Author: Thana

போலி 5000 நாணயத்தாள் கைவசம் வைத்திருப்பதாக மஹியங்கனை பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலை அடுத்து சந்தேக நபரை சோதனைக்கு உட்படுத்திய போது அவரிடம் 5000 ரூபாய் போலி நாணயத்தாள் ஒன்று மீட்கப்பட்டுள்ளது. அத்துடன் லியங்காமண்டிய பழைய மஹியங்கனை வீதியை சேர்ந்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த நபரை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக மஹியங்கனை பொலிஸார் தெரிவித்தனர். ராமு தனராஜா

Read More

அப்புத்தளை விசேட அதிரடிப் படையினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலை அடுத்து பன்வில அம்பகஸ்தோவை பகுதியில் சுற்றிவளைத்து தேடுதலை மேற்கொண்ட போது பயிரிடப்பட்ட 40 கஞ்சா செடிகளை கைப்பற்றியுள்ளனர். இதன்போது 48 வயதுடைய பன்வில பகுதியை சேர்ந்த நபர் ஒருவரும் கைது செய்யப்பட்டார். குறித்த சந்தேக நபரை சோதனைக்கு உட்படுத்திய போது அவரிடம் உலர்ந்த கஞ்சா 510 கிராம் மீட்கப்பட்டுள்ளது. இதன்போது கஞ்சா செடிகள் மற்றும் உலர்ந்த கஞ்சாவுடன் சந்தேக நபரையும் விஷேட அதிரடிப் படையினர் அம்பகஸ்தோவை பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர். சந்தேக நபரிடம் விசாரணைகளை மேற்கொண்டதன் பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக அம்பகஸ்தோவை பொலிஸார் தெரிவித்தனர். ராமு தனராஜா

Read More

லிட்ரோ எரிவாயு சிலிண்டரின் விலையை நாளை (04) முதல் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் முதித்த பீரீஷ் தெரிவித்துள்ளார். இதன்படி, 12.5 KG எடையுள்ள சிலிண்டரின் விலையை சுமார் 300 ரூபாவால் குறைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Read More

இந்தியாவின் ஒடிஸா மாநிலத்தில் இடம்பெற்ற ரயில் விபத்தில் 280இற்கும் அதிகமாார் உயிரிழந்துள்ளர். சம்பத்தில் 900இற்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர். ரயில் விபத்தினால் இதுவரை 280 இற்கும் அதிகமான உயிரிழப்புக்கள் பதிவு செய்யப்பட்டிருப்பதாகவும் இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் சாத்தியம் காணப்படுவதகவும் அதிகாரிகள் கவலை வெளியிட்டுள்ளார்கள். கொல்கத்தாவில் இருந்து சென்னை நோக்கி சென்ற ரயில் ஒடிஸா மாநிலத்தில் பாலாசூர் பிரதேசத்தில் பயணித்துக் கொண்டிருந்த ரயிலோடு நேருக்கு நேர் மோதியமை விபத்துக்கான காரணமாகும். சம்பவத்தில் உயிரிழந்தவர்களுக்கும் காயமடைந்தவர்களுக்கும் இந்திய பிரதமர் நரேந்திர மோதி அனுதாபம் தெரிவித்துள்ளார். சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா பத்து இலட்சம் ரூபா இழப்பீடாக அறிவிக்கப்பட்டுள்ளது. கடுமையான காயங்களுக்கு உள்ளானவர்களுக்கு இரண்டு இலட்சம் ரூபாகவும் சிறு காயத்திற்குள்ளானவர்களுக்கு 50 ஆயிரம் இழப்பீடாக வழங்கப்படும் என்று இந்திய மத்திய அரசாங்கம் அறிவித்துள்ளது.

Read More

இலங்கை எதிர்நோக்கும் மருந்துப் பற்றாக்குறைக்கு மேலதிகமாக மனித வளப் பற்றாக்குறையும் நாட்டின் சுகாதாரத் துறையின் எதிர்காலத்தை மோசமாகப் பாதிக்கும் என வைத்தியர்களின் பிரதான தொழிற்சங்கம் எச்சரித்துள்ளது. “மருந்து மாத்திரமல்ல, அதில் மனித வளம் மற்றும் ஆரோக்கியம்  குறித்த பிரச்சினையும் உள்ளது. வைத்திர்கள் மாத்திரமன்றி சுகாதாரத்துறையில் உள்ள பலரும் இதை கைவிடும் நிலை ஏற்பட்டுள்ளது. ” கடந்த கொவிட் தொற்றின் போது எதிர்கொண்டது போன்ற உயர் தொற்றுநோய் நிலைமை மீண்டும் இந்த நாட்டில் ஏற்பட்டால் அதனை நிர்வகிப்பது இலகுவானதல்ல என அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் பேச்சாளர் வைத்தியர் ஷமல் விஜேசிங்க தெரிவிக்கின்றார். அரச வைத்தியசாலைகளில் கடமையாற்றிய பெருமளவிலான வைத்தியர்கள் மற்றும் விசேட வைத்தியர்கள் தற்போது நாட்டை விட்டு வெளியேறி வருவதாக கடந்த காலங்களில் ஊடகங்கள் தொடர்ச்சியாக செய்தி வெளியிட்டிருந்தன. நாட்டில் தற்போது 111 மருந்துகளுக்கு தட்டுப்பாடு நிலவுவதாக கூறும் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல, பற்றாக்குறைக்கு உடனடி தீர்வை வழங்க அரசாங்கம்…

Read More

ஒருநாள் சேவையின் கீழ், இரண்டு மணித்தியாலங்களில் கடவுச்சீட்டை பெற்றுக்கொள்ளும் முறைமை ஒன்று தயாரிக்கப்பட்டுள்ளதாக குடிவரவு குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது. பத்தரமுல்லையில் இன்று இடம்பெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைத்த குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் கட்டுப்பாட்டாளர் நாயகம் ஹர்ச இலுக்பிட்டிய இதனைத் தெரிவித்துள்ளார். குடிவரவு குடியகல்வு திணைக்களத்தில் சட்டவிரோதமாக பணத்தை பெற்றுக்கொண்டு சிலர் கடவுச்சீட்டுக்களை வழங்கி வரும் சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர் உள்ளிட்ட 19 பேர் அண்மையில் கைது செய்யப்பட்டிருந்தனர். இந்தநிலையில், ஒருநாள் சேவையின் கீழ் இரண்டு மணித்தியாலங்களில் கடவுச்சீட்டை பெற்றுக்கொள்ளும் முறைமை ஒன்று தயாரிக்கப்பட்டுள்ளதாக ஹர்ச இலுக்பிட்டிய தெரிவித்துள்ளார்.

Read More

இலங்கை அணிக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் ஆப்கானிஸ்தான் அணியானது ஆறு விக்கெட்டுகளினால் வெற்றி பெற்றுள்ளது. இலங்கைக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணியானது இலங்கையுடன் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடுகிறது. இன்று காலை 10.00 மணிக்கு ஹம்பாந்தோட்டை, சூரியவெவ மைதானத்தில் ஆரம்பமான முதலாவது ஒருநாள் போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற ஆப்கானிஸ்தான் அணி முதலில் துடுப்பெடுத்தாடுமாறு இலங்கையை பணித்தது. அதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணியும் நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் நிறைவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 268 ஓட்டங்களை மாத்திரம் பெற்றது. 269 என்ற இலக்கினை நோக்கி பின்னர் பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய ஆப்கானிஸ்தான் அணி 46.5 ஓவர்கள் நிறைவில் இலங்கை அணி நிர்ணயித்த வெற்றி இலக்கினை 4 விக்கெட் இழப்புக்கு கடந்தது. ஆப்கானிஸ்தான் அணி சார்பில் அதிகபடியாக இப்ராஹிம் சத்ரான் 98 பந்துகளில் 98 ஓட்டங்களை எடுத்து கசூன் ராஜிதவின் பந்து வீச்சில் ஆட்டமிழந்து சதம்…

Read More

பாணந்துறை பிரதேசத்தில் உள்ள ஆடைத்தொழிற்சாலை ஒன்றில் அண்மையில் இடம்பெற்ற கொலை சம்பவம் தொடர்பில் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 17 வயதுடைய பாடசாலை மாணவர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கைது செய்யப்பட்ட சந்தேகநபரிடம் இருந்து கைக்குண்டு ஒன்றும் மீட்கப்பட்டுள்ளது. கடந்த 31ஆம் திகதி இரவு 23 வயதான இளைஞன் ஒருவரை குறித்த சந்தேகநபர் துரத்தி சென்று வாளால் வெட்டியுள்ளார். இருவருக்குமிடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் மோதலாக மாறியதனால் இந்த சம்பவம் நேர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்தநிலையில், சம்பவம் தொடர்பில் பொலிஸ் அதிகாரிகள் முன்னெடுத்த விசாரணைகளின் அடிப்படையில் சந்தேகநபர் பாணந்துறை தெற்கு பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

Read More

இந்த வாரம் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் எரிபொருள் விநியோகத்தை தொடருமாறு இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் (CPC) மற்றும் சிலோன் பெற்றோலிய சேமிப்பு முனையம் (CPSTL) ஆகிய நிறுவனங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அனைத்து எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கும் போதியளவு இருப்புக்களை வழங்குவதை உறுதி செய்யும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர டுவிட்டரில் தெரிவித்துள்ளார். மேலதிக நேரச் செலவுகளைக் குறைப்பதற்காக கடந்த 4 மாதங்களில் ஞாயிறு மற்றும் பொது விடுமுறை நாட்களில் CPC மற்றும் CPSTL இயங்கவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். அண்மைய விலை திருத்தத்தின் போது விலை குறைப்பு எதிர்பார்த்து கடந்த சனிக்கிழமை முதல் எரிபொருள் நிரப்பு நிலையங்கள் ஒடர்களை வழங்காமையால் தற்போது பல எரிபொருள் நிலையங்களில் எரிபொருள் தட்டுப்பாடு காணப்படுவதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார். “எரிபொருள் நிலையங்களில் குறைந்தபட்ச இருப்புக்களை பராமரிக்காதது, விலை திருத்தத்தின் பின்னர் நுகர்வோரின் உடனடி தேவை அதிகரித்தது மற்றும் எரிபொருள்…

Read More

இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கிடையிலான முதலாவது ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டி இன்று இடம்பெறுகின்றது. ஹம்பாந்தோட்டை மஹிந்த ராஜபக்ஷ விளையாட்டரங்கில் இடம்பெறும் இன்றைய போட்டியில், ஆப்கானிஸ்தான் அணி நாணய சுழற்சியில் வெற்றி பெற்றது. இதற்கமைய, அந்த அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது. இதன்படி, முதலில் துடுப்பாடிய இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 268 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. அணிசார்பில் அதிகபடியாக சரித் அசலங்க 91 ஓட்டங்களையும், தனஞ்சய டி சில்வா 51 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர். பந்துவீச்சில் ஆப்கானிஸ்தான் அணியின் ஃபரீத் ஹகமட் 43 ஓட்டங்களுக்கு 02 விக்கெட்டுக்களையும், பசல்ஹக் பரூக்கி 58 ஓட்டங்களுக்கு 02 விக்கெட்டுக்களையும் கைப்பற்றினர். இந்த இன்னிங்ஸில் மொத்தமாக 17 உதிரி ஓட்டங்கள் வழங்கப்பட்டுள்ளன. இந்தநிலையில், ஆப்கானிஸ்தான் அணி 269 ஓட்டங்கள் என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடி வருகிறது.

Read More