திற்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, பல்கலைக்கழக விடுதிகளுக்குள் மாணவர்கள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

Read More

மழை கடந்த 24 மணி நேரத்தில் மி.மீ. 75ஐ தாண்டியிருப்பதால், தொடர்ந்து மழை பெய்தால், நிலச்சரிவு, பாறை சரிவு, மண் சரிவு போன்ற அபாயங்கள் குறித்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் ஒரு அறிக்கையில், ஆபத்து குறித்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும் மற்றும் தேவைப்பட்டால் பாதுகாப்பான இடத்திற்கு செல்ல தயாராக இருக்க வேண்டும் என்று கூறுகிறது. களுத்துறை மாவட்டத்தின் புலத்சிங்ஹல மற்றும் பாலிந்தநுவர பிரதேசங்களை மண்சரிவு அபாயம் உள்ள பகுதிகளாக முன்னர் குறித்த நிறுவனம் அடையாளம் கண்டுள்ளது.

Read More

ரயில் தடம் புரண்டதால் மலையக வீதியில் ரயில் போக்குவரத்து தடைபட்டுள்ளது. கண்டியில் இருந்து கொழும்பு கோட்டை நோக்கி பயணித்த செங்கடகல மெனிகே ரயில் கடிகமுவ மற்றும் ரம்புக்கணை ரயில் நிலையத்திற்கு இடையில் தடம் புரண்டுள்ளது. இதன் காரணமாக மலையகப் ரயில் வீதியின் ரயில் சேவை தடைப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

Read More

மாவனல்லை ஹிங்குளோயா மஸ்ஜிதுல் ஹுதா பள்ளிவாயலில் சுமார் 35 வருடங்கள் நிர்வாக சபையில் சேவையாற்றி பள்ளிவாயலிக்கும் ஊருக்கும் பல சேவைகளைச் செய்த டாக்கடர் .ஹமீட்  ஏ அஸீஸ் அவர்களை பொன்னாடை போர்த்தி கௌரவிக்கும் நிகழ்வு ஜூம்ஆ தொழுகையின் பின்னர் பள்ளிவாயிலில் நடைபெற்றது. இவரோடு அல்ஹாஜ் முபாரக் மற்றும் சபுமல் நிறுவனத்தின் உரிமையாளர், அல்ஹாஜ் கமால்தீன் அவர்களும் கௌரவிக்கப்பட்டனர். மேலும் கடந்த பல வருடங்களாக நிர்வாக சபையில் பணியாற்றியர்களை கௌரவிக்கும் நிகழ்வொன்று அதே தினத்தில் இஷாத் தொழுகையின் பின்னர் மாவனல்லை ராழியா வரவேற்பு மண்டபத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்வுகள் பள்ளிவாயலின் தந்போதைய நிர்வாக சபையினரால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. இந்நிகழ்வுக்கு பிரதம அதீதியாக வருகை தந்திருந்த முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் இசட்.ஏ.எம். பயைசல் அங்கு உரையாற்றும் போது, பிரச்சினைகளும் போட்டிகளும் காணப்படும் சூழ்நிலையில் பதவியில் இருந்த ஒரு பள்ளிவாயல் நிர்வாக சபையை கௌரவிப்பது முன்னுதாரணமான செயற்பாடாகும் என தெரிவித்த அவர், தான்…

Read More

இன்று நள்ளிரவு முதல் 12.5 கிலோ கிராம் சமையல் எரிவாயு கொள்கலன் விலை 452 ரூபாவினால் குறைக்கப்படும் என லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்துள்ளார். இதன்படி அதன் புதிய விலை 3,186 ரூபாவாகும். அத்துடன், 05 கிலோ கிராம் எரிவாயு கொள்கலன் 181 ரூபாவினால் குறைக்கப்பட்டு அதன் புதிய விலை 1,281 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 2.3 கிலோ எடை கொண்ட எரிவாயு கொள்கலன் விலையும் ரூ.83 குறைக்கப்பட்டு, புதிய விலையாக ரூ.598 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Read More

உலகின் மிகப்பெரிய கடல் ஆமை இனமாகக் கருதப்படும் ஆமை ஒன்று நேற்று (03) பிற்பகல் பாணந்துறை கடற்கரையில் கரை ஒதுங்கியுள்ளது. இலங்கையைச் சுற்றியுள்ள கடற்பரப்பில் இந்த ஆமைகள் மிகவும் அரிதாகவே காணப்படுவதாக பாணந்துறை கரையோரக் பொலிஸ் அதிகாரிகள் தெரிவித்தனர் பாணந்துறை கடற்கரையில் கரை ஒதுங்கிய ஆமை 6 – 7 அடி நீளமுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை, அந்தமான் மற்றும் நிக்கோபார் போன்ற வெப்பமண்டல தீவுகளின் கடற்கரைகளுக்கு இந்த கடல் ஆமைகள் முட்டையிடுவதற்காக மட்டுமே செல்வது வழக்கம். இவை கரைக்கு வரும் நேரத்தில் முட்டையிடும், முட்டையிட்ட பிறகு, அவை உடனடியாக கடலுக்குத் திரும்புகின்றன மேலும் குறித்த கடல் ஆமைகள் 1970 முதல் அழிந்து வரும் உயிரினங்களின் பட்டியலில் உள்ளன.

Read More

இந்தியாவின் கிழக்கு ஒடிசா மாநிலத்தில் ரயில்கள் மோதி விபத்துக்குள்ளானமை தொடர்பில் கேள்வியுற்று மிகுந்த கவலை அடைந்ததாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இரங்கல் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இந்திய பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கு அனுப்பியுள்ள விசேட செய்தியில் துயரமான இந்த தருணத்தில் அயல் நாட்டவர்கள் என்ற வகையில் இலங்கை அரசாங்கமும் மக்களும் இந்தியாவுடன் கைகோர்த்து நிற்போம் எனவும் உறுதியளித்துள்ளார். பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவிக்கும் அதேநேரம் காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திப்பதாகவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். எதிர்பாராத விதமாக விபத்துக்கு முகம்கொடுத்துள்ள இந்திய அரசாங்கத்திற்கு வலிமையும் தைரியமும் கிட்ட வேண்டுமென பிரார்த்திப்பதாகவும் ஜனாதிபதியின் விசேட செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

Read More

லிந்துலை – ஹென்போல்ட் தோட்ட அருள்மிகு ஶ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தின் வருடாந்த தேர்த்திருவிழாவின் பறவைகாவடியும் தீமிதிப்பு நிகழ்வும் இன்றைய தினம் (03) இடம்பெற்றது. கடந்த வியாழக்கிழமை (01) கரகம் பாலித்தல் நிகழ்வோடு ஆரம்பமான தேர்திருவிழாவில் நேற்றை தினம் வெள்ளிக்கிழமை (02) மருதை வீரன் குதிரை வாகனத்தில் அம்மன் ஊர்வலம் இடம்பெற்றது. மேலும் இன்றைய தினத்தில் இடம்பெற்ற தீ மிதிப்பு நிகழ்வில் கலந்துகொண்ட பக்தர்களுக்கு அன்னதானமும் வழங்கி வைக்கப்பட்டது. – ராசையா கவிஷான் –

Read More