Author: Thana

(எஸ்.கணேசன்) பத்தனை ஸ்ரீபாத கல்வியற் கல்லூரியில் பயிற்சி பெறும் சுமார் 92 மாணவர்கள் திடீர் சுகவீனத்துக்குள்ளாகி கொட்டகலை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுள்ளனர். சளி, இருமல் மற்றும் காய்ச்சல் போன்ற நோய் அறிகுறிகள் தென்பட்டதையடுத்து அங்கு பயிற்சி பெறும் மாணவர்கள் வைத்தியசாலைக்கு சென்றுள்ளனர். வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக சென்றவர்களில் 10 பேர் அங்கு தங்கி இருந்து சிகிச்சை பெற்று வருவதாகவும், ஏனையோர் வெளிநோயாளர் பிரிவில் சிகிச்சைக் பெற்றுக் கொண்டு வெளியேறியுள்ளதாகவும் வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அத்துடன் பத்தனை ஸ்ரீபாத கல்வியற் கல்லூரியில் ஏதேனும் வைரஸ் நோய் பரவுகின்றதா என்பது தொடர்பில் பரிசோதனை மேற்கொள்ளுமாறு சுகாதார பரிசோதகர்களுக்கு வைத்தியர் ஆலோசனை வழங்கியுள்ளார். இதனையடுத்து இன்று வைத்தியசாலைக்கு சென்ற சுகாதார அதிகாரிகள் அங்கு பரிசோதனைகளை மேற்கொண்டுள்ளனர். அத்துடன் வைத்தியசாலையில் சிகிச்சை பெறுபவர்களின் இரத்த மாதிரிகளும் பெறப்பட்டுள்ளமை குறிப்பிடதக்கது.

Read More

திரிபோஷ உற்பத்தி நிறுவனத்திற்காக, இறக்குமதி செய்யப்படும் சோளத்திற்கு விதிக்கப்பட்டுள்ள இறக்குமதி வரி, குறைக்கப்பட்டுள்ளது என்று அமைச்சர் ரஞ்சித் சியம்பளாபிடிய தெரிவித்துள்ளார். இதன்படி, சோள இறக்குமதியின் போது சுமத்தப்பட்டுள்ள விசேட வர்த்தக வரி கிலோ ஒன்றிற்கு 75ரூபாவிலிருந்து 25 ரூபா வரை குறைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அவிஸ்ஸாவெல தல்துவ பிரதேசத்தில் கடந்த 20ஆம் திகதி இடம்பெற்ற நிகழ்வொன்றின் போது ஊடகத்திற்குக் கருத்துத் தெரிவித்த அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அங்கு அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்… கடந்த 18ஆம் திகதியிலிருந்து நடைபெறும் இந்த வரிக் குறைப்பு ஏனைய சோள இறக்குமதிக்காக நடைமுறைப்படுத்தப்பட மாட்டாது என்பது குறிப்பிடத்தக்கது. அவ்வாறே திரிபோஷ உற்பத்திக்குப் போதுமானவாறு சோளம் கொண்டுவரப்பட்டதன் பின்னர் எந்த நேரத்திலும் இவ்வரி மீண்டும் அமுல்படுத்தப்படலாம் என்றும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Read More

புஸல்லாவ பொது நூலகத்தில் 18.05.2023 அன்று நாவல்கள் மற்றும் கதைப்புத்தகங்கள் என்பன நூலக பொறுப்பதிகாரர் அவர்களிடம், லங்கா விஷன் எக்சன் பவுண்டேசன் நிறுவத்தின் தலைமையில்  கையளிக்கப்பட்டன. இந்நிகழ்வில், லங்கா விஷன் எக்சன் பவுண்டேசன் நிறுவனத்தின் பணிப்பாளர் திருமதி கீர்த்தனா தர்ஷன் மற்றும் திட்ட ஒருங்கிணைப்பார்களான துரைராஜா பிரசாந்தி, சிவகுமார் விஷாலினி ஆகியோர் கலந்து கொண்டனர்.

Read More

நோர்வூட் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட  எல்பட மேற்பிரிவில் லயன் அறைக்கு முன்பாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஓட்டோவுக்கு தீ வைத்தார் என்றக் குற்றச்சாட்டின் கீழ் தேடப்பட்டுவந்த நபர், ஐந்து மாதங்களுக்குப் பின்னர், ​நோர்வூட் போற்றி தோட்டத்தில் வைத்து ஞாயிற்றுக்கிழமை (21) கைது செய்யப்பட்டார். மேற்படி சந்தேக நபரை, போற்றி தோட்ட மக்கள் மடக்கி பிடித்து தம்மிடம் ஒப்படைத்தனர் என   நோர்வூட் பொலிஸார்  தெரிவித்தனர். இந்த சந்தேகநபர் நபர் பொகவந்தலாவ எல்பட மேல்பிரிவில் பெண்​ணொருவரை காதலித்து வந்துள்ளார். அந்த நபரை திருமணம் முடிக்க, காதலி மறுத்துவிட்டார். இந்நிலையிலேயே, அப்பெண்ணின் வீட்டுக்கு முன்பாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஓட்டோவுக்கு தீவைத்து விட்டு  தலைமறைவாகிவிட்டார். எனினும், தன்னுடைய காதலி, போற்றி தோட்டத்திலுள்ள ஆலயத்துக்கு வருகைதந்ததை அறிந்து, அங்கு விரைந்த சந்தேகநபர், அப்பெண்ணின் கையை பிடித்து இழுத்துள்ளார். இதனை அவதானித்த அந்த மக்கள்,  அவரை மடக்கி பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.  சந்தேக நபர் நோர்வூட் நிவ்வெளி பகுதியை சேர்ந்தவர்…

Read More

03 நாட்களுக்குள் கடவுச்சீட்டு வழங்கும் புதிய முறை அடுத்த மாதம் ஆரம்பிக்கப்படும் என பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்துள்ளார். பொது பாதுகாப்பு அமைச்சில் தற்போது இடம்பெற்றுவரும் ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு அமைச்சர் இதனை தெரிவித்துள்ளார். பிரதேச செயலகங்களில் புகைப்படங்கள் மற்றும் கைரேகைகளை சேகரிக்க மேலும் 50 இடங்கள் சேர்க்கப்பட்டுள்ளதாக அமைச்சர் டிரான் அலஸ் மேலும் தெரிவித்துள்ளார். இதேவேளை, இரண்டு கடவுச்சீட்டுகளுடன் நாட்டிற்குள் பிரவேசித்ததாகக் கூறப்படும் சீனப் பிரஜை இன்று அழைக்கப்படவுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார். சீன தூதரகத்தின் ஆலோசனையுடன் அவர் குறித்த அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் டிரான் அலஸ் மேலும் தெரிவித்துள்ளார்.

Read More

சிலாபம் பிரதேசத்தில் 18 வயதுடைய பாடசாலை மாணவி கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தம்புள்ளை விசேட பணியக அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் மாத்தளை குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. 21 மற்றும் 40 வயதுடைய சந்தேகநபர்கள் மேலதிக விசாரணைகளுக்காக ஹலவத்த தலைமையக பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் இன்று (22) சிலாபம் நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.

Read More

கல்விப் பொதுத் தராதரப் சாதாரண தர பரீட்சை தொடர்பான மேலதிக வகுப்புக்களை நடாத்துதல் நாளை (23) நள்ளிரவு 12 மணி முதல் தடை செய்யப்படுவதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதன்படி, பரீட்சை தொடர்பான மேலதிக வகுப்புகள், விரிவுரைகள், கருத்தரங்குகள் மற்றும் பயிலரங்குகள் நடத்துவதற்கு தடை விதிக்கப்படுவதாக திணைக்களம் தெரிவித்துள்ளது. அதற்கு மேலதிகமாக, மாதிரி வினாக்கள் அடங்கிய வினாத்தாள்களை அச்சிடுதல், விநியோகித்தல், பதாகைகள், கையேடுகள், இலத்திரனியல் அல்லது அச்சிடப்பட்ட ஊடகங்கள் மூலம் பரீட்சை வினாக்களை விளம்பரப்படுத்துதல் முற்றாகத் தடைசெய்யப்பட்டுள்ளது. எந்தவொரு நபரோ அல்லது நிறுவனமோ இந்த உத்தரவை மீறினால் அது குறித்து முறைப்பாடு செய்ய முடியும் என பரீட்சை திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. 2022 ஆம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரண தரப் பரீட்சை நாடளாவிய ரீதியில் 3,568 பரீட்சை நிலையங்களில் மே 29 முதல் ஜூன் 8 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.

Read More

நுவரெலியா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஹவாஎலியா தோட்ட வனப்பகுதியில் விறகு வெட்டுச் சென்ற நபர் ஒருவர் காணாமல் போயுள்ளார். குறித்த நபர் வீடு திரும்பாததையடுத்து நுவரெலியா பொலிஸாருக்கு கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். அந்தப் பகுதியைச் சேர்ந்த 49 வயதுடைய ஒருவரே காணாமல் போயுள்ளார். நேற்று (21) நுவரெலியா பொலிஸ் அதிகாரிகள், இராணுவம் மற்றும் பிரதேசவாசிகள் இணைந்து குறித்த நபரைக் தேடும் நடவடிக்கைகளை வனப்பகுதியில் ஆரம்பித்துள்ளனர். இதன்போது, வனப்பகுதியின் மத்தியில் காணாமல் போனவருக்கு சொந்தமானது என சந்தேகிக்கப்படும் ஒரு ஜோடி காலணிகள் மற்றும் ஒரு ஜெகட் ஒன்றும் கண்டுபிடிக்கப்பட்டது. காணாமல் போன நபர் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை எனவும் பொலிஸ் மோப்ப நாய்களை பயன்படுத்தி தேடுதல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்..

Read More

மேல், சப்ரகமுவ, மத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் காலி, மாத்தறை மற்றும் பொலன்னறுவை மாவட்டங்களிலும் பல இடங்களில் பிற்பகலில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. மேற்கு கரையோரப் பிரதேசங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் காலை வேளையிலும் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. வடக்கு மாகாணத்திலும் அனுராதபுரம் மற்றும் புத்தளம் மாவட்டங்களிலும் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 40 கிலோ மீற்றர் வரையான வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப்பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.

Read More

மத நல்லிணக்கத்தை பாதிக்கும் வகையில் கருத்து வெளியிட்டதன் காரணமாக வெளிநாடு செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ள போதகர் ஜெரோம் பெர்னாண்டோ இன்று (21) இரவு நாடு திரும்பவுள்ளதாக விமான நிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன. இன்று காலை தனது கட்டுநாயக்க மிராக்கள் டோம் மண்டபத்தில் கூட்டமொன்றை நடத்தவுள்ளதாக போதகர் ஜெரோம் முன்னதாக அறிவித்திருந்த போதிலும் பின்னர் அதனை இரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஜெரோம் பெர்னாண்டோவின் அறிக்கை தொடர்பான காணொளி சமூக ஊடகங்களில் பரவியது, இது நாட்டில் பரபரப்பான தலைப்பாக மாறியது. பிற மத நம்பிக்கைகளையும் அவமதிப்பதாக பல்வேறு தரப்பினர் குற்றம் சாட்டினர். இதன்படி, குற்றப் புலனாய்வுப் பிரிவினர் அவரது வாக்குமூலங்கள் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். மேலும் அவருக்கு வெளிநாட்டு பயணத்தடையும் விதித்துள்ளதுடன், அவரது சொத்துகள் குறித்தும் விசாரணை நடைபெற்று வருகிறது. இதேவேளை, போதகர் ஜெரோம் பெர்னாண்டோவுக்குச் சொந்தமான கட்டுநாயக்கவில் இன்று ஆராதனை கூட்டம் நடைபெறவுள்ளதாகவும், பின்னர் அது இரத்துச் செய்யப்பட்டதாகவும் அவர் தனது…

Read More