Author: Thana

எல்லை தாண்டி மீன்பிடித்த 5 இலங்கை மீனவர்கள் கைது; தூத்துக்குடி, தருவைகுளம் கடலோர பாதுகாப்பு குழும போலீசார் விசாரணை!. தூத்துக்குடியை சேர்ந்த இந்திய கடலோர காவல் படையினர் ‘வஜ்ரா’ என்ற ரோந்து கப்பலில் நேற்று மன்னார் வளைகுடா கடல் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, இந்திய கடல் எல்லைக்குள் 60 மைல் நாட்டிகள் தூரம் இலங்கையைச் சேர்ந்த படகில் மீனவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். இதையடுத்து உடனடியாக கடலோர காவல் படையினர் விரைந்து சென்று, அந்த படகை மடக்கி பிடித்தனர். அப்போது, IMUL A-0635-NBO என்ற படகில் இலங்கை நீர் கொழும்பை சேர்ந்த விக்டர் இம்மானுவேல், ரஞ்சித், ஆண்டனி ஜெயராஜ் குரூஸ், பெனில் மற்றும் படகு ஓட்டுநர் ஆனந்தகுமார், ஆகிய 5 மீனவர்கள் இருந்தனர். இந்திய கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடித்ததாக 5 இலங்கை மீனவர்களையும் கைது செய்து, படகையும் பறிமுதல் செய்தனர். படகையும், 6 மீனவர்களையும் கடலோர காவல்…

Read More

பருத்தித்துறையில் 5.5 கிராம் ஹெரோயினுடன் 16 வயது சிறுமி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். யாழ்.முகாமில் கடமையாற்றிய பொலிஸ் விசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து குறித்த சிறுமியை கைது செய்துள்ளனர். காந்தி ஊரைச் சேர்ந்த 16 வயதுடைய சிறுமி பருத்தித்துறை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார். அவர் இன்று பருத்தித்துறை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார். சம்பவம் தொடர்பில் பருத்தித்துறை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Read More

இலங்கை போக்குவரத்து சபையினால் பாடசாலை மாணவர்களுக்கு வழங்கப்படும் பருவச்சீட்டுக் கட்டணத்தை 25 முதல் 30 சதவீதத்தால் அதிகரிப்பதற்கு போக்குவரத்து அமைச்சு தீர்மானித்துள்ளது. அத்துடன் பாடசாலை பருவச் சீட்டுக்கு மேலதிகமாக பல்கலைக்கழகங்கள் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரிகளுக்கான பருவச் சீட்டுக் கட்டணத்தை அதிகரிப்பதற்கு போக்குவரத்து அமைச்சு தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அம்பாறை பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்துரைத்த போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, புதிய கட்டண அதிகரிப்புக்கு அமையவே, பாடசாலை மாணவர்களுக்காக போக்குவரத்தில் ஈடுபடும் பேருந்துகளை இல்லாது செய்வதா? அல்லது தொடர்வதா? என்பது குறித்து தீர்மானிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Read More

கடந்த வாரம் இந்தியப் பெருங்கடலில் கவிழ்ந்த சீன மீன்பிடிக் கப்பலில் இருந்து ஏழு சடலங்களை இலங்கை நீர்மூழ்கிக் குழுவினர் மீட்டுள்ளனர். சீனப் போக்குவரத்து அமைச்சை மேற்கோள்காட்டி, சி.சி.டி.வி. காட்சிகளுக்கு அமைய கப்பலின் அறையில் இருந்த சடலங்களை இலங்கை நீர்மூழ்கிக் குழுவினர் கண்டுபிடித்து மீட்டுள்ளனர். இலங்கை, அவுஸ்திரேலியா, இந்தியா, இந்தோனேசியா, மாலைதீவு மற்றும் பிலிப்பைன்ஸ் உள்ளிட்ட பல நாடுகள், கடந்த செவ்வாய்கிழமை அதிகாலை சீன தொலைதூர நீர் மீன்பிடிக் கப்பல் “Lupeng Yuanyu 028” கவிழ்ந்ததையடுத்து, காணாமல் போன 39 பணியாளர்களை மீட்கும் முயற்சிகளில் ஈடுபட்டன. சீனாவின் அதிபர் ஜி ஜின்பிங், காணாமல் போன பணியாளர்களை மீட்க முழுவீச்சில் தேடுதல் பணிக்கு உத்தரவிட்டுள்ளார். ஷான்டாங் மாகாணத்தில் உள்ள பெங்லாய் ஜிங்லு ஃபிஷரி கோ லிமிடெட் நிறுவனத்திற்கு சொந்தமான கப்பலே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த சம்பவம் குறித்து நிறுவனம் இன்னும் அறிக்கையை வெளியிடவில்லை. கப்பலில் இருந்த 39 பேரில் – 17 சீனக் குழு…

Read More

ஜூலை 1ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் புதிய மின்சாரக் கட்டணங்கள் ஜூன் 30ஆம் திகதி அறிவிக்கப்படும் என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க இன்று (23) தெரிவித்தார். இலங்கை மின்சார சபையினால் சமர்ப்பிக்கப்பட்ட உத்தேச கட்டண திருத்தம் தொடர்பான இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் பதில் ஜூன் 1ஆம் திகதி பகிரங்கப்படுத்தப்படவுள்ளதுடன், இலங்கை மின்சாரச் சட்டத்தின் 30ஆவது பிரிவு மற்றும் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு சட்டத்தின் 17ஆவது பிரிவின்படி, கட்டண திருத்தம் தொடர்பில், கட்சிகளின் கருத்துக்கள் மற்றும் ஆலோசனைகளுக்கு செவிசாய்க்க வேண்டும் என ஜனக ரத்நாயக்க தெரிவித்தார்.

Read More

மாலியில் மேம்படுத்தப்பட்ட வெடிகுண்டு சாதனம் (IED) வெடித்ததில் இலங்கையைச் சேர்ந்த நான்கு ஐ.நா அமைதி காக்கும் படையினர் காயமடைந்துள்ளதாக சின்ஹுவா செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. அறிக்கையின்படி, ஐ.நா பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டரெஸின் தலைமை செய்தித் தொடர்பாளர் ஸ்டீபன் டுஜாரிக் திங்களன்று காயங்கள் பெரிதாக இல்லை என தெரிவித்துள்ளார். மினுஸ்மா எனப்படும் மாலியில் உள்ள ஐ.நா தூதரகத்தைச் சேர்ந்த அமைதி காக்கும் படையினர் மருத்துவ சிகிச்சை பெற்று வருவதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் ஞாயிற்றுக்கிழமை கிடால் பிராந்தியத்தில் உள்ள டெஸ்ஸாலிட்டில் உள்ள அவர்களின் முகாமுக்கு வடமேற்கே 12 கிமீ தொலைவில் நடந்துள்ளது.குண்டுவெடிப்பு நிகழ்ந்தபோது, ​​அவர்கள் ஒரு கவச வாகனத்தில் ஒரு தளவாட வாகனத் தொடரணிக்கு பாதுகாப்பு அளித்துள்ளனர்.

Read More

லங்கா பிரீமியர் லீக் போட்டிக்கான வீரர்கள் ஏலம் ஜூன் 11ஆம் திகதி கொழும்பில் நடைபெறவுள்ளது. உரிமையாளர்களுக்கான பர்ஸ் 1 மில்லியன் அமெரிக்க டாலர்களாக இருக்கும். லங்கா பிரீமியர் லீக் 2023க்கான நேரடி கையொப்பங்கள் •டேவிட் மில்லர், திசர பெரேரா, மகேஷ் தீக்ஷன – யாழ்ப்பாணம் •பாபர் அஸாம், மதீஷ பத்திரன, சாமிக்க கருணாரத்ன- கொழும்பு •மேத்யூ வேட், குசல் மெண்டிஸ், அவிஷ்க பெர்னாண்டோ – தம்புள்ளை •ஷாகிப் அல் ஹசன், தசுன் ஷானக, பானுக ராஜபக்ஷ – காலி •தப்ரைஸ் ஷம்சி, வனிந்து ஹசரங்க, ஏஞ்சலோ மேத்யூஸ் – கண்டி

Read More

பாடசாலை மாணவிகளை பாலியல் ரீதியில் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டின் பேரில் பொலன்நறுவையைச் சேர்ந்த 41 வயதான தனியார் வகுப்பு ஆசிரியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த ஜனவரி மாதம் முதல் குறித்த சந்தேக நபர் பல தடவை பாடசாலை மாணவிகளை துஷ்பிரயோகம் செய்துள்ளது பொலிஸ் விசாரணைகளில் தெரிய வந்துள்ளது. பாதிக்கப்பட்ட 6 மாணவிகளின் பெற்றோர் பொலனறுவை பொலிஸ் நிலையத்தில் செய்த முறைப்பாட்டையடுத்து விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. பொலனறுவை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின் சந்தேக நபர் விளக்கமற்யலில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

Read More

சிறு போகத்தில் நெல் பயிரிடும் மக்களின் உற்பத்திச் செலவைக் குறைக்கும் நோக்கில் அவர்களுக்கு அவசியமான இரசாயன அல்லது சேதனப் பசளையைக் கொள்வனவு செய்வதற்கு அவசியமான நிதி ஒதுக்கீட்டு நிவாரணத்தை வவுச்சராக வழங்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் வழங்கப்பட்டுள்ள அனுமதிக்கு இணங்க இந்நிதி ஒதுக்கீட்டை வழங்குவதற்கு நடவடிக்கை எடுப்பதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார். அதன்படி நெல் விவசாயம் மேற்கொள்ளும் ஒரு ஹெக்டயர் நிலத்திற்கு 20,000 ரூபா மற்றும் இரண்டு ஹெக்டயர்களுக்கு 40,000 ரூபா வீதம் மானிய நிதி வழங்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. இம்முறை உர மானியத்திற்காக அரசாங்கம் ஒதுக்கீடு செய்துள்ள நிதி 10பில்லியன் ரூபாவாகும். இந்நிதி உதவி வவுச்சராக ஒவ்வொரு விவசாயிக்கும் வழங்குவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இம்முறை சிறுபோக நெல் விவசாயத்தை மேற்கொள்ளும் விவசாயிகள் 6 இலட்சத்து 50ஆயிரம் ரூபாவிற்கு அசேதன அல்லது சேதனப் பசளையை கொள்வனவு செய்ய முடியும் என விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார். அவ்வாறே…

Read More

இலங்கையின் நிலையான மற்றும் தொடர்ச்சியான எரிபொருள் விநியோகத்தை உறுதி செய்யும் வகையில் முன்னணி சர்வதேச எரிபொருள் நிறுவனமான சினோபெக் உடன் ஒப்பந்தம் கைச்சாத்திடும் நிகழ்வு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில் நேற்று (22) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது. மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சின் செயலாளர் எம். பி. டி. யூ. கே. மாபா பதிரனவும் சினோபெக் நிறுவன எரிபொருள் உற்பத்தி மற்றும் விநியோக திணைக்கள முகாமைத்துவப் பணிப்பாளர் சென் சென்க்மிம் (Chen Chengmim) ஆகியோர் ஜனாதிபதி முன்னிலையில் ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டனர். இலங்கையில் நிலவும் அந்நியச் செலாவணி நெருக்கடிக்கு முகங்கொடுக்கும் வகையில் நுகர்வோர் சிரமங்களை எதிர்நோக்காத வகையில் தொடர்ச்சியான எரிபொருள் விநியோகத்தை உறுதி செய்வதற்காக மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சு இந்த முக்கிய நடவடிக்கையை எடுத்துள்ளது. இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் (CPC) மற்றும் லங்கா இந்தியன் ஒயில் கம்பனி (LIOC) ஆகியவை கடந்த காலத்தில் எரிபொருள் ஏற்றுமதிக்கு போதுமான அந்நியச் செலாவணியை…

Read More