Author: Thana
தனியுரிமை மற்றும் நல்வாழ்வுக்கு தீங்கு விளைவிக்கும் சமூக ஊடகங்களைக் கையாள்வதற்கு விசேட பிரிவு
ஒரு நபரின் தனியுரிமைக்கும் அவரின் நல்வாழ்வுக்கும் தீங்கு விளைவிக்கும் வகையில் சமூக ஊடகங்கள் செயற்படுமிடத்து, அது தொடர்பில் முறைப்பாடுகள் முன்வைக்கப்பட்டால், அவற்றை உடனடியாக விசாரிப்பதற்கான விடே பிரிவொன்றை பாதுகாப்புப் பிரிவு தாபித்துள்ளது என்று போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுஜன ஊடகத்துறை அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (24) நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். மேலும், குற்றச் செயல்கள், கொலைகள், வன்முறைகள், சிறுவர் துஷ்பிரயோகம், பாலியல் துஷ்பிரயோகம் போன்றன ஊடகங்களால் எவ்வாறு கையாள்வது என்பது குறித்த விசேட ஆலோசனைக் குழுக் கூட்டம் ஒன்று எதிர்வரும் வெள்ளிக்கிழமை பிற்பகல் 01.30 மணிக்கு இடம்பெறவுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார். இந்த ஆலோசனைக் குழுவிற்கு ஊடகவியலாளர்களின் கருத்துக்களும் முக்கியமானது என்றும் அமைச்சர் தெரிவித்தார்.
மொனராகலை விஷேட குற்றத்தடுப்பு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கு அமைய மொனராகலை பேருந்து தரிப்பிடத்தில் சந்தேகத்திற்கு இடமான முறையில் நின்றுகொண்டு இருந்த 4 இளைஞர்களை சோதனைக்கு உட்படுத்திய மொனராகலை குற்றத்தடுப்பு பொலிஸ் பிரிவினர் அவர்களிடம் இருந்து உலர்ந்த கஞ்சா போதைப்பொருள் 1 கிலோ 591 கிராம் கைப்பற்ற பட்டுள்ளது. 23,23,35,28 வயதுடைய நான்கு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த 4 சந்தேக நபர்களையும் இன்றைய தினம் மொனராகலை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக மொனராகலை பொலிஸார் தெரிவித்தனர். ராமு தனராஜா
ஹப்புத்தலை ஒரதரவ பகுதியில் வேனும் பேருந்தும் நேருக்கு நேர் மோதி விபத்து; என்மர் வைத்தியசாலையில் அனுமதி.
ஹப்புத்தலை ஒரதரவ பகுதியில் வேன் ஒன்றும் பேருந்து ஒன்றும் நேருக்கு நேர் மோதி விபத்து வேனில் பயனித்த 8 பேர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் நேற்று மாலை 5.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது நுவரெலியாவில் இருந்து கொஸ்லாந்தை பகுதிக்கு திருமண நிகழ்வுக்கு வந்து மீண்டும் நுவரெலியா திரும்புகையில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளது. வேனில் பயனித்த 8 பேர் காயமடைந்த நிலையில் தியத்தலவை வைத்தியசாலையில் அனுமதிக்கப்ட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர் மேலதிக விசாரணைகளை ஹப்புத்தலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர் ராமு தனராஜா
ராகலையில் நடமாடும் சேவை தேசிய அடையாள அட்டை ,பிறப்பு சான்றிதழ் என்பன இல்லாதவர்கள் பயன்படுத்திகொள்ளலாம்
ராகலை, ராகலை தோட்டம், சென்ட்லேனார்ட்ஸ், சமகிபுர, ரத்னாயகபுர, புருக்சைட், மந்திரிதென்ன, பண்டிதயாகும்புற, செனரத்புர, டெல்மார் கிராம அலுவலர் பிரிவு மக்களுக்கான நடமாடும் சேவை 26 .05 .2023 அன்று அன்று பிரதேச சபை மண்டபத்தில் இடம்பெறுகின்றது. பெற்றுக்கொள்ள கூடிய சேவைகள் 1. தேசிய அடையாள அட்டைகள் தொடர்பான சேவைகள் தேசிய அடையாள அட்டைகளுக்கு புகைப்படம் எடுத்தல், முறைப்பாடுகளின் நகல்களைப் பெறுதல், பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை குறைபாடுகள் இன்றி ஏற்றுக்கொள்தல், முன்னர் சமர்ப்பித்த விண்ணப்பங்களுக்கு அடையாள அட்டைகள் கிடைக்காதது குறித்து விசாரணை செய்தல் போன்ற வசதிகள். 2. பிறப்பு சான்றிதழ் குறித்த பிரச்சினைகளுக்கு தீர்வு. பிறப்பு சான்றிதழ் இல்லாதோர் முன்கூட்டியே இல்லை என்பதை உறுதிப்படுத்துவதற்கான தேடுதல் விளைவு, பிள்ளைகளின் பிறப்பு சான்றிதல்கள், திருமண சான்றிதழ், சகோதரர்களின் பிறப்பு சான்றிதழ் போன்ற ஆவணங்களை தயார் நிலையில் வைத்திருத்தல் வேண்டும். பிறப்பு சான்றிதழ்களில் பிழைகளை திருத்தம் செய்தல். பிறப்பு சான்றிதழ்களை அன்றைய தினம் online ஊடாக…
பதுளை – நமுனுகுல தன்னகும்பர தமிழ் வித்தியாலயத்தின் ஓய்வு அறையில் ஏற்பட்ட தீ விபத்தில் அறையில் இருந்த பொருட்கள் எரிந்து நாசமாகியுள்ளது. இச்சம்பவம் நேற்று மாலை 4.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது. இனந்தெரியாத நபர்களால் குறித்த பாடசாலையில் உள்ள ஓய்வு அறையின் ஜன்னால் கண்ணாடியை உடைத்து அதனூடாக தீப்பந்தம் அறையினுள் வீசப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது. குறித்த அறையில் தீப்பிடித்து அங்கிருந்த கட்டில் போன்ற பொருட்கள் எரிந்து நாசமாகியுள்ள நிலையில் ஊர்மக்கள் சேர்ந்து தீயை அணைத்து நிலமையை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ளனர். சம்பவம் இடம்பெற்ற போது பாடசாலையில் அதிபர் இருக்கவில்லை தீயை அணைத்த பிறகு இன்று 12.30 மணியளவில் பாடசாலைக்கு வந்த அதிபர் சம்பவம் தொடர்பில் செய்தி சேகரிக்க ஊடகவியலாளர்களை அனுமதிக்கவில்லை. இதேவேளை குறித்த பாடசாலையில் இதற்கு முன்னரும் இதே போன்று தீ விபத்து ஏற்பட்டுள்ளதாகவும் இது இப்படியே தொடர்வதாலும் இவ்வாறான ஒரு மோசமான வேலையில் ஈடுபடுவது யாரென கண்டு பிடித்து தருமாறு அப்பிரதேச…
இலங்கைக்கு கடத்துவதற்காக கடலுக்கு அடியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த சுமார் 200 கிலோ கடல் அட்டைகள் பறிமுதல்
இலங்கைக்கு கடத்துவதற்காக கடலுக்கு அடியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த சுமார் 200 கிலோ கடல் அட்டைகள் பறிமுதல்:மரைன் போலீசார் நடவடிக்கை: ராமநாதபுரம் மே 23, https://youtu.be/-kxwErlE66M சட்ட விரோதமான முறையில் கடல் வழியாக இலங்கைக்கு கடத்துவதற்காக கடலுக்கு அடியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த தடை செய்யப்பட்ட சுமார் 200 கிலோ கடல் அட்டைகளை மண்டபம் மரைன் போலீசார் பறிமுதல் செய்ததுடன், கடலுக்கு அடியில் கடல் அட்டைகளை பதுக்கி வைத்த நபர்கள் குறித்து தீவிரமாக தேடி வருகின்றனர். கேரள கடல் பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு சுமார் 2500 கோடி மதிப்பிலான ஐஸ் போதை பொருள் பறிமுதல் செய்யப்பட்டதன் அடிப்படையில் தமிழக டிஜிபி சைலேந்திரபாபு தமிழக கடலோர பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்த உத்தரவிட்டார். அதன் அடிப்படையில் ராமநாதபுரம் மாவட்டம் கடல் பகுதியில் ரோந்து பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று காலை மண்டபம் மரைன் காவல் நிலைய சார்பு யாசர் மௌலானா தலைமையில் போலீசார் மண்டபம்…
கிழக்கு மாகாணத்தில் நிலவும் ஆசிரியர் பற்றாக்குறைக்குத் தீர்வு வழங்கும் நோக்கில் முதல் கட்டமாக 55 பட்டதாரிகளுக்கு கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் அவர்களால் ஆசிரியர் நியமனம் வழங்கப்பட்டது. திருகோணமலை உவர்மலை விவேகானந்தா கல்லூரியில் இந்நிகழ்வு இன்று (23) இடம்பெற்றது. இதன்போது கருத்து வெளியிட்ட ஆளுநர் செந்தில் தொண்டமான், நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியால் போக்குவரத்து கட்டணங்கள் மிகவும் உயர்வாக உள்ளன. இதனால் நியமனம் வழங்கப்பட்டுள்ள பட்டதாரி ஆசிரியர்களுக்கும் அவர்களின் நலன்கருதி இருப்பிடங்களுக்கு அருகாமையில் உள்ள பாடசாலைகளில் வெற்றிடங்கள் இருக்குமானால் அங்கு கடமைக்கு அமர்த்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், நியமனம் பெற்றுள்ள ஆசிரியர்கள் ஒவ்வொருவரும் எதிர்வரும் ஓராண்டில் 10 பட்டதாரி ஆசிரியர்களை உருவாக்கும் வகையில் அர்ப்பணிப்புடன் பணியாற்ற வேண்டும் என்றும் தெரிவித்தார். மேலும் இந்நிகழ்வில் ஆளுநர், பாராளுமன்ற உறுப்பினர் விமலவீர திசாநாயக்க,ஆளுநரின் செயலாளர்,அரச உத்தியோகஸ்தர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
மேற்கு பெருநகர அபிவிருத்தி திட்டத்தை உடனடியாக ஆரம்பிக்குமாறு அதிகாரிகளுக்கு நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க ஆலோசனை வழங்கினார். இத்திட்டத்தின் இறுதி மதிப்பாய்வுக்குப் பிறகு அடுத்தகட்ட பணிகளை 3 மாதங்களுக்குள் மேற்கொள்ளவும் அமைச்சர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். மேற்குப் பெருநகர அபிவிருத்தித் திட்டம் தொடர்பாக அதிகாரிகளுடன் நடைபெற்ற கலந்துரையாடலின் போதே அமைச்சர் இந்த அறிவுறுத்தல்களை வழங்கினார். குறித்த கலந்துரையாடல் நேற்று (22) நகர அபிவிருத்தி அதிகார சபையின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, அண்மையில் நகர அபிவிருத்தி அதிகார சபையின் அதிகாரிகளுடன் நடத்திய சந்திப்பின் போது, மேற்குப் பெருநகர அபிவிருத்தித் திட்டத்தை மீள அமுல்படுத்துவதற்கான பணிகளை ஆரம்பிக்குமாறு அதிகார சபைக்கு பணிப்புரை விடுத்திருந்தார். அதன்படி, இது தொடர்பாக கலந்துரையாடுவதற்காக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க இந்த கலந்துரையாடலை நடத்தினார். மேற்கு பெருநகர அபிவிருத்தித் திட்டம் 2016 இல் தயாரிக்கப்பட்டது. இது சிங்கப்பூர் நகர வடிவமைப்பு நிறுவனத்தால் வடிவமைக்கப்பட்டுள்ளது. கொழும்பு, கம்பஹா மற்றும் களுத்துறை ஆகிய 3 மாவட்டங்களுக்காக இந்த திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது, இதன்…
பேராதனை பல்கலைக்கழக மாணவர்களின் பேரணியின் மீது பொலிஸார் கண்ணீர்ப்புகை மற்றும் நீர்த்தாரை பிரயோகங்களை மேற்கொண்டுள்ளனர். கண்டி பல் மருத்துவ பீடத்திற்கு அருகாமையில் இன்று (செவ்வாய்கிழமை) குறித்த ஆர்ப்பாட்டம் ஆரம்பமாகியிருந்தது. பேராதனை பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இந்த எதிர்ப்பு பேரணியை ஆரம்பித்தமை குறிப்பிடத்தக்கது.
புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் மூன்றரை கிலோ தங்கத்துடன் சுங்கப் பிரிவினரால் இன்று கைது செய்யப்பட்டுள்ளார். இவர் வெளிநாட்டில் இருந்து இலங்கை திரும்பிய போது கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து மூன்றரை கிலோ தங்கத்துடன் கைது செய்யப்பட்டுள்ளார்.