Author: Thana
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர், நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் வடமராட்சியில் மக்கள் சந்திப்பு ஒன்றில், கலந்துகொண்டிருந்தவேளை உந்துருளியில் பிரவேசித்த இருவர், கைத்துப்பாக்கியை காண்பித்து அச்சுறுத்த முயற்சித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கட்சியின் உத்தியோகப்பூர்வ ட்விட்டர் தளத்தில் இந்தச் சம்பவம் தொடர்பில் தகவல் வெளியிடப்பட்டுள்ளதுடன், அது தொடர்பான காணொளி ஒன்றும் வெளியிடப்பட்டுள்ளது.இந்தநிலையில், உடனடியாகவே அவர்கள் இருவரையும் மக்கள் பிடிக்க முயற்சித்தபோது, கைத்துப்பாக்கியுடன் பிரவேசித்த நபர் தப்பியோடிய நிலையில், மற்றைய நபர் பிடிபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை எதிர்நோக்கும் மருந்துப் பற்றாக்குறைக்கு மேலதிகமாக மனித வளப் பற்றாக்குறையும் நாட்டின் சுகாதாரத் துறையின் எதிர்காலத்தை மோசமாகப் பாதிக்கும் என வைத்தியர்களின் பிரதான தொழிற்சங்கம் எச்சரித்துள்ளது. “மருந்து மாத்திரமல்ல, அதில் மனித வளம் மற்றும் ஆரோக்கியம் குறித்த பிரச்சினையும் உள்ளது. வைத்திர்கள் மாத்திரமன்றி சுகாதாரத்துறையில் உள்ள பலரும் இதை கைவிடும் நிலை ஏற்பட்டுள்ளது. ” கடந்த கொவிட் தொற்றின் போது எதிர்கொண்டது போன்ற உயர் தொற்றுநோய் நிலைமை மீண்டும் இந்த நாட்டில் ஏற்பட்டால் அதனை நிர்வகிப்பது இலகுவானதல்ல என அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் பேச்சாளர் வைத்தியர் ஷமல் விஜேசிங்க தெரிவிக்கின்றார். அரச வைத்தியசாலைகளில் கடமையாற்றிய பெருமளவிலான வைத்தியர்கள் மற்றும் விசேட வைத்தியர்கள் தற்போது நாட்டை விட்டு வெளியேறி வருவதாக கடந்த காலங்களில் ஊடகங்கள் தொடர்ச்சியாக செய்தி வெளியிட்டிருந்தன. நாட்டில் தற்போது 111 மருந்துகளுக்கு தட்டுப்பாடு நிலவுவதாக கூறும் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல, பற்றாக்குறைக்கு உடனடி தீர்வை வழங்க அரசாங்கம்…
(க.கிஷாந்தன்) வேண்டும் வேண்டும் அநியாயமாக மரணமடைந்த பதுளையை சேர்ந்த இளம் தாய் ராஜ்குமாரிக்கு நீதி வேண்டும் அத்துடன் இத் தாயின் மரணத்திற்கு காரணமாக இருந்தவர்களுக்கு பக்கச்சார்பின்றி கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும் என பல கோரிக்கைகளை முன்வைத்து நுவரெலியா கந்தப்பளை நகர மத்தியில் ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெற்றது. சமூக அபிவிருத்தி நிறுவகத்தின் கீழ் இயங்கும் கிராம அபிவிருத்தி மன்றங்களின் ஒன்றியம் இணைந்து திட்ட உத்தியோகஸ்தர்களான பி. அம்பிகை மற்றும் ஜே.கிருஷாந்தி ஆகியோரால் முன்னெடுத்த இந்த போராட்டத்தில் கந்தப்பளை மற்றும் இராகலை பகுதிகளில் உள்ள தோட்டங்களை சேர்ந்த மக்கள் கலந்துக் கொண்டனர். இதன் போது குடும்ப பொருளாதார சுமையை சுமந்து கொண்டு பதுளையில் இருந்து கொழும்பில் நடிகை சுதர்மா நித்திகுமாரியின் வீட்டில் பணியாளராக வேலை செய்து வந்த இந்த இளம் தாய் மீது திருட்டு குற்றம் சுமத்தி பொலிஸ் முறைப்பாடு செய்து வெலிக்கடை பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று அங்கு விசாரணையில் மரணமடைந்துள்ளார்.…
மலையக பெருந்தோட்ட சமூகம் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு ஐக்கிய இராச்சியத்தின் பங்களிப்பும் அவசியம் – அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவிப்பு.
மலையக பெருந்தோட்ட சமூகம் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு ஐக்கிய இராச்சியத்தின் பங்களிப்பும் அவசியம். அதற்காக உரிய ஏற்பாடுகளை செய்து கொடுக்குமாறு ஐக்கிய இராச்சியத்தின் உயர்ஸ்தானிகர் சாரா ஹல்டனிடம், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சருமான ஜீவன் தொண்டமான் கோரிக்கை விடுத்துள்ளார். நுவரெலியாவுக்கு பயணம் மேற்கொண்டிருந்த ஐக்கிய இராச்சியத்தின் உயர்ஸ்தானிகர் சாரா ஹல்டன் அமைச்சர் ஜீவன் தொண்டமானுடன் நேற்று (01.06.2023) பேச்சு நடத்தினார். நெருக்கடியான காலகட்டத்தில் இலங்கைக்கு ஐக்கிய இராச்சியம் வழங்கிவரும் ஒத்துழைப்புகளுக்கு மலையக மக்களின் சார்பில் நன்றி தெரிவித்த ஜீவன் தொண்டமான், மலையக மக்களின் தற்போதைய நிலைவரம் பற்றியும் எடுத்துரைத்துள்ளார். அத்துடன், மலையக மக்களுக்கான பொருளாதார மேம்பாட்டுக்கான வாய்ப்புகளை உருவாக்குவதற்கான வழிமுறைகள் மற்றும் அரசால் முன்னெடுக்கப்படும் வேலைத்திட்டங்கள் சம்பந்தமாகவும் இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளன.
மஸ்கெலியா விசேட நிருபர்.செ.தி.பெருமாள்.02.06.2023. கடந்த சில மாதங்களாக மவுசாகல நீர் தேக்கத்தின் நீர் மட்டம் வெகுவாக குறைந்துள்ளது. இவ் வேளையில் சட்ட விரோதமாக மாணிக்க கற்கள் அகழ்வு இடம் பெற்று வருகிறது. இந்த நீர் தேக்கம் மிக பாதுகாப்பு வலயமாக உள்ள போதிலும் சட்ட விரோதமாக மாணிக்க கற்கள் அகழ்வில் ஈடுபட்டு வருகின்றனர். இது குறித்து நீர் மின் நிலைய அதிகாரி மற்றும் பொலிசார் கவனம் செலுத்த வேண்டும் என கோரிக்கை விடுக்கின்றனர் இப்பகுதி மக்கள். மாணிக்க கற்கள் அகழ்வு இடம் பெற்ற பகுதிகளில் பாரிய அளவில் குழிகள் ஏற்பட்டு உள்ளது.
நாளைய (03) பொசன் பௌர்ணமி மத அனுஷ்டான தினத்தையிட்டு 440 கைதிகளுக்கு, ஜனாதிபதி விசேட பொது மன்னிப்பின் கீழ் விடுதலை செய்யவுள்ளதாக, சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. அரசியலமைப்பின் 34ஆவது பிரிவிற்கு அமைய, ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு அமைய இவ்விசேட பொது மன்னிப்பு வழங்கப்படவுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. அதற்கமைய, நாடளாவிய ரீதியில் உள்ள சிறைச்சாலைகளையும் உள்ளடக்கியதாக 434 ஆண் கைதிகள் 06 பெண் கைதிகள் ஆகிய 440 கைதிகளுக்கு இவ்வாறு பொது மன்னிப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. சிறு குற்றங்களுடன் தொடர்புடையோர், தண்டப் பணம் செலுத்த முடியாதோர், தண்டனைக் காலம் நிறைவடையவுள்ளோர் உள்ளிட்டோரே இவர்களில் பெரும்பாலானோர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் இருந்து கடத்தப்பட்டதாகக் கூறப்படும் சுமார் 20 கோடி இந்திய ரூபா பெறுமதியான தங்கம் தமிழகத்தில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பில் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த செவ்வாய்க்கிழமை காலை இலங்கையில் இருந்து தங்கம் கடத்தி வரப்படுவதாகக் கிடைத்த தகவலையடுத்து, இந்தியாவின் மத்திய வருவாய் புலனாய்வுத்துறை அதிகாரிகள் மற்றும் இந்திய கடலோர காவல் படையினர் தமிழக கடற்பரப்பில் கூட்டு ரோந்துப் பணியில் ஈடுபட்டனர். இதன்போது, பதிவு இலக்கமற்ற Fiber படகு ஒன்றை மணலி தீவு அருகே அவதானித்த இந்திய கடலோர காவல் படையினர் அங்கு விரைந்த போது அதிலிருந்தவர்கள் படகில் இருந்த தங்கத்தை கடலில் வீசி தப்பிச்செல்ல முயற்சித்துள்ளனர். இதன்போது, படகை மடக்கிப் பிடித்த அதிகாரிகள் அதிலிருந்த மூவரை கைது செய்து விசாரணை நடத்தியுள்ளனர். அவர்கள் வழங்கிய தகவலின் அடிப்படையில், செவ்வாய்க்கிழமை இரவு தமிழகத்தின் வேதாளையை சேர்ந்த மேலும் இருவரை படகொன்றுடன் கைது செய்த அதிகாரிகள், சுமார் 21 கிலோகிராம்…
சுமார் 300 முதல் 400 வரையிலான இறக்குமதி பொருட்களின் இறக்குமதி கட்டுப்பாடுகளை தளர்த்த தீர்மானித்துள்ளதாக, நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்தார். குறித்த இறக்குமதி கட்டுப்பாடுகளை அடுத்த வாரம் முதல் தளர்த்த நடவடிக்கை எடுப்பதாகவும் நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்தார்.
கொஹுவல மேம்பாலத்தின் நிர்மாணப் பணிகள் திட்டமிட்டபடி பூர்த்தி செய்யப்படாமையால், எதிர்வரும் ஜுலை மாதம் 31ஆம் திகதி வரை பணிகளை நீடிக்க வீதி அபிவிருத்தி அதிகார சபை தீர்மானித்துள்ளது. இதனையடுத்து இன்று (02) முதல் எதிர்வரும் 31 ஆம் திகதி வரை போக்குவரத்து மட்டுப்படுத்தப்படவுள்ளதால் மாற்று வீதிகளை பயன்படுத்துமாறு பொலிஸார் கோரிக்கை விடுத்துள்ளனர். இதன்படி, ஹொரணையில் இருந்து கொழும்பு நோக்கி பயணிக்கும் போது, பாதை 120 இல் பப்பிலியான சந்தியில் இருந்து தெற்கே திரும்பி கம்சபை சந்தி ஊடாக உயர் மட்ட வீதியில், பப்பிலியான சந்தியிலிருந்து திரும்பி, நடிமால ஊடாக தெஹிவளை சென்று காலிவீதி ஊடாக கொழும்பை சென்றடைவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த மாத இறுதிக்குள் பிளாஸ்டிக் சார்ந்த உற்பத்திகள் முற்றாக தடை செய்யப்படவுள்ளன. சுற்றாடால்துறை அமைச்சின் செயலாளர் விஷேட வைத்தியர் அனில் ஜாசிங்க இதனைத் தெரிவித்துள்ளார். பிளாஸ்டிக் இடியப்ப தட்டு, மாலை, கரண்டி, கத்தி உள்ளிட்ட பல பொருட்களுக்கு தடை விதிக்கப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.