Author: Thana
36 வயதுடைய தாயையும் 14 வயதுடைய மகளையும் தாக்கி பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் இரு இராணுவ வீரர்கள் கிராந்துர கோட்டை பொலிஸாரினால் கைது.
கிராந்துருகோட்டை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பாலரக்கிந்த கிராந்துருகோட்டை பகுதியில் வீடொன்றில் வசித்து வந்த 36 வயதுடைய தாயையும் 14 வயதுடைய குறித்த தாயின் மகளையும் தாக்கி இருவரையும் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியதாக தியத்தலாவ இராணுவ முகாமில் கடமையாற்றும் இராணுவ வீரர் ஒருவரும் கொட்டகலை இராணுவ முகாமில் கடமையாற்றும் மேலும் ஒரு இராணுவ வீரரும் கிராந்துருகோட்டை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த இரண்டு சந்தேக நபர்களையும் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக கிராந்துருகோட்டை பொலிஸார் தெரிவித்தனர். ராமு தனராஜா
மொனராகலை ஒக்கம்பிட்டிய பொலிஸ் பிரிவில் மினிபுரகம கும்புக்கன் ஓய ஆற்றில் நீராடச் சென்ற மாணவன் நீரில் அடித்துச் செல்லப்பட்டுள்ளார். ஒக்கம்பிட்டிய பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட மாலியாவில ஒக்கம்பிட்டிய பகுதியை சேர்ந்த 17 வயதுடைய மாணவன் தனது பெற்றோருடன் மினிபுரகம பெரளியமங்கட கும்புக்கன் ஓய ஆற்றில் நீராடச் சென்ற வேளை நீரில் அடித்துச் செல்லப்பட்டுள்ளார். குறித்த மாணவன் மொனராகலை பிரபல பாடசாலை ஒன்றின் மாணவர் என்பதுடன் தற்போது இடம்பெறும் சாதாரண தர பரீட்சையினை எழுதும் மாணவர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலதிக விசாரணைகளை ஒக்கம்பிட்டிய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
மஸ்கெலிய நிருபர் செ.தி.பெருமாள்.03.06.2023. இன்று மதியம் 12 மணிக்கு மஸ்கெலியா பேருந்து தரிப்பிடத்தில் அன்னதானம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை தனியார் பேருந்து உரிமையாளர்கள் மற்றும் தனியார் பேருந்து சாரதிகள் தனியார் பேருந்து நடத்துனர்கள் மேற்கொண்டனர். நிகழ்வில் மஸ்கெலியா சுமனாராம விகாரையின் பௌத்த குருவான தப்போ வன தேரரின் மத போதனை நிகழ்வு மஸ்கெலியா சன்முக நாதர் ஆலய குருக்கள் கிறிஸ்தவ தேவாலய ஆயர் மஸ்கெலியா ஜும்மா பள்ளிவாசல் மத குரு ஆகியோர் மத அனுட்டானம் இடம் பெற்றது. அனைத்து தொடர்ந்து அங்கு மஸ்கெலியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி புஷ்பகுமார மற்றும் ரக்காடு கிராமத்தில் இயங்கும் அதிரடி படையினர் நகர வர்த்தகர்கள் கலந்து கொண்டதுடன் தனியார் பேருந்து சாரதிகள் தனியார் பேருந்து நடத்துனர்கள் மற்றும் கிராம மக்கள் அன்னதானம் நிகழ்வில் கலந்து கொண்டனர்.
18 வயதிற்கு மேற்பட்ட அனைவரும் வரி தொடர்பில் உள்நாட்டு இறைவரி திணைக்களத்தில் கோப்பு ஒன்றை திறப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மே மாதம் 31 ஆம் திகதி இது தொடர்பான வர்த்தமானி வௌியிடப்பட்டுள்ளது. அதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கு ஏற்ப 2023 ஆம் ஆண்டு டிசம்பர் 31 ஆம் திகதி 18 அல்லது அதற்கு மேற்பட்ட வயதுடைய அனைவரும் அடுத்த வருடம் ஜனவரி முதலாம் திகதியில் இருந்து அமுலுக்கு வரும் வகையில் கோப்பொன்றை திறக்க வேண்டும். மேலும் 14 துறைகளை சேர்ந்தவர்களும் கோப்புகளை திறக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அவையாவன… 1. இலங்கை மருத்துவ சபையில் பதிவு செய்யப்பட்ட வைத்தியர்கள் 2. இலங்கை பட்டயக் கணக்காய்வாளர் நிறுவனத்தின் உறுப்பினர்கள் 3. சான்றளிக்கப்பட்ட மேலாண்மை கணக்காளர்கள் நிறுவனத்தின் உறுப்பினர்கள் 4. இலங்கை பொறியியல் நிறுவனத்தின் உறுப்பினர்கள் 5 தொழில்முறை வங்கியாளர்கள் சங்கத்தின் உறுப்பினர்கள் 6 இலங்கை கட்டடக்கலை நிறுவகத்தின் உறுப்பினர்கள் 7 இலங்கை நில அளவையாளர் நிறுவனத்தின்…
மஸ்கெலியா விசேட நிருபர்.செ.தி.பெருமாள்.03.06.2023. மஸ்கெலியா பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதியில் உள்ள மஸ்கெலியா நகருக்கும் புரவுன்லோ தோட்ட மக்களின் நலனுக்காக நகரை அண்டிய பகுதியில் உள்ள ஆற்றங்கரையில் அந்தியொட்டி கிரியைகள் மடம் அமைக்க இன்று காலை 10 மணிக்கு சுப வேலையில் அடிக்கல் நாட்டல் இடம்பெற்றது. இந்த நிகழ்வில் புரவுன்லோ தோட்ட மக்கள் மற்றும் இளைஞர்கள் நகரில் உள்ள வர்த்தகர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். விசேட அதிதியாக மஸ்கெலியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி புஷ்பகுமார கலந்து கொண்டு அடிக்கல் நாட்டினார். இந்த கிரியை மண்டபம் கட்ட நகரவர்த்தகர்கள் மற்றும் புரவுன்லோ தோட்ட மக்களின் உதவிகள் வழங்கப்படும் என புரவுன்லோ தோட்ட இளைஞர் மன்ற தலைவர் முத்து தெரிவித்தார்.
மஸ்கெலியா விசேட நிருபர் செ.தி.பெருமாள்.03.06.2023. இன்று காலை 10 மணிக்கு மஸ்கெலியா மாவட்ட வைத்தியசாலையில் கடலை அவித்து தானம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை மாவட்ட வைத்தி அதிகாரி எச்.ஈர்ஷாட் அவர்களும் வைத்திய சாலை அபிவிருத்தி சங்கம் மற்றும் வைத்தியசாலையில் பணிபுரியும் ஊழியர்கள் வைத்தியர்கள் மேற்கொண்டனர். நிகழ்வில் மஸ்கெலியா சுமனாராம விகாரையின் பௌத்த குருவான தப்போ வன தேரரின் மத போதனை நிகழ்வு இடம்பெற்றது. அதனைத் தொடர்ந்து அங்கு மஸ்கெலியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி புஷ்பகுமார மற்றும் ரக்காடு கிராமத்தில் இயங்கும் அதிரடி படையினர் நகர வர்த்தகர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
ஜெர்மனி நாட்டில் பாரிய வாகன விபத்து நிகழ்ந்துள்ள நிலையில், இந்த விபத்தில் யுவதி ஒருவர் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளார். 30ஆம் திகதியன்று ஜெர்மனியின் அதிவேக போக்குவரத்து பாதை ஆ 43 இல் கோர விபத்து ஏற்பட்டுள்ளது. குறித்த பெண் வாகனத்தை ஓட்டும் போது தனது வாகனத்தால் விபத்தை ஏற்படுத்தியுள்ளார். இந்த விபத்தின் போது 18 வயதுடைய யுவதி சம்பவ இடத்தில் பலியாகியுள்ளார். இந்நிலையில் அதிவேக போக்குவரத்தில் வந்த மற்றைய வாகனம் இவருடைய வாகனத்தில் மோதியதினால் பாரிய விபத்து ஏற்பட்டதாகவும் தெரியவந்துள்ளது. இந்த விபத்தில் 16 பேர் வரை காயப்பட்டுள்ளதாகவும் சிலர் வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டடுள்ள நிலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரியவந்துள்ளது. மேலும் இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் தீவிர விசாரணை நடத்தி வருவதாகவும் தொரியவந்துள்ளது.
இலங்கை வரலாற்றில் மஹிந்த தேரரின் வருகை, சமய முக்கியத்துவம் வாய்ந்த ஒரு மைல்கல் என்பது மறுக்க முடியாதது.
இலங்கை வரலாற்றில் மஹிந்த தேரரின் வருகை, சமய முக்கியத்துவம் வாய்ந்த ஒரு மைல்கல் என்பது மறுக்க முடியாதது. மேலும், அதன் மூலம் நாம் எண்ணற்ற சமூக, கலாசார மற்றும் அரசியல் மதிப்புகளை பெற்றுள்ளோம் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். பொசன் பௌர்ணமி தின வாழ்த்து செய்தியில் அவர் இதனை தெரிவித்துள்ளார். மஹிந்த தேரர் போதித்த வாழ்க்கை முறையின் மூலம் பெருமைமிக்க நாடாகவும் தேசமாகவும் நாம் முன்னோக்கி வந்துள்ளோம். குறிப்பாக குளங்கள், வயல்கள், தூபிகள் ஆகியவற்றினால் கட்டமைக்கப்பட்ட தன்னிறைவுப் பொருளாதாரத்திற்கு வழிகாட்டிய தர்ம கருத்தாடல்கள் மற்றும் அரசியல் சமூக கலாசார கருத்தாடல்களும் மஹிந்த தேரரின் வருகையுடனேயே உருவாகின. இந்த பொசன் பௌர்ணமி தினத்தில், நாட்டில் ஏற்பட்ட, தற்போது படிப்படியாக தீர்க்கப்பட்டு வரும் அரசியல், சமூக பொருளாதார குழப்பங்கள் தீர்ந்து இலங்கையை உலகின் மீண்டும் முன்னேற்றம் அடைந்த நாடாக உயர்த்துவதற்கு இந்த பௌர்ணமி தினத்தில் நாம் அனைவரும் உறுதிபூணுவோம். இந்த பொசன் பௌர்ணமி…
அரச துறையின் அனுசரணையில் ஆரம்பிக்கப்பட்ட இலங்கையின் முதலாவது உருளைக் கிழங்கு சீவல் தயாரிக்கும் உற்பத்தித் தொழிற்சாலை ஆரம்பிப்பதற்கான ஆராய்ச்சிகள் தற்போது வெற்றியடைந்துள்ளன. விவசாய அமைச்சின் சிறியளவிலான விவசாயக் கைத்தொழிலில் பங்கேற்பதற்கான (எஸ்பிபி) திட்டம் மற்றும் பண்டாரவெள கஹந்தேவெல விவசாய மக்கள் சங்கத்துடன் இணைந்து இந்நிகழ்ச்சித் திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. பண்டாரவெள கஹந்தேவெலயில் ஆரம்பிக்கப்பட்டுள்ள இவ் உருளைக்கிழங்கு சீவல் தொழிற்சாலையின் உற்பத்திகளை ஆராய்வு செய்ததில் தற்போது வெற்றி கிடைத்துள்ளதாகவும், விவசாய மக்கள் சங்கத்தினால் நேற்று முன்தினம் (31) விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீரவிற்கு தெரிவிக்கப்பட்டது. நூறு மில்லியன் ரூபா செலவில் நிருமாணிக்கப்பட்ட இந்த உருளைக்கிழங்கு சீவல் ஏற்றுமதியை இலக்காகக் கொண்டு நாட்டில் உருளைக்கிழங்கில் பெறுமதி சேர்க்கப்பட்ட உற்பத்தியாக சந்தைக்கு அனுப்பும் நோக்கில் நடைமுறைப்படுத்தப்படும் திட்டம் என விவசாய அமைச்சர் தெரிவித்தார். நாட்டில் சில உணவு பதப்படுத்தும் நிறுவனங்களினால் உருளைக்கிழங்கு சீவல் ஏற்றுமதி செய்யப்படுவதுடன் 2021 வருடத்தில் அதற்காக 21 மில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளது. அவ்வாறே…
சிறிய மற்றும் நடுத்தர தொழில் முயற்சிகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பான ஒத்திவைப்பு விவாதம் 7ஆம் திகதி பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ஷ தலைமையில் கடந்த 26ஆம் திகதி கூடிய பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுக் கூட்டத்தில் எதிர்வரும் பாராளுமன்ற அமர்வு வாரத்தில் எடுத்துக் கொள்ளப்படவுள்ள சபை அலுவல்கள் தீர்மானிக்கப்பட்டிருப்பதாக பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானீ ரோஹணதீர தெரிவித்தார். இதற்கமைய ஜூன் 7 புதன்கிழமை தவிர ஒவ்வொரு நாளும் மு.ப 9.30 மணி முதல் மு.ப 10.30 மணி வரை வாய்மூல விடைக்கான கேள்விகளுக்காக நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. பாராளுமன்றம் ஜூன் 6 ஆம் திகதி செவ்வாய்க் கிழமை மு.ப 9.30 மணிக்குக் கூடவிருப்பதுடன், மு.ப 10.30 மணி முதல் பி.ப 5.00 மணி வரை சிவில் விமான சேவைச் சட்டத்தின் கீழ் 2303/18 மற்றும் 2304/46 இலக்க வர்த்தமானி அறிவித்தல்களில் பிரசுரிக்கப்பட்ட ஒழுங்குவிதிகள், வணிகக் கப்பற்றொழில் சட்டத்தின் கீழ் 2261/49, 2261/50, 2261/51…