Author: Thana
சிறுநீரக நோயாளர்களுக்கு டயாலிசிஸ் செய்ய பயன்படுத்தப்படும் செயற்கை சிறுநீரகங்கள் மற்றும் இரத்த நாளங்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது. இதனால் சிறுநீரக நோயாளர்களுக்கு சிகிச்சை அளிப்பதில் சிக்கல்கள் ஏற்படுவதாக வைத்தியர்கள் தெரிவிக்கின்றனர். மேலும், சிறுநீரகம் மற்றும் சிறுநீரக மாற்று சிகிச்சைக்கான தேசிய மையத்தில் (சிறுநீரக மருத்துவமனை) நோயாளிகளுக்குப் பயன்படுத்தப்படும் செயற்கை சிறுநீரகங்கள் மற்றும் இரத்த நாளங்கள் இன்னும் ஒரு வாரத்திற்கு மட்டுமே போதுமானது என்று கூறப்படுகிறது. சிறுநீரக தானம் செய்பவர்களால் சிறுநீரகம் தானம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளதால், மாற்றுத் திறனாளிகள் சிறுநீரக மருத்துவமனைக்கு சிறுநீரகத்தை தானமாக வழங்க வாய்ப்பு உள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. தற்போது இந்நாட்டில் சிறுநீரக நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகவும், மாதாந்தம் நூற்றுக்கும் நூற்றி ஐம்பதுக்கும் இடைப்பட்ட சிறுநீரக நோயாளர்கள் பதிவாகுவதாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
300 இலட்சம் ரூபாவிற்கு விற்பனைக்கு தயாராக இருந்த ஐஸ் போதைப்பொருள் கையிருப்பு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. குறித்த போதைப்பொருள் கையிருப்பு கல்பிட்டியில் கண்டுபிடிக்கப்பட்டதுடன் சந்தேகத்தின் பேரில் 07 பேரும் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபர் மன்னாரில் விசேட பொலிஸ் குழுவினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
நிலவும் மழையுடனான காலநிலை காரணமாக 04 மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி மாத்தறை, இரத்தினபுரி, காலி மற்றும் களுத்துறை ஆகிய மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி அமைப்பின் சிரேஷ்ட புவிசரிதவியலாளர் வசந்த சேனாதீர தெரிவித்தார். இதன்படி, மாத்தறை மாவட்டம், பிடபெத்தர, குறிப்பாக களுபோவிட்டான பிரதேசங்களில் உள்ள மக்கள் அவதானமாக இருக்குமாறு தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் அறிவித்துள்ளது. இதேவேளை, காலி மாவட்டத்தின் நாகொட மற்றும் நெலுவ பிரதேச மக்களுக்கும் களுத்துறை மாவட்டத்தின் வளல்லாவிட்ட, பாலிந்தநுவர, மத்துகம, அகலவத்தை மற்றும் புலத்சிங்கள பிரதேச மக்களுக்கும் மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தேசிய பொசொன் நிகழ்வுக்கு அரசாங்கம் அனுசரணை வழங்கவில்லை என்ற குற்றச்சாட்டு முற்றிலும் பொய்யானது
2023ஆம் ஆண்டு நடைபெறவுள்ள அரச பொசொன் நிகழ்வுக்கும், மிஹிந்தல புனித பூமியை அடிப்படையாகக் கொண்டு நடைபெறும் பொசொன் நிகழ்வுகளுக்கும் அரசாங்கத்தின் அனுசரணை கிடைக்கவில்லை என பல்வேறு தரப்பினரும் குற்றஞ்சாட்டி வருகின்றனர். இது தொடர்பில் புத்த சாசன, மத, கலாச்சார அலுவல்கள் அமைச்சு, பொது நிர்வாக அமைச்சு, உள்நாட்டலுவல்கள் மாகாண சபை உள்ளூராட்சி அமைச்சு, பாதுகாப்பு அமைச்சு, இலங்கை பொலிஸ், அனுராதபுரம் மாவட்ட செயலகம், நீர் வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சு, லேக்ஹவுஸ் நிறுவனம் என்பவற்றிடமிருந்து பெறப்பட்ட தகவல்களின் மூலம் பின்வரும் தகவல்கள் உறுதிப்படுத்தப்பட்டன. 1963 ஆம் ஆண்டு ரஞ்சித் விஜேவர்தனவின் கருத்தின்படி அப்போதைய லேக்ஹவுஸ் நிறுவனம் தனது சமய மற்றும் சமூகப் பணிகளுக்காக லேக்ஹவுஸ் மிஹிந்தல ஆலோக பூஜையை ஆரம்பித்தது. அதன் பின்னர் 59 வருடங்களாக ஆலோக பூஜை, பிரித்ஓதல், பெரஹரா, சைத்தியவிற்கு நிறம்பூசுதல் உள்ளிட்டவற்றுக்கு நிதியுதவி வழங்கப்பட்டு வருகின்றது. 2020 / 2021 கொவிட் சமயத்திலும், 2022…
நாட்டின் பொருளாதாரத்திற்கு நேரடியாகத் தாக்கம் செலுத்தும் வணிக மற்றும் வியாபாரக் கல்வி போன்ற பாடங்களைக் கற்கும் மாணவர்கள் எதிர்காலத்தில் அவை தொடர்பான கோட்பாட்டு அறிவை, நடைமுறையில் தொழில் ரீதியாகப் பயன்படுத்தும் வங்கிகள் போன்ற நிறுவனங்களுக்கு அனுப்பி, நடைமுறை ரீதியான மற்றும் விடய அறிவின் செயன்முறைப் பயன்பாடு தொடர்பான அனுபவத்தை அம்மாணவர்களுக்குப் பெற்றுக் கொடுக்க வேண்டும் என தான் யோசனை முன்வைப்பதாகவும், அதற்கு அவசியமான எழுத்து மூல அனுமதியை சுற்றுநிருபம் ஊடாக வழங்குவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் கல்வி அமைச்சர் பேராசிரியர் சுசில் பிரேம் ஜயந்த தெரிவித்தார். கல்வி அமைச்சு மற்றும் இலங்கை சான்றளிக்கப்பட்ட முகாமைத்துவ கணக்காளர் நிறுவனம் (சி எம் ஏ) இணைந்து ஏற்பாடு செய்த சிறந்த பாடசாலை வர்த்தக சங்கத்தைத் தெரிவு செய்வதற்கான் போட்டியில் வெற்றிபெற்றவர்களுக்காக பண்டாரநாயக்க ஞாபகார்த்த மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற, பரிசு வழங்கும் வைபவத்தில் கலந்துகொண்ட அமைச்சர் தனது உரையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவ்வாறே மிகவும் அனுபவம் வாய்ந்த…
இலங்கையின் பொருளாதாரத்தை சரியான பாதையில் கொண்டு செல்வதற்கான அடிப்படையான சாதகமான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதை பாராட்டுவதாகவும் பிரதி முகாமைத்துவப் பணிப்பாளர் தெரிவிப்பு இந்தக் கடினமான நேரத்தில் இலங்கைக்கு ஆதரவளிப்பதற்கு அதிகபட்ச பங்களிப்பை வழங்க எதிர்பார்ப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) பிரதி முகாமைத்துவப் பணிப்பாளர் கென்ஜி ஒகாமுரா இன்று தெரிவித்தார். முன்தினம் நேற்று (31) பிற்பகல் பாராளுமன்றத்தில் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன உள்ளிட்ட பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவின் உறுப்பினர்களை சந்தித்த போதே அவர் இதனைத் தெரிவித்தார். அத்துடன், இலங்கையின் பொருளாதாரத்தை சரியான பாதையில் கொண்டு செல்வதற்கு பல அடிப்படையான சாதகமான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதை பாராட்டுவதாக கென்ஜி ஒகாமுரா தெரிவித்தார். இந்த இக்கட்டான நேரத்தில் இலங்கைக்கு உதவிகளை வழங்க முன்வந்தமை தொடர்பில் சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் கிறிஸ்டலீனா ஜோர்ஜீவா உள்ளிட்ட பணிப்பாளர்களுக்கு இந்நாட்டின் அரசாங்கம் மற்றும் மக்கள் சார்பாக நன்றிகளைத் தெரிவித்துக்கொள்வதாக சபாநாயகர் சர்வதேச நாணய நிதியத்தின் பிரதி…
தோட்டப்புறங்களது விருத்தி இன்றைய காலத்திலும் மக்களுக்கு ஒரு நிம்மதியற்ற நிலையை காட்டுகிறது என்றால் அதற்கு இடமில்லை என சொல்ல முடியாது. அப்படியான ஒரு தோட்டம் தான் கெல்சி அருகாமையில் உள்ள தங்கக்கலை 03 இலக்க தோட்டம். மெராயா நகரிலிருந்து செல்லக்கூடிய இத்தோட்டத்திற்கு முறையான பாதை வசதிகள் இல்லை தோட்டத்திற்கு செல்ல 1500 ரூபாவுக்கு மேல் முச்சக்கரவண்டிக்கு மாத்திரம் செலவிட வேண்டியுள்ளது. தவிர சுமார் 120 மேற்பட்ட குடும்பங்கள் வாழும் நிலையில் சிறந்த விவசாயத்தை மக்கள் மேலதிக பொருளாதார மேம்படுத்தும் வேலையாக செய்து வருகிறார்கள். ஆக இப்பகுதி மக்களின் பிரதான பெரும் பிரச்சினை 2 கிலோமீற்ர் தூரம் கொண்ட பழுதடைந்த பாதையாகும். இரண்டு பாடசாலைகளுக்கு செல்லும் மாணவர்கள் உள்ளிட்ட பல மக்கள் கெல்சி, மகஎலியா முதலிய பகுதிகளுக்கு செல்லும் இலகு பாதையாக இது அமைகிறது. தோட்டத்துக்கு விடியாத சாபமாக இருக்கும் இப்பிரச்சினைக்கு அவ்வப்போது மாறும் அரசாங்கத்தை மக்கள் எதிர்பார்த்து எதிர்ப்பார்த்து கடத்தப்பட்ட காலமும்,…
போதுமான எரிபொருட்கள் கையிருப்பு இருப்பதால் எரிபொருள் தட்டுப்பாடு குறித்து பொதுமக்கள் பீதியடைய வேண்டாம் என அமைச்சர் காஞ்சன விஜேசேகர கோரிக்கை விடுத்துள்ளார். எரிபொருள் நிலைய உரிமையாளர்கள் மற்றும் விநியோகஸ்தர்கள் எரிபொருளைப் பெற்றுக்கொள்வதில் ஏற்பட்டுள்ள தாமதம் காரணமாகவே இந்த நிலை ஏற்பட்டுள்ளதாகவும் இது குறித்து மக்கள் அச்சமடைய தேவையில்லை எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார். குறைந்தபட்சம் 50% இருப்பு வைத்திருக்க வேண்டும். குறைந்தபட்ச கையிருப்புகளை பராமரிக்காத எரிபொருள் நிலையங்களின் உரிமத்தை மறுபரிசீலனை செய்து இடைநிறுத்துமாறும் CPCயிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக அமைச்சர் காஞ்சன விஜேசேகர குறிப்பிட்டார்.
லங்கா சதொச நிறுவனம் பொதுமக்களுக்கு வழங்கும் சில அத்தியாவசிய நுகர்வுப் பொருட்களின் விலையை மீண்டும் குறைத்துள்ளது. பின்வரும் அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளதாகவும், இன்று (ஜூன் 01) முதல் நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து லங்கா சதொச விற்பனை நிலையங்களிலும் இந்த பொருட்களை ஒரே விலையில் பெற்றுக்கொள்ள முடியும் எனவும் லங்கா சதொச அறிவிப்பு வெளியிட்டுள்ளது. கோதுமை மா 01 கிலோ – ரூ. 210.00 பெரிய வெங்காயம் 01 கிலோ – ரூ. 115.00 சிவப்பு பருப்பு 01 கிலோ – ரூ. 314.00 01 கிலோ வெள்ளை சீனி – ரூ. 229.00 கடலை 01 கிலோ – ரூ. 545.00 வெள்ளை நாடு 01 கிலோ – ரூ. 175.00.
பௌத்தத்தை அவமதித்தமைக்காக நடாசாவை கைது செய்யும் போது ஏனைய மதங்களை அவமதித்த ஞானசாரரை ஏன் கைது செய்ய முடியாது – சந்திரிக்கா கேள்வி
பௌத்தத்தை அவமதித்தமைக்காக நடாசாவை கைது செய்ய முடியும் என்றால் ஏனைய மதங்களை அவமதித்த ஞானசாரரை ஏன் கைது செய்ய முடியாது என முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க டுவிட்டர் பதிவில் கேள்வி எழுப்பியுள்ளார். நடாசா பௌத்தத்தை உள்நோக்கத்துடன் பௌத்தை அவமதித்தமைக்காக கைதுசெய்யப்பட்டார் அவரை கைதுசெய்ய முடியும் என்றால் இஸ்லாமிய மதத்தை அவமதித்த தேவாலயங்களையும் கிறிஸ்தவ வழிபாட்டு இடங்களையும் மசூதிகளையும் எரியூட்டிய ஞானசார தேரர் உட்பட ஏனைய பலரை ஏன் கைதுசெய்ய முடியாது என முன்னாள் ஜனாதிபதி கேள்வி எழுப்பியுள்ளார். முஸ்லீம்கள் தமிழ் பிரஜைகளிற்கு எதிரான வெறுப்புணர்வுபேச்சுக்கள் நடாசாவின் வார்த்தைகளை விட தீயநோக்கம் கொண்டவை எனவும் அவர் தெரிவித்துள்ளார். மருத்துவர் ஷாபிக்கு எதிராக பொய்களை தெரிவித்து நாடு முழுவதும் அதனை பரப்பி நல்லமனிதரின் வாழ்க்கையை அழித்த அயோக்கியர்களிற்கு என்ன நடந்தது எனவும் கேள்வி எழுப்பியுள்ள முன்னாள் ஜனாதிபதி குற்றவாளிகளை கைதுசெய்து தண்டிப்பதற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு இன்னமும் காலம் உள்ளது எனவும் குறிப்பிட்டுள்ளார்.…