Author: Thana
மேல், சப்ரகமுவ மற்றும் தென் மாகாணங்களில் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அத்துடன், காலி, மாத்தறை மற்றும் களுத்துறை மாவட்டங்களில் சில இடங்களில் 50 மில்லிமீற்றருக்கு மேல் ஓரளவு பலத்த மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதேவேளை, வடமேற்கு மாகாணங்களில் பல தடவைகள் மழை பெய்யும். மத்திய, ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களில் மாலை அல்லது இரவு வேளையில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும். இடியுடன் கூடிய மழையின் போது தற்காலிகமாக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். கடல் பகுதிகள்: புத்தளத்திலிருந்து கொழும்பு, மாத்தறை மற்றும் காலி ஊடாக அம்பாந்தோட்டை வரையான கடற்பரப்புகளில் பல இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும். நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்று…
இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் முன்னாள் தலைவரும் பொதுச் செயலாளருமான ஆறுமுகன் தொண்டமானின் நினைவாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் விசேட நினைவு முத்திரை மற்றும் கடித உறை என்பன (29) ஜனாதிபதி அலுவலகத்தில் வெளியிடப்பட்டது. வெகுசன ஊடகம் மற்றும் போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தனவினால் நினைவு முத்திரையும் கடித உறையும் ஜனாதிபதிக்கு வழங்கி வைக்கப்பட்டன. இதன்போது, பிரதமர் தினேஷ் குணவர்தன, சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் ஆர். சம்பந்தன் மற்றும் ஆறுமுகன் தொண்டமானின் மனைவி திருமதி.ராஜலட்சுமி தொண்டமான் ஆகியோருக்கு நினைவு முத்திரையும் கடித உறையும் வழங்கப்பட்டது. நீர் வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சரும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளருமான ஜீவன் தொண்டமான், கிழக்கு மாகாண ஆளுநரும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவருமான செந்தில் தொண்டமான், அமைச்சர்களான நிமல் சிரிபால டி…
அரச சேவையை டிஜிட்டல் மயமாக்கும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் திட்டத்திற்கு அமைவாக கடவுச்சீட்டை இணையத்தின் ஊடாக விண்ணப்பிக்கும் புதிய முறை எதிர்வரும் தினங்களில் அறிமுகப்படுத்தப்படும் என குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளர் நாயகம் ஹர்ஷ இலுக்பிட்டிய தெரிவித்தார். அதற்கமைய, நாட்டின் எந்த பிரதேசத்தில் வசிப்பவரும் தனது கடவுச்சீட்டை மூன்று நாட்களுக்குள் வீட்டிலிருந்தே பெற்றுக் கொள்ள முடியும் என்று அவர் கூறினார். ஜனாதிபதி ஊடகப் பிரிவினால் தயாரிக்கப்பட்ட ‘101 கதா’ நிகழ்ச்சியில் அண்மையில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் www.immigration.gov.lk என்ற இணையத்தளத்திற்கு பிரவேசித்து கடவுச்சீட்டிற்கு விண்ணப்பிக்கலாம். பின்னர் அருகிலுள்ள பிரதேச செயலாளர் அலுவலகத்திற்கு சென்று விரல் அடையாளம் பதித்த பின்னர், ஒன்லைன் முறையின் மூலம் அதற்கான கட்டணத்தை செலுத்த வேண்டும். 50 பிரதேச செயலகங்களில் கைவிரல் அடையாளம் பெறும் இயந்திரங்கள் உட்பட தேவையான உபகரணங்களை ஏற்கனவே நிறுவியுள்ளதாகவும், தபால் திணைக்களம்…
எரிபொருள் விலைகளை இன்று நள்ளிரவு முதல் திருத்தியமைக்க இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தீர்மானித்துள்ளது. ஒக்டேன் 92 ரக பெற்றோல் ஒரு லீற்றர் 15 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன், ஒக்டேன் 95 ரக பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை 20 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன்படி ஒக்டேன் 92 லீற்றர் ஒன்றின் புதிய விலை 318 ரூபா. 95 ஒக்டேன் பெற்றோல் லீற்றர் ஒன்றின் புதிய விலை 385 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. லங்கா சுப்பர் டீசல் லீற்றர் ஒன்றின் விலை 10 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதன் புதிய விலை 340 ரூபாவாகும். மண்ணெண்ணெய் லீற்றர் ஒன்றின் விலை 50 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 245 ரூபாவாகும். மேலும், இலங்கை கைத்தொழில் மண்ணெண்ணெய் லீற்றர் 60 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது. இதன் புதிய விலை 270 ரூபாய். மண்ணெண்ணெய் லீற்றர் ஒன்றின் விலை 50 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 245 ரூபாவாகும். மேலும்,…
மஸ்கெலியா விசேட நிருபர்.செ.தி.பெருமாள்.31.05.2023. அரச பேருந்து தனியார் வேன் ஒன்றும் மஸ்கெலியா நோட்டன் நெடுஞ்சாலையில் திபட்டன் பகுதியில் மோதிக் கொண்டன. நோட்டன் பகுதியில் இருந்து வந்த அரச பேருந்தும் மஸ்கெலியா பகுதியில் இருந்து சென்ற தனியார் வேன் ஒன்றும் மோதி கொண்டன. பேருந்து சாரதி வேன் செல்வதற்கு இடம் ஒதுக்கி கொண்டு இருக்கையில், வேன் சாரதி வேனை நகர்த்த முற்பட்ட போது பேருந்தின் முன் பகுதி வேனில் உள்ள விபத்து தடுப்பு பப்பரில் பட்டுள்ளது. இதனால் ஆபத்துக்கள் எதுவும் ஏற்படவில்லை என நோட்டன் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார். சிரிது நேரம் போக்குவரத்து தடைப்பட்டது.
பாடசாலை மாணவர்களுக்கு போதை வில்லைகளை விற்பனை செய்யும் இருவர் பேலியகொடையில் கைது செய்யப்பட்டுள்ளனர். பேலியகொடை – துட்டுகெமுனு மாவத்தையில் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின் போது, சந்தேகநபர்கள் போதை வில்லைகளுடன் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் விசேட அதிரடிப்படை தெரிவித்துள்ளது. பேலியகொடையில் உள்ள பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து, விற்பனை செய்வதற்கு தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்த 400 பேதை வில்லைகள் இதன்போது கைப்பற்றப்பட்டுள்ளன. முல்லைத்தீவை சேர்ந்த 28 வயதான இரண்டு இளைஞர்களே போதைவில்லைகளுடன் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேகநபர்கள், மேலதிக விசாரணைகளுக்காக பேலியகொடை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
தாயும் மகளும் வீட்டில் வைத்துக் கொடூரமாக வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். இந்தச் சம்பவம் இரத்தினபுரி – காவத்தையில் நேற்று (30) மாலை இடம்பெற்றுள்ளது என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர். 45 வயதான தாயும், 22 வயதான மகளும் வீட்டில் தனியாக வசித்து வந்த நிலையில் இவ்வாறு வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளனர். சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டுவரும் பொலிஸார், 28 வயதுடைய இளைஞர் ஒருவரைச் சந்தேகத்தில் நேற்றிரவு கைது செய்துள்ளனர். கொலைச் சந்தேகநபர் போதைப்பொருள் பாவனைக்கு அடிமையானவர் என்று பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
யூரியா உரத்தின் விலையை குறைப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. விவசாய அமைச்சர் மகிந்த அமரவீர இதனை தெரிவித்தார். இதற்கமைய எதிர்வரும் 15ஆம் திகதி முதல் 50 கிலோகிராம் எடையுடைய யூரியா உரப் பொதியை 9 ஆயிரம் ரூபாவுக்கு விவசாயிகள் பெற்றுக்கொள்ள முடியும் என அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
மலையக மக்கள் முன்னணியின் பிரதி தலைவர் ஏ.லோரன்ஸ் தனது 71ஆவது வயதில் நேற்று காலமானார். பேராதனை போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று நண்பகல் அன்னார் காலமானார். 1952 ஆம் ஆண்டு பிறந்த அவர் தமது ஆரம்ப கல்வியை தலவாக்கலை ஹொலிரூட் தோட்ட பாடசாலையில் கற்றார். 1970 ஆம் ஆண்டில் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்து அரசியல் பயணத்தை ஆரம்பித்த அன்னார், கொழும்பு பல்கலைக்கழத்தில் தமது பட்டப்படிப்பினை பூர்த்தி செய்தார். தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் இளைஞர் சேவை அலுவலராக செயற்பட்ட அவர், விடிவு பத்திரிகையின் ஆசிரியராகவும் செயற்பட்டார். 1989 ஆம் ஆண்டு மலையக மக்கள் முன்னணியில் இணைந்தவர், பிரதி தலைவராக பதவி உயர்வு பெற்றதுடன். தமிழ் முற்போக்கு கூட்டணியின் செயலாளராகவும் செயற்பட்டிருந்தார். கொட்டகலை கமர்சியலில் உள்ள அன்னாரின் இல்லத்தில் பூதவுடல் மக்கள் அஞ்சலிக்காக இன்று முதல் வைக்கப்படவுள்ளது. எதிர்வரும் முதலாம் திகதி பிற்பகல் கொட்டகலை கமர்சியல் மயானத்தில் அன்னாரின்…
மஸ்கெலியா விசேட நிருபர்.செ.தி.பெருமாள்.31.05.2023. மஸ்கெலியா பொலிஸ் பிரிவில் உள்ள ஸ்ரஸ்பி தோட்ட குமரி பிரிவில் நேற்று முன்தினம் 12 மணியளவில் அத்தோட்டத்தில் உள்ள சாமிமலை ஓயாவில் நீராட சென்ற 52 வயது உடைய பாலன் தனலெட்சுமி தடுக்கி ஆற்றில் விழுந்து நீரில் மூழ்கி பலியான சம்பவம் இடம்பெற்றது. இவ்வாறு இறந்த நிலையில் இருந்த பெண்ணை மஸ்கெலியா பொலிஸ்சார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக கிளங்கன் ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு சட்ட வைத்திய அதிகாரி முன்னிலையில் பிரேத பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. பிரேத பரிசோதனையின் பின்னர் இறந்த பெண் கடந்த முப்பது ஆண்டுகள் பின் நோயால் பீடிக்கபட்டவர் எனவும் தடுத்து நீரில் விழுந்த போது அவருக்கு பின் ஏற்பட்டு உள்ளது என சட்ட வைத்தியர் தெரிவித்தார். என மஸ்கெலியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி புஷ்பகுமார தெரிவித்தார். பிரேத பரிசோதனையின் பின்னர் அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது.