Author: Thana
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, நாட்டு மக்களுக்கு நாளை (01) விசேட உரையாற்றவுள்ளார். இலங்கையின் பொருளாதாரத்தை மீட்டெடுக்க கடந்த ஒன்பது மாதங்களில் அரசாங்கம் மேற்கொண்ட நடவடிக்கைகள் மற்றும் இலங்கை அரசின் சமூக பொருளாதார அரசியல் சீர்திருத்த வேலைத்திட்டத்தின் அடுத்த கட்ட நடவடிக்கை தொடர்பிலும் ஜனாதிபதி அறிக்கையொன்றை வெளியிட உள்ளார். விசேட அறிக்கையொன்றை விடுத்து நாட்டின் இலக்குகளை அடைவதற்கான செயற்பாட்டுப் பிரேரணையையும் ஜனாதிபதி முன்வைப்பார் என்று தெரிவிக்கப்படுகின்றது.
190000 மில்லி லிட்டர் கோடா மற்றும் 5000 மில்லி லிட்டர் கசிப்பு ஆகியவற்றுடன் ஆங்கில ஆசிரியர் ஒருவரும் அவரது சகோதரரும் கைது செய்யப்பட்டதாக மஹியங்கனை பொலிஸார் தெரிவித்தனர். ரிதிமாலியயெத்த பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் ஆங்கில ஆசிரியராக கடமையாற்றும் இந்த ஆசிரியர் மஹியங்கனை திஸ்ஸபுர பிரதேசத்திற்கு கசிப்பு விற்பனை செய்வதாக கிடைத்த இரகசிய தகவலையடுத்து சந்தேக நபர்களை கைது செய்ய முடிந்ததாக பொலிஸார் தெரிவித்தனர். பதுளை பிரிவுக்கு பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் திரு.சுஜித் வெதமுல்ல மற்றும் மஹியங்கனை பொலிஸ் நிலைய பிரதான பரிசோதகர் டபிள்யூ.டபிள்யூ.சி.ஆர்.விஜேரத்ன ஆகியோரின் பணிப்புரையின் பேரில் ஊழல் ஒழிப்பு பிரிவின் பொலிஸ் சார்ஜன்ட் ஜயசேகர (66024) உள்ளிட்ட குழுவினர் இந்த சுற்றிவளைப்பை மேற்கொண்டனர். ராமு தனராஜா
பிரித்தானிய உயர்ஸ்தானிகரின் இராகலை விஜயம்! இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தாணிகர் திருமதி சாரா ஹல்டன் அம்மையார் உத்தியோகபூர்வமற்ற விஜயம் ஒன்றிணை மேற்கொண்டு 2023/05/30 ம் திகதி இராகலைக்கு வருகைத்தந்திருந்தார். இதன்போது பிரித்தானிய நிதி உதவியின் கீழ் செஞ்சிலுவை சங்கத்தினூடாக பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு வழங்கப்பட்ட கொடுப்பனவுகளை பெற்றுக்கொண்ட பயனாளிகளை சந்தித்து கலந்துரையாடி அவர்களின் பிரச்சினைகளை நேரில் கேட்டறிந்தார் .மேலும் பிரித்தானிய நிதியுதவியின் கீழ் செஞ்சிலுவை சங்கத்தினூடாக சென்லேனார்ட் மற்றும் மகா ஊவா தமிழ் வித்தியாலயங்களில் மேற்கொண்டு வரும் சுகாதார மற்றும் உணவு வழங்கும் வேலைத்திட்டங்கள் குறித்து மாணவர்களுடன் மகிழ்ந்துரையாடினார். இந்நிகழ்வு நுவரெலியா செஞ்சிலுவை சங்கத்தின் வழிகாட்டலின் கீழ் இராகலை செஞ்சிலுவை பிரிவினால் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது.
“பல கனவுகளோடு வானில் முதற்தடவையாக பறந்த என்னுடன், என்னுடையகனவுகளும் என்னை விட உயரத்தில் பறந்து கொண்டிருந்தன. அப்பப்பா எத்தனை கனவுகள் முதலில் சொந்தமாக வீடு கட்ட வேண்டும். எனதுபிள்ளைகளுக்கு தேவையான அத்தனை வசதிகளையும் எவ்வித குறைபாடுமின்றி பூர்த்தி செய்ய வேண்டும். கணவருக்கு சொந்த வியாபாரத்தை ஆரம்பிக்க உதவி செய்ய வேண்டும். இப்படி எத்தனை கனவுகள், எத்தனை ஆசைகள் அத்தனையும் அம்மண்ணில் கால் வைத்து இரண்டொரு மாதங்களில் வெடித்துச் சிதறி, இன்று என் குடும்பத்துக்கு சுமையாய் வாழ்ந்து வருகிறேன்”. இது இலங்கையிலிருந்து மத்திய கிழக்கு நாடுகளுக்கு புலம்பெயர் பணிப்பெண்ணாகச் சென்று பல்வேறு இன்னல்களுக்கும் கொடுமைகளுக்கும் சித்திரவைதைகளுக்கும் உள்ளாகி நாடு திரும்பி, இன்றைய பொருளாதார சிக்கலில் சிக்கி சுழன்று கொண்டிருக்கும் குடும்பத் தலைவியான விக்னேஸ்வரியின் கதை. கை, கால்கள் உடைந்த நிலையில் ஓமானிலிருந்து நாடு திரும்பிய விக்னேஸ்வரி 3 பிள்ளைகளின் தாயான 40 வயதுடைய இவர் பதுளை கொள்ளுமண்டி தோட்டத்தைச்- (டொட்லன்ட் டிவிசன்) சேர்ந்தவர்.…
க.பொ.த. சாதாரண தரப் பரீட்சைகளை சுமுகமாக நடத்துவதற்கு கடுமையான திட்டங்களை பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அறிவித்துள்ளார். இது தொடர்பில் அண்மையில் வெளியிடப்பட்ட அறிக்கையில், வெளி தரப்பினர் பரீட்சை வளாகத்திற்குள் பிரவேசிக்க முற்றாகத் தடை செய்யப்பட்டுள்ளதாக வலியுறுத்தப்பட்டுள்ளது. மேலும், பரீட்சைக்குச் சம்பந்தமில்லாத எந்த ஆவணங்களையும் விநியோகிப்பது பிரதானமாக தடைசெய்யப்பட்டுள்ளது. பெற்றோர்கள், பாதுகாவலர்கள் மற்றும் கல்வி அதிகாரிகள் உட்பட அனைத்து பங்குதாரர்களும் இந்த விதிமுறைகளைக் கடைப்பிடித்து பரீட்சை அதிகாரிகளுடன் ஒத்துழைக்குமாறும் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் வலியுறுத்தியுள்ளார்.
வெப்பமான காலநிலை குறித்து வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இக்காலப் பகுதியில் பாதிப்பினை ஏற்படுத்தக்கூடிய அதிகம் வெப்பமான சூரிய ஒளிக் கதிர்களானது உடலில் படுவதுடன் மூலம் கண் பார்வை பாதிக்கும் அபாயம் உள்ளதாகவும் எச்சரிக்கப்படுகிறது. அதன்படி, அந்த பகுதிகளில் உள்ள வெப்பச் சுட்டெண் மற்றும் மனித உடலால் உணரப்படும் வெப்பம் ஆகியவை குறித்து கவனம் செலுத்த வேண்டும் என்றும் வளிமண்டலவியல் திணைக்களம் கூறியுள்ளது.
ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் தொடரின் முதல் இரண்டு போட்டிகளுக்கான 16 பேர் கொண்ட ஒருநாள் அணியை ஸ்ரீலங்கா கிரிக்கெட் அறிவித்துள்ளது. ஒருநாள் தொடரானது எதிர்வரும் ஜூன் 2 ஆம் திகதி ஆரம்பமாகும். மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட இத் தொடரின் அனைத்து போட்டிகளும் ஹம்பாந்தோட்டை, சூரியவெவ மைதானத்தில் நடைபெறும். இலங்கை அணி: தசூன் சானக்க (தலைவர்), பத்தும் நிஸ்ஸங்க, திமுத் கருணாரத்ன, குசல் மெண்டீஸ் (விக்கெட் காப்பாளர் / உப தலைவர்), அஞ்சலோ மெத்தீவ்ஸ், சரித அசலங்க, தனஞ்சய டிசில்வா, சந்தீர சமரவிக்ரம (மேலதிக விக்கெட் காப்பாளர்), சமிக கருணாரத்ன, துஷான் ஹேமானந்த, வனிந்து ஹசரங்க, லஹிரு குமார, துஷ்மந்த சமீர, கசூன் ராஜித, மதீஷ பத்திரன மற்றும் மகேஷ் தீக்ஷன.
சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) பிரதி முகாமைத்துவப் பணிப்பாளர் கென்ஜி ஒகாமுரா இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு நாளை (31) இலங்கை வரவுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார். IMF அதிகாரி தனது விஜயத்தின் போது, இலங்கையின் பொருளாதார ஸ்திரத்தன்மையில் ஏற்பட்டுள்ள அண்மைய மாற்றங்கள் மற்றும் எதிர்காலத்தில் பொருளாதாரத்தை வலுவூட்டுவதற்கான வாய்ப்புகள் குறித்து பல சுற்று கலந்துரையாடல்களை நடத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது. பொருளாதார மீட்சியைத் தடுக்கும் தடைகள் மற்றும் தாமதங்களைக் குறைப்பதற்கான வழிமுறைகள் குறித்த விவாதங்களிலும் அவர் இதன்போது கவனம் செலுத்தவுள்ளார் என்றும் தெரிவிக்கப்படுகிறது.
அதிகரிக்கப்பட்ட எரிபொருள் கோட்டா இன்று (30) நள்ளிரவு முதல் அமுலுக்கு வருகிறது. இதன்படி, மோட்டார் சைக்கிள் மற்றும் முச்சக்கரவண்டிக்கான எரிபொருள் கோட்டா 14 லீற்றராக அதிகரிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். அதனடிப்படையில், பதிவு செய்யப்பட்ட வாடகை முச்சக்கர வண்டிகளுக்கான எரிபொருள் கோட்டா 22 லீட்டராகவும் ஏனைய முச்சக்கர வண்டிகளுக்கான எரிபொருள் கோட்டா 14 லீட்டராகவும் மோட்டார் சைக்கிள்களுக்கான எரிபொருள் கோட்டா 14 லீட்டராகவும் கார்களுக்கான எரிபொருள் கோட்டா 40 லீட்டராகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
மஸ்கெலியா விசேட நிருபர்.செ.தி.பெருமாள்.29.05.2023. முன்னாள் அமைச்சரும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொது செயலாளருமான மறைந்த அமரர். ஆறுமுகன் தொண்டமானின் மறைவோடு இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் பலவீனமடைந்து விட்டது என சிலர் விமர்சனங்களை முன்வைத்தனர். இருந்த போதும் காங்கிரஸ் இன்னமும் பலமாகவே உள்ளது. இதற்கு எமது தற்போதைய அரசியல் சிறந்த சான்று. என்று இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், அமைச்சருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்தார். நுவரெலியா மாவட்டத்தில், உள்ள தலவாக்கலை உப பிரதேச செயலகமும், நோர்வூட் உப பிரதேச செயலகமும் பிரதேச செயலகங்களாக இன்று முதல் தரமுயர்த்தப்பட்டுள்ளன. இந்நிலையில் புதிய தரம் உயர்த்தப்பட்ட பிரதேச செயலகங்கள் திறந்து வைக்கும் நிகழ்வு அமைச்சர் ஜீவன் தொண்டமான் தலைமையில் இன்று இடம் பெற்றது. இந்த நிகழ்வில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தவிசாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான மருதபாண்டி ராமேஸ்வரன், நுவரெலியா மாவட்ட செயலாளர் நந்தன கலபொட, அம்பகமுவ மற்றும் நுவரெலியா பிரதேச செயலாளர்கள், உள்ளுராட்சி மன்ற செயலாளர்கள்,…